தமிழ்மண் பதிப்பகம்
Appearance
தமிழ்மண் பதிப்பகம் தமிழியல் நூல்களை வெளியிடும் பதிப்பகம் ஆகும். உழை – உயர் - உதவு என்பது இதன் நிறுவன முழக்கம் ஆகும். கோ. இளவழகன் என்பவருக்குச் சொந்தமான இப்பதிப்பகம் சென்னை தியாகராசர் நகரில் அமைந்திருக்கிறது. 19, 20-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து தமிழெழுச்சிக்கு வித்திட்ட தமிழறிஞர்களின் நூல்களை முழுமைப்படைப்புத் தொகுதிகளாக (Complete Works) இப்பதிப்பகம் வெளியிடுகிறது. [1]
வெளியீடுகள்
[தொகு]தமிழ்மணி வெளியிட்டுள்ள நூல்களில் சில:
முழுமைப்படைப்புத் தொகுதிகள்
[தொகு]- பி.இராமநாதன் நூல்கள் - 10 தொகுதிகள்
- முதுமுனைவர் இளங்குமரனார் தமிழ்வளம் – 40 தொகுதிகள்
- இராகவன் நூற்களஞ்சியம் – 13 தொகுதிகள் (சாத்தான்குளம் அ. இராகவன் படைப்புகள்)
- முனைவர் இராசமாணிக்கனார் நூல்கள் – 18 தொகுதிகள்
- உரைவேந்தர் தமிழ்த்தொகை – 28 தொகுதிகள் (ஒளவை சு. துரைச்சாமி படைப்புகள்)
- சதாசிவப்பண்டாரத்தார் ஆய்வுகள் – 10 தொகுதிகள்
- சாமிநாத சர்மா நூல் திரட்டு – 31 தொகுதிகள்
- சாமி சிதம்பரனார் நூற்களஞ்சியம் – 22 தொகுதிகள்
- ந.சி.கந்தையா நூல் திரட்டு – 24 தொகுதிகள்
- நாவலர் சோமசுந்தர பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் – 5 தொகுதிகள்
- நாவலர் நா.மு.வே. நாட்டார் தமிழ் உரைகள் - 24 தொகுதிகள்
- திரு.வி.க. தமிழ்க்கொடை – 26 தொகுதிகள் ( திரு. வி. கலியாணசுந்தரனார் படைப்புகள்)
- பாவாணர் தமிழ்க்களஞ்சியம் – 52 தொகுதிகள் (ஞா. தேவநேயப் பாவாணர் படைப்புகள்)
- பாவேந்தம் – 25 தொகுதிகள் (பாரதிதாசன் படைப்புகள்)
- புலவர் குழந்தைப் படைப்புகள் – 16 தொகுதிகள்
- மறைமலையம் - 14 தொகுதிகள்
- கவியரசர் முடியரசன் படைப்புகள் – 13 தொகுதிகள்
- மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் – 20 தொகுதிகள்
- அறிஞர் க. வெள்ளைவாரணார் – 21 தொகுதிகள்
பேரகராதிகள்
[தொகு]- தமிழிலக்கணப் பேரகராதி – கோபாலையர் – 18 தொகுதிகள்
- யாழ்ப்பாண அகராதி – 2 தொகுதிகள்
- வெள்ளிவிழாத் தமிழ்ப்பேரகராதி – 3 தொகுதிகள்
- ந.சி.கந்தையா அகராதிகள் – 2 தொகுதிகள்
- இளங்குமரனார் அகராதிகள் – 2 தொகுதிகள்
பழந்தமிழ் நூல்கள்
[தொகு]- செல்விலக்கியக் கருவூலம் - 15 தொகுதிகள்
- தொல்காப்பியம் (உரைகளுடன்) – 15 தொகுதிகள்
- பதினெண் கீழ்க்கணக்கு
- முதுமொழிக் களஞ்சியம்
- நீதி நூல்கள் – 2 தொகுதிகள்
காப்பியங்கள்
[தொகு]- ஐம்பெருங்காப்பியங்கள்
வரலாறு
[தொகு]- தமிழகச் சமூகப் பண்பாட்டு வரலாறு – இரு தொகுதிகள்
- தமிழக மொழிப்போர் ஈகியர் வரலாறு
- தமிழக வரலாற்று வரிசை
- தமிழர் வரலாறு (கி.பி.600 வரை) – பி.டி.சீனிவாச ஐயங்கார்
- தமிழர் வரலாற்றுச் சுவடுகள்
- தாய்நில வரலாறு – இரு தொகுதிகள்
தமிழியல் நூல்கள்
[தொகு]- இந்திய நாகரிகத்தில் திராவிடக் (தமிழியக்) கூறுகள்
- உவமைவழி அறநெறி விளக்கம்
- கருணாமிர்த சாகரம் – 7 தொகுதிகள்
- தமிழ்த்தேசியம்
- தமிழுக்குத்தொண்டு செய்த பிறநாட்டு அறிஞர்கள்
- தொன்மைச் செம்மொழி தமிழ் – பி.இராமநாதன்
- பன்னாட்டறிஞர்கள் பார்வையில் தமிழும் - தமிழரும்
ஈழம்
[தொகு]- ஈழம் காக்க ஈகம் செய்த இனக்காப்பு மறவர்கள்
- தமிழீழம் என் தாகம்
- பண்டைத் தமிழீழம்
களஞ்சியம்
[தொகு]- முதுமொழிக்களஞ்சியம் (1-5)
- உவமைவழி அறநெறி விளக்கம் (1 - 3)
வெள்ளச்சேதம்
[தொகு]2015 திசம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் தமிழ்மண் பதிப்பகத்திற்குள்ளும் புகுந்தது. இதனால் ஒன்றரைக்கோடி ரூபாய் மதிப்புள்ள நூல்கள் சேதமடைந்தன. [2]
சான்றடைவு
[தொகு]- ↑ நல்ல தமிழ் நூல்களை வெளியிட்டோம் என்ற மனநிறைவு... - ந.ஜீவா, தினமணி, 2015 சனவரி 4,
- ↑ இந்தவார கலாரசிகன் - வைத்தியநாதன், தினமணி 2015 திசம்பர் 13