தமிழ்நாடு கடல்சார் பயிற்சி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு கடல்சார் பயிற்சி நிறுவனம் என்பது தமிழ்நாடு அரசால் 1998 ஆம் ஆண்டு தூத்துக்குடி நகரில் நிறுவப்பட்டது. கடல்சார் பயிற்சியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும், கடல்சார் துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்குவதற்காகவும், தமிழ்நாடு அரசு இந்நிறுவனத்தை நிறுவியிருக்கிறது. இந்நிறுவனக் கல்வியை உறுதி செய்வதற்காகவும், நிறுவனத்தின் செயல்பாடுகளை மேற்பார்வையிடவும், மத்திய மற்றும் மாநில அரசின் மூத்த அதிகாரிகளை உள்ளடக்கிய ஆட்சிக்குழு ஒன்றையும் தமிழ்நாடு அரசு அமைத்திருக்கிறது.

பொதுமுறை மாலுமி பயிற்சி[தொகு]

இப்பயிற்சி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு ஆறு மாத (25 வாரங்கள்) கால அளவிலான பொதுமுறை மாலுமி பயிற்சி (Pre-Sea Course for General Purpose Rating) வழங்கப்படுகிறது.[1] இந்தியாவில் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்திய அரசின் கப்பல் வணிகத்திற்கான பொது இயக்குநரகம் ஆறு மாத கால அளவிலான இந்த இருப்பிடப் பயிற்சியினை அங்கீகரித்திருக்கிறது. திருமணமாகாத ஆண்கள் மட்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இந்தப் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தூத்துக்குடியிலுள்ள கடல்சார் பயிற்சி நிறுவனத்தில் கருத்தியல் வகுப்புகளும், தூத்துக்குடி, பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிறுவனப் பணிமனையில் தொழிற்பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]