தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி நடத்தப் பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருவையாறு ஆகிய இடங்களில் இசைக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. திருவையாறு எனும் ஊரிலுள்ள இசைக் கல்லூரியில் மட்டும் கலையியல் இளையர் (B.Music), முதுகலை (M.Music) இசைப் பட்டப்படிப்புகள் அளிக்கப்படுகின்றன. இசையியல் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பும் அளிக்கப்படுகிறது. பிற ஊர்களில் உள்ள இசைக் கல்லூரிகளில் இசை குறித்த பட்டயப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

குரலிசை, வயலின், வீணை, மிருதங்கம், புல்லாங்குழல், நாதசுரம், தவில் கடம், கஞ்சிரா, மோர்சிங், கிராமியக் கலை, பரதநாட்டியம் எனும் தலைப்பில் மூன்று ஆண்டுகள் பட்டயப் படிப்புகளும், மேல்நிலை இசைக் கலைமணி, நட்டுவாங்கக் கலைமணி எனும் தலைப்புகளில் இரண்டாண்டு பட்டயப் படிப்புகளும், இசை ஆசிரியர் பயிற்சி எனும் ஓராண்டு பட்டயப் படிப்பும் நடத்தப் பெற்று வருகின்றன.