தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை அதிகார படிநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழீழ விடுதலைப் புலிகள் மரபுவழி படைத்துறையாக பரிமாணித்த ஒரு கரந்தடிப்படை இயக்கம் ஆகும். த.வி.பு களிடம் இறுகிய படைத்துறை தரநிலை ஏற்படவில்லையெனினும், அது உண்டு. அதாவது ஒரு தரத்தில் இருந்து இன்னொரு தரத்துக்கு முன்னேறுவது ஒவ்வொரு சாதாரண போராளியிற்கும் சாத்தியமானதே. இந்நிலை ஆக உயர்மட்ட அதிகார வட்டத்தை(தலைவர்) தவிர்த்து எனலாம்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பதவியினை வே.பிரகாகரன் மட்டுமே வகித்து வந்தார். அதே நேரம் 1993 வரை அவ்வியக்கத்தினது 'உப-தலைவர்' என்ற பதவியினை மாத்தையா என்பவர் வகித்து வந்தார். 1993 இல் அவர் தேசத்துரோகி என புலிகளால் அடையாளம் காணப்பட்டு[1] 1994 இல் மரணதண்டனை விதிக்கப்பட்ட பின்னர் அப்பதவி நிலை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பதவி உயர்வு தகைமை[தொகு]

பன்னாட்டு படைத்துறையில் இருப்பது போன்ற தேர்வு எழுதி ஒரு பதவிக்கு வருவதோ இல்லை பரிந்துரை மூலமாக உயர் பதவிகளுக்கு வருவோ தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருக்கவில்லை. மாறாக ஒவ்வொருவருக்குமான பதவி உயர்வு அவர்களின்

  • சமர்க்கள செயல்கள்
  • சமர்க்கள பட்டறிவு
  • சமர்க்களத்தில் வினையாற்றும் திறன்
  • ஆளுமை

ஆகியவற்றின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டது.

படையணி பதவிநிலைகள்[தொகு]

 சிறப்புத் தளபதி > தளபதி > துணைத் தளபதி > இளநிலை அதிகாரி/கட்டளை அதிகாரி > அணித் தலைவர் > சூட்டணித் தலைவர் > போராளி

மேற்கண்ட பதவி நிலைகள் தெறோச்சி/கணையெக்கி படையணிக்கென வரும்போது அதில் ஒரே ஒரு கூடுதல் பதவிநிலையாக பீரங்கி ஒருங்கிணைப்புத் தளபதி என்ற பதவிநிலையும் இருந்தது.

இப்படியான பதவிகளில் உள்ள படைத்துறை கட்டளையாளர்கள், நிருவாகத் தேவைக்கேற்ப

 பிராந்தியத் தளபதி/கோட்டத் தளபதி > மாவட்டத் தளபதி > வட்டத் தளபதி

என 3 ஆகவும் பிரிக்கப்பட்டிருந்தனர்.

சமர்க்கள பதவிநிலைகள்[தொகு]

இவை பொதுவாக வெளியில் அறியப்பட்டதில்லை. ஆனால் இப்பதவி வகிப்பவர்களில் சிலபேர் படையணிக் கட்டளையாளர்கள்; சில பேர் இதற்கென நியமிக்கப்பட்டவர்கள். இப் பதவிநிலையானது பொதுவெளியில் வெளியிடப்படாதது ஆகும். ஒரு களமுனை தளபதி வீரச்சாவடையும்போது மட்டுமே இப்பதவிநிலை வெளித்தெரியவரும். அவ்வாறு வந்தவை,

 கட்டளைத் தளபதி > துணைக் கட்டளைத் தளபதி > ... தாக்குதல் தளபதி > ... பகுதித் தளபதி >...

ஆகியவனவே.

ஓயாத அலைகள் மூன்று முடிந்த போது விடுதலைப்புலிகளில் படைத்துறை துணைத் தளபதி என்ற பதவி நிலை உருவாக்கப்பட்டு 2008 வரை தொழிற்பட்டது.[2] இதை வகித்தவர் புலிகளின் மூத்த கட்டளையாளர் 'பிரிகேடியர் பால்ராஜ்' அவர்கள் ஆவார். ஆனால் ஒட்டு மொத்த படைத்துறை கட்டளையாளராக வே.பிரபாகரன் தொழிற்பட்டார். பிரிகேடியர் பால்ராஜின் இறப்பிற்குப்பின் இப்பதவி நிலை யாருக்கும் வழங்கப்படாமல் வைக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் படைத்துறை செயலர் என்ற பதவி நிலை உருவாக்கப்பட்டது.[3] இதை 'தமிழேந்தி' அவர்கள் வகித்து வந்தார். 2009 மார்ச் அவரது இறப்பிற்குப் பின்னர் அப்பதவி நிலை நீக்கம் செய்யப்பட்டது.

படைத்துறை தரநிலைகள்[தொகு]

விடுதலைப்புலிகளிடம் என்னதான் கடற்படை மற்றும் வான்பிரிவு ஆகியன இருந்தாலும் இவை அனைத்திலும் பணியாற்றிய போராளிகள் தரைப்படை தரநிலையினையே கொண்டிருந்தனர்; வீரச்சாவின் பின்னரும் அதுவே வழங்கப்பட்டது. இது கடைப்பிடிக்கப்பட்டதற்கான காரணம் புலிகளால் வெளியிடப்படவில்லை. புலிகளின் படைத்துறை தரநிலைகள் இறங்குவரிசையில்:-

மேற்கண்ட தரநிலைகள் யாவும் 1998 ஆம் ஆண்டு வெற்றியுறுதி என்ற ஜெயசிக்குறுயி நடவடிக்கைக்கு எதிரான ஒராண்டு நிறைவு விழாவின் பின்னர் போராளிகளுக்கு அவர்கள் வாழும்போதே தரநிலைகளாக வழங்கப்பட்டன. இவை கேணல் முதல் வீரவேங்கை வரையிலும் வழங்கப்பட்டன. இதற்கு முன்னரான கால கட்டத்தில் இவ்வாறான தர நிலைகள் வழங்கப்பட்டது கிடையாது. ஒரு போராளி இறந்த (புலிகள் மொழியில்:வீரச்சாவு) அடைந்த பின்னரே அவருடைய செயற்பாட்டினையும் வகித்த தலைமைப் பதவியினையும் வைத்து அவருக்கான தரநிலை வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. https://sangam.org/sri-lanka-the-untold-story-chapter-56/
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://dbsjeyaraj.com/dbsj/archives/21513/. 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". https://www.kalaththil.com/single-news.php?id=11&cid=710.