உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழின் சிறப்பு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழின் சிறப்பு
‎தமிழின் சிறப்பு
நூலாசிரியர்கி. ஆ. பெ. விசுவநாதம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைகட்டுரை
வெளியீட்டாளர்பாரி நிலையம்
வெளியிடப்பட்ட நாள்
2003
பக்கங்கள்136

தமிழின் சிறப்பு, கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய நூல். இந்நூலுக்கு கா. அப்பாத்துரை மதிப்புரை எழுதியுள்ளார். தமிழ் மொழியின் சிறப்பியல்புகளை 16 கட்டுரைகளில் விளக்குகிறார். இதன் முதல் பதிப்பு 1969ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது. தனது புத்தகத்தில் 13ஆம் பக்கத்தில்

"அறம் வைத்துப் பாடியுள்ள இக் கலம்பகத்தை கேளாதீர்கள். கேட்டால் தங்களின் உயிரே போய்விடும்" எனப் பாடிய புலவனே கூறித் தடுத்த போதும், அதனை கேட்க விரும்பிய நந்திவர்ம மன்னன் கூறியது என்ன தெரியுமா ?

"தமிழைச் சுவைப்பதன் மூலம் சாவே வரினும் அதனை மகிழ்வோடு வரவேற்பேன்" என்பதே.

என தமிழின் சிறப்பு பற்றி மேற்கோள் காட்டுகிறார்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழின்_சிறப்பு_(நூல்)&oldid=3304646" இலிருந்து மீள்விக்கப்பட்டது