தமிழர் போர்ப்படை வகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழர்கள் பண்டைய காலங்களில் பலவகை போர்ப் படைகளைக் கொண்டிருந்தனர். அவற்றுள் 4 வகைகள் முக்கியமானவை ஆகும். மேலும் அவை பல உட்பிரிவுகளையும் கொண்டிருந்தன'.

பொதுவான படைப்பிரிவுகள்[தொகு]

  • காலாட்படை அல்லது ஆட்படை
மனிதர்களை மட்டும் கொண்ட படைப்பிரிவு
  • குதிரைப்படை அல்லது திரைப்படை
குதிரைகளையும் அதன் மீதமர்ந்து போரிடும் மனிதர்களையும் கொண்ட படைப்பிரிவு
  • யானைப்படை அல்லது கரிப்படை
யானைகளையும் அதன் மீதமர்ந்து போரிடும் மனிதர்களையும் கொண்ட படைப்பிரிவு
  • தேர்ப்படை
தேர்களின் மீதமர்ந்து போரிடும் மனிதர்களை கொண்ட படைப்பிரிவு
  • ஒற்றர் படை
ஒற்றர்களை மட்டும் கொண்ட இரகசிய படைப்பிரிவு.

இவற்றில் முதல் 4 படைகள் நேரடியாக போரில் பங்கு கொள்ளும். ஒற்றர்படையானது எதிரியின் போர்த்திட்டங்களை அறிய உதவும்.

படைகளின் ஆயுதத்தை பொறுத்த வகைப்பாடு[தொகு]

  • விற்படை - வில்லினை ஆயுதமாக கொண்டவர்கள்
  • வேற்படை - வேலினை ஆயுதமாக கொண்டவர்கள்
  • மற்படை - ஆயுதம் இன்றி போராடுவோர்
  • வாட்படை - வாளினை ஆயுதமாக கொண்டவர்கள்

செயல்பாடினைப் பொறுத்த வகைபாடு[தொகு]

  • மூலப்படை அல்லது தொல்படை
வழிவழியாக நாட்டிற்காக போரிடும் வம்சத்தின் வீரர்கள்
  • கூலிப்படை அல்லது விலைப்படை
போர் சமயத்தில் மட்டும் வந்து உதவும் படையினர். இவர்கள் மற்ற நட்பு அரசருக்காகவும் பொருளைப் பெற்றும் போரிடுபவர்கள்.
  • நாட்டுப்படை - நகரிலும் திறந்தவெளியிலும் போரிடுவோர்.
  • காட்டுப்படை - காட்டுப்பகுதியில் போரிடுவோர்.
  • வேளப்படை - அரசரின் அந்தரங்க மெய்காவல் படை. இவர்கள் அரசருக்காக தங்களின் உயிரையும் தருவதாக உறுதிமொழி எடுத்துக் கொள்பவர்கள்.
  • துணைப்படை (reserved battalion)
  • பகைப்படை

உசாத்துணை[தொகு]

  • தமிழர் வீரம் - இரா. பி. சேதுபதிப்பிள்ளை - 1947, அச்சிடப்பட்ட புத்தகம் ISBN: 978-81-8379-408-4
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்_போர்ப்படை_வகைகள்&oldid=2454022" இலிருந்து மீள்விக்கப்பட்டது