தமிழரும் தாவரமும் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழரும் தாவரமும்
நூல் பெயர்:தமிழரும் தாவரமும்
ஆசிரியர்(கள்):முனைவர் கு. வி. கிருஷ்ணமூர்த்தி
வகை:தாவரவியல்
துறை:தமிழர் தாவரவியல்
காலம்:பழைய காலத்தில் இருந்து தற்காலம் வரை
இடம்:இந்தியா
மொழி:தமிழ்
பக்கங்கள்:200
பதிப்பகர்:பாரதிதாசன் பல்கலைக்கழகம்
பதிப்பு:2007

தமிழரும் தாவரமும் என்பது 2007 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழர் தாவரவியல் (Ethnobotany) ஆய்வு நூல் ஆகும். இந்த நூலை முனைவர் கு. வி. கிருஷ்ணமூர்த்தி எழுதியுள்ளார். இந்த நூல் சங்க, சங்கம் மருவிய, பக்தி, நாயக்கர் கால தமிழ் இலக்கியங்களில் உள்ள தாவரங்கள் பற்றிய குறிப்புக்களை துல்லியமாக ஆய்கிறது. இந்த நூலின் படி தொல்காப்பியத்தில் 52 தாவரங்கள், சங்க இலக்கியங்களில் 207 தாவரங்கள், சங்கம் மருவிய இலக்கியங்களில் 185 தாவரங்கள், பக்தி இலக்கியங்களில் 238 தாவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.[1]

இந்த நூலைப் பற்றி நாஞ்சில் நாடன் எழுதிய மதிப்புரையில் "தமிழ் கற்கும் மாணவர்கள், தமிழாசிரியர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், தீவிர வாசகர்கள், படைப்பிலக்கியவாதிகள் அனைவருக்கும் இந்த நூலை வலுவாகப் பரிந்துரைக்கிறேன்" என்று கூறி உள்ளார். [1]

உள்ளடக்கம்[தொகு]

"தமிழகத்தின் இயற்கைச் சூழல், தமிழரின் தாவர அறிவியல் புலமை, தமிழகத்தின் இயல் தாவரங்களும், அயல் தாவரங்களும் தமிழரின் ஆன்மவியலும், வேளாண் மற்றும் தோட்டத் தாவரங்களும் தமிழரும், தாவரங்களும் தமிழர் உணவும், தாவரங்களும் தமிழர் மருந்தும், தமிழகத்தில் தாவரப் பயன்பாடும் தாவரம்சார் தொழில்களும், தமிழகத் தாவரப் பொருட்களின் வணிகம் எனப் பல்வகைத் தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் இந்த நூலில்." உள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 நாஞ்சில் நாடன். (2011). பனுவல் போற்றுதும். திருச்சிராப்பள்ளி: தமிழினி.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழரும்_தாவரமும்_(நூல்)&oldid=1639075" இலிருந்து மீள்விக்கப்பட்டது