தமித அபேரத்ன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமித அபேரத்ன
பிறப்புதமித புதுனி அபேரத்ன
செப்டம்பர் 14, 1975 (1975-09-14) (அகவை 48)
கொழும்பு
செயற்பாட்டுக்
காலம்
1987–தற்காலம் வரை
வாழ்க்கைத்
துணை
லின்டி ஜோன்ஸன் (m.2014)[1]
விருதுகள்சரசவிய சிறந்த நடிகை (2003)
சுமதி சிறந்த நடிகை விருது 2006
வலைத்தளம்
ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Damitha Abeyratne

தமித புதுனி அபேரத்ன (Damitha abeyratne) பிறப்பு 14 செப்டம்பர் 1975) விருதுகள் வென்ற இலங்கையைச் சேர்ந்த தொலைக்காட்சி நாடக நடிகை ஆவார்.[2][3]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

சிதவி முதியன்சலாகே தமித புதுனி அபேரத்ன பண்டார என்பது இவரது முழுப் பெயராகும். இவர் நுகேகொடயில்சமுத்ரா தேவி மகளிர் வித்தியாலயத்திலும், மிலகிரிய சென்ட். பால் மகளிர் பாடசாலையிலும் கல்வி கற்றார்.

பணி[தொகு]

தமித அபேரத்ன 1887 ஆம் ஆண்டு முதன் முதலில் பஸ்ஸே கென மணமாலி என்ற தொலைக்காட்சி நாடகத் தொடரில் அவரது எட்டாவது வயதில் அறிமுகமானார்.

1993 ஆம் ஆண்டு இயக்குனர் ஐ. ஹேவாவசம் இயக்கிய மீ ஹரகா திரைப்படம் தமித அபேரத்ன நடித்த முதல் திரைப்படமாகும். 2003 ஆம் ஆண்டு வெளியான சுலங்கிரில்லி என்ற திரைப்படத்தில் ‘இனோகி சத்யங்கனி’ என்ற குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தமைக்காக சரசவிய சிறந்த நடிகை விருதை பெற்றார்.

தமித அபேரத்ன சிக்னீஸ் சிறந்த நடிகை விருது உட்பட பல விருதுகளை பெற்ற நடிகையாவார். 150 இற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நாடகங்களிலும் சுமார் ஏழு படங்களிலும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.[4][5][6] தன்துபஸ்னமன்னய என்ற தொலைக்காட்சி நாடகத் தொடரிலும், மீ ஹரகா திரைப்படத்திலும் வியத்தகு கதாபாத்திரங்களை ஏற்று நடித்தமைக்காக விருதுகள் கிடைக்கப்பெற்றார்.[7]

சசர சரனி என்ற தொலைக்காட்சி நாடகத் தொடரில் இயக்குனராக அறிமுகமானார். இவர் தயாரிப்பாளராகவும் பணிபுரிகின்றார்.[8]

2004 ஆம் ஆண்டு லின்டி ஜோன்ஸன் என்பவரை மணமுடித்தார்.

திரைப்படங்கள்[தொகு]

இல. இலங்கை சினிமாத் துறையில் இலங்கை திரைப்படங்களின் எண்ணிக்கையை குறிக்கிறது.

வருடம் இல. திரைப்படங்கள் பாத்திரங்கள்
1994 819 மீ ஹரகா சோமா
1999 925 மந்தாகினி
2003 1018 சுலங் கிரில்லி ரதி
2007 1094 நிசல கிரி பொட்டி
2008 1103 ஆதர மீனா பின்னணி பாடகர்
2009 1126 எகமத் எக ரடகே
2010 1138 தக்கின தக்கின மல் மந்தாகினி
2010 1141 சுதுதி நவத என்ன
2010 1142 பம்பர வல்லல குமரி
2010 1144 இர ஹன்டா ஹட
2011 1150 சின்ஹவாலொகநயா சிரிமல் எதன
2011 1160 கமனி
2013 1196 சமனல சந்நவனயா புன்யாவின் தோழி
2014 1201 ரூப்பன்தரன ராதா
2015 1221 மஹரஜா கெமுனு ரோகினி
2015 1228 பிரவகயா பிராண்டோவின் மனைவி
2015 1237 சுகத கொகா
2016 1248 ஜூலை 7 டமித
2016 1255 உளத் எகய பிலத் எகய் ரொசானின் அம்மா
2016 1257 மாயா 3 டி சந்தாவின் வருங்கால மனைவி
TBD பகசிதவதய கந்தி

விருதுகள்[தொகு]

  • 1995 - ஒ.சி.ஐ.சி சிறந்த நடிகை தன்துபஸ்னமனய
  • 1995 - சுவர்ண சங்க சிறந்த நடிகை, மீ ஹரகா
  • 1996 - சரசவிய தகுதி விருது, மீ ஹரகா
  • 2004 - சிறந்த நடிகைக்கான விருது, 8வது டாக்கா சர்வதேச திரைப்பட விழா
  • 2004 - சிறந்த நடிகைக்கான விருது, தமிழ் நாடு சர்வதேச திரைப்பட விழா
  • 2005 - சிறந்த நடிகைக்கான ஜனாதிபதி விருது, சுலங்கிரில்லி
  • 2005 - விஸ்வ கீர்த்தி விருது, இரண்டு சர்வதேச விருதுகளை சுலங்கிரில்ல திரைப்படம் வென்றமைக்காக
  • 2005 - சிறந்த இளம் ஆளுமைக்கான விருது, கலை பங்களிப்புக்கான இலங்கை ஜுனியர் சம்பர்
  • 2006 - சுமதி சிறந்த நடிகைக்கான விருது, கெலிமடல திரைப்படம்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமித_அபேரத்ன&oldid=3557125" இருந்து மீள்விக்கப்பட்டது