தபுண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உபுண்டு க்னூ/லினக்ஸ் இல் சராசரி தமிழ் பயனர் ஒருவருக்கு தேவைப்படும் சகல வசதிகளையும் மென்பொருள் கருவிகளையும் தானாக நிறுவித்தரும் மென்பொருட் பொதியே தபுண்டு ஆகும்.

தபுண்டு என்ற பெயர் தமிழ் உபுண்டு என்பதன் சுருக்கமாகும்.

இப்பொதி மு. மயூரனால் உருவாக்கப்பட்டு 29-11-2006 அன்று வெளியிடப்பட்டது.

கருத்தாக்கம்[தொகு]

உபுண்டு இயங்குதளம் பயன்பாட்டு எளிமையும், விநியோகிக்க வசதியானதாகவும் தமிழ் பாவனைக்கான பல்வேறு ஆதரவுகளையும் கொண்டதாக உள்ளது. இவ்வியங்குதளத்தை பரந்தளவான தமிழ்ப் பயனர் மட்டத்தில் கொண்டு செல்ல, மேலதிக தமிழ் வசதிகளை அவ்வியங்குதளத்தில் நிறுவிக்கொள்ள பின்பற்றப்பட வேண்டிய பல்வேறு சிக்கலான படிமுறைகள் எளிமைப்படுத்தப்படுவது அவசியம். இந்த அடிப்படையிலேயே இவ்வாறானதொரு பொதியின் தேவையும் உருவாக்கமும் உபுண்டு தமிழ்ப் பயனர் ஒருவர் மூலம் நிகழவேண்டியிருந்தது.

கணினியில் தமிழை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும், இலகுபடுத்துவதற்கும் தற்போதுள்ள தெரிவுகளில் மிக எளிமையான ஒன்று உபுண்டு இயங்குதளத்தை நிறுவிக்கொள்வதாகும். இந்த அடிப்படையில் இப்பொதி கணித்தமிழ் பயன்பாட்டை வினைத்திறன் மிக்கதாக்கும் நோக்கத்தினையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. இணைய வசதியை கொண்டிருக்காத கணினி ஒன்றில் உபுண்டுவை பயன்படுத்தும் ஒருவர் தமிழ் வசதிகளை நிறுவிக்கொள்ள எதிர்கொள்ளக்கூடிய சிரமங்களை முற்றாக தீர்த்து வைப்பதையும் இப்பொதி நோக்கமாக கொண்டிருக்கிறது

தபுண்டு நிறுவித்தரும் தமிழ் வசதிகள் அனைத்தையும் உள்ளடக்கி மறுதொகுப்பு செய்யப்பட்ட உபுண்டு இயங்குதள இறுவட்டினை உருவாக்க முடியும் என்றாலும், அது விநியோக வாய்ப்புக்களை மிகக்குறைந்த அளவே கொண்டிருக்கும்.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தபுண்டு&oldid=372451" இருந்து மீள்விக்கப்பட்டது