தனுஷ்கோடி கடற்கரை
தனுஷ்கோடி கடற்கரை இராமேஸ்வரம் தீவின் முனையில் அமைந்துள்ளது.[1] இந்த கடற்கரையில், வங்காள விரிகுடா மற்றும் இந்திய பெருங்கடல் ஆகியவை ஒன்றிணைகின்றன. இப்பகுதி "அரிச்சல் முனை" என்று அழைக்கப்படுகிறது.[2] தனுஷ்கோடி, மூன்றாம் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.[3]
1964 க்கு முன்பு, தனுஷ்கோடி மக்கள் கூட்டம் நிறைந்த நகரமாக இருந்தது. தனுஷ்கோடி கடற்கரை ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்த்தது.1964 ஆம் ஆண்டில், தனுஷ்கோடி ஒரு சூறாவளியால் தாக்கப்பட்டு கிட்டத்தட்ட அழிக்கப்பட்டது. இது ஒரு ஆவி நகரமாகக் கருதப்படுகிறது. சுற்றுலா பயணிகள் பெருமளவில் தனுஷ்கோடி கடற்கரைக்கு வருகை தருகின்றனர்.இந்த கடற்கரையின் பிரதான அம்சங்களாவன: ராம சேது காட்சி முனை, ஆதாம் பாலம் (இந்து புராணங்களின்படி இறைவன் ராமருக்கு குரங்குகளின் படைகளால் (வானரங்களின் படை) கட்டப்பட்டதாக கூறப்படும் பாலம்).[4]
இராமேஸ்வரம் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை[தொகு]
1964 இல் ஏற்பட்ட கடல் கோளால் இராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு சாலை வசதி முற்றிலும் பாதிக்கப்பட்டது. இராமேஸ்வரம் தனுஷ்கோடி புதிய தேசிய நெடுஞ்சாலை 52 ஆண்டுகளுக்குப் பிறகு 27.07.2017 இல் இந்தியப் பிரதமரால் திறந்துவைக்கப்பட்டது. தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலும் 9.5 கி மீ நீளத்திற்குச் சாலைப்பணிகளும் அரிச்சல்முனையில் சாலையையொட்டி 2 கி மீ தொலைவுக்குக் கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் அலைத்தடுப்பு கல்சுவரும் ரூ.65 கோடியே 68 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.[5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ https://scroll.in/article/830499/what-will-you-see-if-you-visit-the-precise-point-where-india-ends-and-sri-lanka-begins
- ↑ http://myrameswaram.com/dhanuskodi-ram-sethu-view-point-rameswaram
- ↑ "தனுஷ்கோடி கடற்கரையில் தினந்தோறும் குவியும் ஜெல்லி மீன்களால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்து?: தடையை மீறி கடலில் குளிப்பதை தடுத்து நிறுத்த கோரிக்கை". இந்து தமிழ். https://tamil.thehindu.com/tamilnadu/article23298969.ece. பார்த்த நாள்: 16 December 2018.
- ↑ http://myrameswaram.com/dhanushkodi-beach-rameswaram
- ↑ "தனுஷ்கோடி புதிய சாலை : பிரதமர் மோடி திறக்கிறார்". தினமலர். http://www.dinamalar.com/news_detail.asp?id=1819693. பார்த்த நாள்: 16 December 2018.