உள்ளடக்கத்துக்குச் செல்

தனியுடைமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தனியுரிமைத் தொழில் (Sole proprietorship)'(தனியார் சொத்து, தனிவியாபாரம்) என்பது ஒரு தொழில் தோற்றுவித்து நடத்தும் முறைமை ஆகும். இங்கு தனிஒருவரினால் மூலதனம் இடப்பட்டு இலாப நட்டங்கள் போன்ற விளைவுகளை அவரே ஏற்கவேண்டி இருப்பதுடன் வியாபாரத்தின் முகாமைக்கும் ( தொழில் நடத்துதலின் மேலாண்மைக்கும்) அவரே பொறுப்பாளியாகவும் காணப்படுவார். இவ் வியாபார (தொழில்) அமைப்பில் உரிமையாளரை நிறுவனத்திலிருந்து வேறாக பிரிக்கமுடியாது. நிறுவனத்தின் பெயரில் காணப்படும் கடன்கள் உரிமையாளரின் கடனாகக் கருதப்படும்.இலங்கை, இந்தியா போன்ற வளர்நிலை நாடுகளில் இத்தகைய தனியுடைமை வியாபார (தொழில்) நிறுவன அமைப்பே அதிகளவில் காணப்படுகின்றது.

பண்புகள்

[தொகு]
  • தனியார்துறை நிறுவனம்
  • வியாபாரத்தில் பங்காளர்கள் எவரும் காணப்படமாட்டார்கள்.
  • வியாபார நிர்வாகத்திற்கு சட்ட ஆளுமை அற்றது.
  • பொறுப்பு வரையறையற்றது (unlimited liability).அ-து கடன் தொடர்பில் முழுப்பொறுப்பும் உரிமையாளரே சாரும்.கம்பனிகள் (கும்பினிகள்), கூட்டு நிறுவனங்களுக்கு பொறுப்பு வரையறுக்கப்பட்டிருக்கும்.
  • முகாமை (மேலாண்மை) தொடர்பான தீர்மான்ங்களை உரிமையாளரே மேற்கொள்ளுவார்.
  • இலாபநட்டங்கள் உரிமையாளர் உரிமையாளருக்கே போய்சேரும்.
  • சட்டக்கட்டுபாடுகள் குறைந்தது. இலகுவாக வியாபாரத்தினை ஆரம்பிக்கலாம்.
  • கணக்கீடுகள் செய்வது இலகுவானது.

தனியுடைமையும் சட்டக்கட்டுப்பாடு மற்றும் அனுமதி பெறலும்

[தொகு]

தனியுடைமை வியாபாரத்தினை (தொழிலை) ஆரம்பிக்க, தொடர்ந்து நடத்த, கலைக்க சட்டவிதிகள் எதனையும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. எனினும் இவ் நிறுவன அமைப்பு முழுமையான சட்ட விலக்குள்ள அமைப்பு என கூறப்படமுடியாது. சில பொதுவான சட்டங்களான நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம், அளவை நிறுவை சட்டம், விலைக்கட்டுப்பாட்டுச்சட்டம், தொழிலாளர்கள் தொடர்பிலான சட்டங்கள், சுற்றுச் சூழல் தொடர்பான சட்டங்கள் என்பன பின்பற்றவேண்டும்.

தனியுடமையில் வியாபாரத்தின் தன்மையினைப்() பொறுத்து இலகுவாக ஆரம்பிக்கமுடியாது.அவற்றிக்கு அனுமதி பெறுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.எடுத்துக்காட்டாக, ஆங்கில மருந்துப் பொருட்கள், நாணயமாற்று வியாபாரம், வானொலி தொலைக்காட்சி சேவை, மதுபானசாலை, உணவுவிடுதி, வெடிமருந்து தயாரிப்பு,போன்ற தொழில்கள் (வியாபாரங்கள்) நிறுவுவதற்கு அரசநிறுவனங்களிடமிருந்து அனுமதிப்பத்திரம் பெறுதல் கட்டாயமாகும்.


தனியுடமையின் இடர்கள்

[தொகு]
  • பெருமளவான மூலதனத்தை திரட்டமுடியாமை.
  • பாரிய தொழில்முயற்சிகளை ஆரம்பிக்கமுடியாமை.
  • பொறுப்புக்கள் வரையறுக்கப்படாமை. தொழில் (வியாபாரம்) முறிவடையுமாயின் உரிமையாளர் சொந்த சொத்துகளையும் இழக்கநேரிடும்
  • ஊழியர்கள் திரட்டுவதில் பிரச்சனைகள் காணப்படும்.
  • வியாபாரம் நீண்டகாலம் நீடித்து இருப்பதில் நிச்சமற்ற தன்மை.
  • நிறுவனம் வளரவளர ஆபத்து(risks) அதிகரிக்கும்.பொறுப்பு வரையறுக்கப்பட்ட கம்பனியாக மற்றுவதன் மூலம் இதனைத்தவிர்க்கலாம்.
  • சட்ட ஆளுமை அற்றது.
  • உரிமையாளருக்கு ஏற்படும் பாதிப்பு தொழிலினை (வியாபாரத்தினை) பாதிக்கும்.
  • போதிய தொழில்நுணுக்க அறிவற்றோரால் வியாபாரம் பிழையாக நடத்திச்செல்லப்படலாம்.

தனியுடைமையின் நன்மைகள்

[தொகு]
  • சிறிய மூலதனத்துடன் இலகுவாக யாரும் ஆரம்பிக்கலாம்.தகுதி,படிப்பு போன்றன அவசியமில்லை.
  • விரைவாகவும்,சுதந்திரமாகவும் தீர்மானங்களை நிறைவேற்றமுடிதல்.
  • இலாபம் மூழுவதும் உரிமையாளரைச் சேரும்.
  • வியாபாரத்தினை கட்டுப்படுத்துவது,வாடிக்கையாளரைப் பேணல் என்பது இலகு.


இவற்றையும் பார்க்க

[தொகு]


வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனியுடைமை&oldid=3134696" இலிருந்து மீள்விக்கப்பட்டது