தனித்தமிழ் கணிதம்
பிறமொழி சொற்களின் கலப்படமின்றி மரபுசார் இலக்கண நெறிகளுக்கு இறுக்கமாக ஒழுங்கி எழுதப்படும் பேசப்படும் தமிழ் மொழியை தனித்தமிழ் என்பர். இதன் நெறியிலேயே மேலை நாடுகளின் கணித அறிவியலை தனித்தமிழ் எழுத்துக்களாலும், எண்களாலும் விளக்கப்படும் கணிதம் தனித்தமிழ் கணிதம் ஆகும். தற்போதைய தமிழ் வழிக் கல்வியில் இவ்வாறான கணித பயிற்சி முறைகள் இல்லை. ஆயினும் சில நூல்களிலும், சில இணைய தளங்களிலும் இது பற்றி காணமுடிகிறது. சில இணையப் பக்கங்களில் சிலப் பகுதிகள் தமிழாகவும், சிலப் பகுதிகள் பிற மொழி கலந்தும் கணிதங்கள் காணப்படுகின்றன. இக்கட்டுரையை தனித்தமிழ் கணித முறைக்காண அணுகுமுறையாகவும் கருதலாம்.
தனித்தமிழ் கணிதமுறை பிற மொழி ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவதையே நோக்கமாக கொண்டது.
தனித்தமிழ் எண்கள்
[தொகு]பண்டைக் கால தமிழரின் கணிதம் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் தெரியாமலே அழிந்துவிட்டது. சில எழுத்தாளர் பண்டைக் கால தமிழரின் கணித முறைகளைப் பற்றி ஆராய்ந்து பல நூல்கள் எழுதியுள்ளனர். பண்டைக் கால தமிழ் எண்களில் சுழியம் இல்லை. ஏனென்றால் அக்கால கணித வளர்ச்சியில் எதிரெண்கள் கிடையாது. ஆனால் இக்கால நவீன கணிதங்களுக்கு எதிரெண்கள் தேவை. ஆகையால், சுழியம் இடப்படுகிறது.
தற்கால தனித்தமிழ் தமிழ் எண்கள் பின்வருமாறு:
- ௧ = 1
- ௨ = 2
- ௩ = 3
- ௪ = 4
- ௫ = 5
- ௬ = 6
- ௭ = 7
- ௮ = 8
- ௯ = 9
- ௦ = 0
தனித்தமிழ் மாறிகளும், மாறிலிகளும்
[தொகு]தனித்தமிழ் மாறிகள்(variables) மெய்யெழுத்துக்களால் எழுதப்படும். உதாரணமாக,
a + b = 5 என்ற சமன்பாட்டை பின்வருமாறு எழுதுவது தனித்தமிழ் கணித சமன்பாடாகும்.
க் + ங் = ௫.
இதில்,
க் - 'a' போன்ற ஒரு மாறி.
ங் - 'b' போன்ற ஒரு மாறி.
௫ - ஐந்தின் மதிப்பு (5).
தனித்தமிழ் கணிதமுறையில் காணப்படும் அனைத்து மெய்யெழுத்துகளும் மாறிகளாகும்.
பை
[தொகு]ஆங்கிலக் கணக்கு முறையில் வட்டக் கணக்கிற்கு பெரும்பாலும் உறுதுணையாக உள்ளது பை (pi) ஆகும். இதனை குறிப்பதற்கு தனித்தமிழில் 'ஃ' என்ற ஆய்தயெழுத்தைப் பயன்படுத்தலாம். ஆகையால்,
ஃ = ௨௨/௭ (pi =22/7).
இலக்கம்
[தொகு]இலக்கம் என்பது ஒன்றுக்கு மெற்பட்ட அல்லது கீழ்பட்ட எண்களை பத்தடுக்கு காரணிகளாய் பிரிப்பதாகும். ஒன்றுக்கும் மேற்பட்ட இலக்கம் மேல்வாய் இலக்கம்; ஒன்றுக்கும் கீழ்பட்ட இலக்கம் கீழ்வாய் இலக்கம்.
குறிப்பு: பழந்தமிழ் கணிதத்தில் உள்ள இலக்கமும், இந்த இலக்கங்களும் அடிப்படையில் வேறுபாடு கொண்டன. பழந்தமிழ் கணிதத்தில் உள்ள கீழ்வாய் சிற்றிலக்கம் இங்கு இல்லை.
இலக்கங்களும், இலக்கங்களின் எண்மதிப்பும், தமிழ்ப்பெயர், முன்னொட்டு ஆகியவை பின்வருமாறு:
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 100 | 1000 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
௧ | ௨ | ௩ | ௪ | ௫ | ௬ | ௭ | ௮ | ௯ | ௰ | ௱ | ௲ |
ஆங்கிலப் பெயர் | தமிழ்ப் பெயர் | தமிழ்ப்பெயரின் படி முன்னொட்டிடல் | இலக்கத்தின் படி முன்னொட்டிடல் | இலக்கமிட்டு தமிழில் சொல்லல் | புதிய தமிழ் பெயர்கள்[சான்று தேவை] | பழந்தமிழ் பெயர்கள் |
---|---|---|---|---|---|---|
yotta | பத்திலட்ச கோடானகோடி | ௰லகோகோ | ௲௮ | எண்படி ஆயிரம் | ஒளி | இருபத்து நான்குப்படி பத்து |
zetta | நூறு கோடானகோடி | ௱கோகோ | ௲௭ | எழுபடி ஆயிரம் | கோள் | இருத்தொருபடி பத்து |
exa | நூறு இலட்சம் கோடி | ௱லகோ | ௲௬ | அறுபடி ஆயிரம் | நிலவு | பதினெட்டுப்படி பத்து |
peta | பதினாயிரம் கோடி | ௰௲கோ | ௲௫ | ஐம்படி ஆயிரம் | விண் | பதினைந்துபடி பத்து |
tera | இலட்சம் கோடி | லகோ | ௲௪ | நாப்படி ஆயிரம் | வான் | பன்னிரண்டுபடி பத்து |
giga | நூறுகோடி | ௱கோ | ௲௩ | முப்படி ஆயிரம் | உச்சி | தொன்படி பத்து |
mega | பத்திலட்சம் | ௰ல | ௲௨ | இருபடி ஆயிரம் | மூப்பு | அறுபடி பத்து |
kilo | ஆயிரம் | ௲ | ௲ | (ஒருபடி)ஆயிரம் | முகடு | முப்படி பத்து |
hecto | நூறு | ௱ | ௱ | நூறு | மிகு | இருபடி பத்து |
deca | பத்து | ௰ | ௰ | பத்து | பெரு | பத்து |
centi | கீழ் பத்து | கீ ௰ | கீ ௰ | கீழ் பத்து | சிறு | இருமா |
deci | கீழ் நூறு | கீ ௱ | கீ ௱ | கீழ் நூறு | இருபடி இருமா | |
milli | கீழ் ஆயிரம் | கீ ௲ | கீ ௲ | கீழ் (ஒருபடி)ஆயிரம் | நுல்லி | முப்படி இருமா |
micro | கீழ் பத்திலட்சம் | கீ ௰ல | கீ ௲௨ | கீழ் இருபடி ஆயிரம் | நூகு | அறுபடி இருமா |
nano | கீழ் நூறுகோடி | கீ ௱கோ | கீ ௲௩ | கீழ் முப்படி ஆயிரம் | நூணு | தொன்படி இருமா |
pico | கீழ் இலட்சம் கோடி | கீ லகோ | கீ ௲௪ | கீழ் நாப்படி ஆயிரம் | நுணி | பன்னிரண்டுபடி இருமா |
femto | கீழ் பதினாயிரம் கோடி | கீ ௰௲கோ | கீ ௲௫ | கீழ் ஐம்படி ஆயிரம் | நும்மி | பதினைந்துபடி இருமா |
atto | கீழ் நூறு இலட்சம் கோடி | கீ ௱லகோ | கீ ௲௬ | கீழ் அறுபடி ஆயிரம் | இம்மி | பதினெட்டுபடி இருமா |
zepto | கீழ் நூறு கோடானகோடி | கீ ௱கோகோ | கீ ௲௭ | கீழ் எழுபடி ஆயிரம் | மும்மி | இருபத்தொருபடி இருமா |
yocto | கீழ் பத்திலட்ச கோடானகோடி | கீ ௰லகோகோ | கீ ௲௮ | கீழ் எண்படி ஆயிரம் | அணு | இருபத்துநான்குபடி இருமா |