தண்ணீர் தேசம்
Appearance
தண்ணீர் தேசம் | |
---|---|
நூல் பெயர்: | தண்ணீர் தேசம் |
ஆசிரியர்(கள்): | வைரமுத்து |
வகை: | கவிதை நாவல் |
துறை: | அறிவியல் உண்மைகள் |
மொழி: | தமிழ் |
தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அறிவியல் உண்மைகள் இப்புத்தகத்தில் எளிய கவிதை நடையில் விவரிக்கப் பட்டுள்ளன.
இக் கதையின் கதாநாயகன் கலைவண்ணன், நாயகி தமிழ்ரோஜா. கலைவண்ணன் ஒரு புரட்சிகரமான பத்திரிகை நிருபராகவும், தமிழ்ரோஜா ஒரு பணக்கார குடும்பத்து பெண்ணாகவும், இவர்களின் காதலையும், ஊடலையும் சொல்லும்போது கடல், தண்ணீர் பற்றிய அறிவியல் விவரங்களும் எடுத்துரைக்கப் பட்டுள்ளன. மீனவர்கள் வாழ்வியல் பற்றியும் பல விவரங்கள் தொகுக்கப் பட்டுள்ளன.