தண்டி கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தண்டியில் மகாத்மா காந்தியின் நினைவுச்சின்னம்

தண்டி கடற்கரை (Dandi Beach) இந்தியாவின் குசராத்து மாநிலம் தண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு முக்கியமான கடற்கரையாகும்.[1] அரேபிய கடலில் உள்ள தூய்மையான கடற்கரைகளில் தண்டி கடற்கரையும் ஒன்றாகக் கருதப்படுகிறது. மகாத்மா காந்தி சபர்மதி ஆசிரமம் (அகமதாபாத்) முதல் தண்டி வரை உப்பு சத்தியாகிரகத்தை வழிநடத்தியதால் தண்டி கடற்கரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரையாக புகழ் பெற்றது. இந்த கடற்கரை ஓரத்தில்தான் மகாத்மா காந்தி உப்பு வரி சட்டத்தை எதிர்த்து உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தினார். .

காந்தியின் நினைவுச்சின்னங்கள்[தொகு]

இந்தியாவின் வரலாற்றில் தண்டி கடற்கரையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதற்காக மகாத்மா காந்தியடிகளின் இரண்டு நினைவுச்சின்னங்கள் தண்டி கடற்கரையில் வைக்கப்பட்டுள்ளன. ஒரு நினைவுச்சின்னம் காந்தி உப்பு சட்டத்தை மீறிய வெற்றியை நினைவுகூரும் இந்தியா வாயில் போன்றது. அடுத்த நினைவுச்சின்னம் உப்புச் சேற்றைப் பிடித்திருக்கும் காந்தி சிலை. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2018-09-19 அன்று பரணிடப்பட்டது.
  2. https://www.tripadvisor.in/LocationPhotoDirectLink-g1389100-d9681918-i1656283.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டி_கடற்கரை&oldid=3348595" இருந்து மீள்விக்கப்பட்டது