தண்டியா கிளர்ச்சி
Appearance
தண்டியா கிளர்ச்சி (Dundiya rebellion) என்பது 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் போர்புகனின் களத்தில் (பிளவுபடாத காமரூபப் பகுதி) அகோம் பேரரசிற்கு எதிரான எழுச்சியாகும். கிளர்ச்சிக்கு ஹரதுட்டா புஜார்பருவா தலைமை தாங்கினார்.[1] திருப்பித் தாக்கப்படுவதற்கு முன்பாகவே, இவர் கூலிப்படை துருப்புக்களுடன், வடக்கு காமரூபத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்தார். அசாமின் மேல்பகுதியில் மொமோரியா கிளர்ச்சி நடந்து கொண்டிருந்ததைப் போலவே இந்த கிளர்ச்சியும் நடந்தது. ஆனால் அகோம் அரசவாதிகள் 1792இல் கேப்டன் வெல்ஷால் மீட்டெடுக்கப்பட்டனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Baruah, S. L. (1993). Last Days of Ahom Monarchy. Munshiram Manoharlal Publishers Pvt Ltd, New Delhi.