தஞ்சாவூர் கேசவதுதீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜ கோபுரம்

தஞ்சாவூர் கேசவதுதீசுவரர் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் வடக்கு வாசல் பகுதியில் உள்ள சிரேஸ் சத்திரம் சாலையில் அமைந்துள்ளது.

மூலவர்[தொகு]

இக்கோயிலின் மூலவராக கேசவதீசுவரர் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார். தெற்கு நோக்கிய நிலையில் ஞானாம்பிகை உள்ளார். மூலவராக கேசவதீஸ்வரர் இருந்தபோதிலும் இக்கோயிலை வடபத்திர காளி கோயில் என்றே அழைக்கின்றனர்.

கோயில் அமைப்பு[தொகு]

மூலவர் விமானம்

இக்கோயில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம், மண்டபம், கருவறையுடன் கூடிய விமானத்துடன் அமைந்துள்ளது. மண்டப நுழைவாயிலின் வலது புறம் மகா கணபதி சன்னதியும், இடது புறம் குபேர சாஸ்தா சன்னதியும் உள்ளன. மண்டபத்தில் மூலவர் சன்னதிக்கு முன்பாகவும், அம்மன் சன்னதிக்கு முன்பாகவும் நந்தியும், பலிபீடமும் உள்ளன. மூலவர் சன்னதிக்குப் பின்புறம் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், கஜலட்ஜமி ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் மண்டபம் உள்ளது. மண்டபத்தின் முதல் சன்னதியாக நாகர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. மூலவர் கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடி காணா அண்ணல் துர்க்கை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் முருகன், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. அருகே பைரவர் உள்ளார்.

வடபத்திர காளியம்மன்[தொகு]

திருச்சுற்றில் வடக்கு நோக்கிய சன்னதியில் வடபத்திர காளி காணப்படுகிறார். நின்ற நிலையில் எட்டு கரங்களுடன் அம்மன் காணப்படுகிறார். காளியை மகிசாசுரமர்த்தினி என்றும், வீரபத்திர காளி என்றும் அழைக்கின்றனர்.

குடமுழுக்கு[தொகு]

ஏவிளம்பி வருடம் ஐப்பசி மாதம் 10ஆம் நாள் 27 அக்டோபர் 2017 வெள்ளிக்கிழமை அன்று இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. வடபத்திர காளியம்மன் கோயில் குடமுழுக்கு, தினமணி, 28 அக்டோபர் 2017