தசாங்கப்பத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தசாங்கப்பத்து என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும் வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் அழைக்கப்படும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். தசாங்கம் என்பது, தசம், அங்கம் என்னும் இரண்டு வடமொழிச் சேர்க்கையால் உருவானது. தசம் என்பது பத்து என்னும் பொருள் கொண்டது அங்கம் என்பது உறுப்பு. எனவே தசாங்கம் என்பது பத்து உறுப்புக்கள் எனப் பொருள்படும். மலை, ஆறு, நாடு, ஊர், மாலை, யானைப்படை, குதிரைப்படை, கொடி, முரசு, செங்கோல் எனும் பத்தும் அரசுக்கு உரிய உறுப்புக்களாகும். இப் பத்து உறுப்புக்களையும் பத்து நேரிசை வெண்பாக்களால் பாடுவதே தசாங்கப்பத்து ஆகும்[1].

பிரபந்தத் திரட்டு என்னும் இலக்கணநூல் இதனைத் தசாங்க வன்னிப்பு எனக் குறிப்பிடுகிறது. வன்னிப்பு என்பது வருணனை.

குறிப்புகள்[தொகு]

  1. நவநீதப் பாட்டியல், பாடல் 40

உசாத்துணைகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தசாங்கப்பத்து&oldid=1562384" இருந்து மீள்விக்கப்பட்டது