உள்ளடக்கத்துக்குச் செல்

தக்கீசு அணை

ஆள்கூறுகள்: 13°20′40″N 38°44′43″E / 13.34444°N 38.74528°E / 13.34444; 38.74528
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தக்கீசு அணை
தக்கீசு அணை
தக்கீசு அணை is located in Ethiopia
தக்கீசு அணை
Location of தக்கீசு அணை in Ethiopia
அதிகாரபூர்வ பெயர்Tekeze Dam
நாடுஎத்தியோப்பியா
அமைவிடம்எத்தியோப்பியா
புவியியல் ஆள்கூற்று13°20′40″N 38°44′43″E / 13.34444°N 38.74528°E / 13.34444; 38.74528
நிலைசெயல்பாட்டில் உள்ளது
கட்டத் தொடங்கியது1999
திறந்ததுபிப்ரவரி 2009
கட்ட ஆன செலவு$360 மில்லியன்
உரிமையாளர்(கள்)எத்தியோப்பியா அரசாங்கம்
அணையும் வழிகாலும்
வகைவளைவு அணை
தடுக்கப்படும் ஆறுதக்கீசு ஆறு
உயரம்607 அடி (185 m)
நீளம்2,329 அடி (710 m)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு9.0 km3 (7,300,000 acre⋅ft)
மின் நிலையம்
சுழலிகள்4 x 75 மெகாவாட் (101,000 குதிரை திறன்)
நிறுவப்பட்ட திறன்300 மெகாவாட் (400,000 குதிரை திறன்)

தக்கீசு அணை (Tekeze Dam) என்பது எத்தியோப்பியாவின் வட திக்ரே மாகாணத்திலுள்ள வளைவு அணையாகும். இது நைல் ஆற்றின் துணை ஆறாகிய ஆழமான பள்ளத்தாக்குகள் வழியே பாயும் தக்கீசு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. 2009 பிப்ரவரி மாதம் பயன்பாட்டு வந்த 188 மீட்டர் உயரம் உடைய இவ்வணையே ஆப்பிரிக்காவின் உயரமான அணையாகும்.[1] இதற்கு முன்பு 185 மீட்டர் உயரமுடைய லெசோத்தோ நாட்டு கட்சே வளைவு அணையே ஆப்பிரிக்காவின் உயரமான அணையாக இருந்தது. தொடக்கத்தில் 224 மில்லியன் அமெரிக்க டாலரில் கட்டி முடிக்கப்படத் திட்டமிட்டிருந்த இவ்வணை பல்வேறு காரணங்களால் இறுதி செலவு 350மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் ஆனது.[2][3]இது சீன ஒத்துழைப்புடன் கட்டப்பட்ட அணையாகும்.

இதுவே எத்தியோப்பியாவின் பொதுப்பணித்துறை செயல்படுத்திய பெரிய திட்டமாகும். இதிலிருந்து 300 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதற்காக நான்கு 75 மெகாவாட் டர்பைன்கள் பயன்படுத்தப்படுகின்றன[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Hydro power in Ethiopia – the staged construction of Tekeze Arch Dam". International Water Power & Dam Construction. பார்க்கப்பட்ட நாள் 16 March 2017.
  2. Work starts on giant Ethiopian dam
  3. Tekeze hydro project among Power Engineering Projects of the Year
  4. Tekeze project inaugurated in Ethiopia
"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்கீசு_அணை&oldid=3311142" இலிருந்து மீள்விக்கப்பட்டது