தகவல் மற்றும் நூலக வலைப்பின்னல் மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தகவல் மற்றும் நூலக வலைப்பின்னல் மையம் (Information and Library Network Centre) என்பது மத்திய மனிதவள மேம்பாடு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழக மானிய குழுவின் மூலம் பல்கலைக்கழகமிடையில் தன்னாட்சியாக செயல்படும் ஒரு மையம் ஆகும். இதைச் சுருக்கமாக INFLIBNET என்ற ஆங்கில எழுத்துகளில் குறிப்பிடுவர். குசராத்தில் உள்ள காந்திநகரில் இம்மையம் அமைந்துள்ளது. பல்கலைக்கழகமிடை வானியல் மற்றும் வானியற்பியல் துறையின் செயல்பாடுகளை இலக்காக்க் கொண்டு 1991 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் ஒரு தேசிய செயல் திட்டமாக இது ஆரம்பிக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு சூன் மாத்த்தில் இம்மையம் சுதந்திரமான பல்கலைக்கழகமிடை மையமாக மாறியது. இந்தியாவில் உள்ள பல்கலைக்கழக நூலகங்களை நவீனமயமாக்கி அவற்றை ஒருங்கிணைப்பது என்ற முனைப்பில் இம்மையம் செயல்படுகிறது.

இவற்றுடன் நாட்டிலுள்ள தகவல் தொழில்நுட்ப மையங்களையும் மையம் இணைக்கின்றது. தேசிய அளவிலான அதிவேக தரவு வலைப்பின்னல் மூலம் தகவல் தொழில்நுட்ப கலை நுட்பங்களைப் பயன்படுத்தி, தகவல்களை மிகவும் பயனளிக்கும் அளவுக்கு உகந்த கருவியாக பயன்படுத்தவும் இம்மையம் திட்டமிடுகிறது. இந்தியாவின் கல்வியாளர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் இடையில் ஆக்கபூர்வமான தகவல்தொடர்பை ஊக்குவிப்பதில் ஒரு முக்கிய பங்களிக்கும் அமைப்பாக செயல்படுகிறது.

மையத்தின் முக்கிய நடவடிக்கைகள்[தொகு]

இந்தியப் பல்கலைக்கழகங்களின் நூலக சேவையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களைத் தீட்டி அவற்றை செயல்படுத்துவது மையத்தின் பணியாகும். அவை,

  1. . பல்கலைக்கழக நூலகங்களை தானாக இயங்கும் நூலகங்களாக மாற்ற நிதி உதவி அளித்தல்
  2. இந்தியாவில் அமைந்துள்ள பல்வேறு நூலகங்களில் உள்ள மூலங்களின் சமகால தரவுகளை மேம்படுத்தல்
  3. ஒருங்கிணைந்த நூலக மேலாண்மை மென்பொருளை உருவாக்கி மேம்படுத்துதல் SOUL (Software for University Libraries) பரணிடப்பட்டது 2018-11-13 at the வந்தவழி இயந்திரம்[1]
  4. பல்கலைக்கழக மானியக் குழு இனையதள இணைப்புத் திட்டம்.
  5. சோத்கங்கா, சோத்கங்கோத்ரி போன்ற ஆராய்ச்சி முன்னுரிமைத் திட்டங்கள்
  6. ஆய்வும் விருத்தியும் தொடர்பான திட்டங்கள் உருவாக்குதல்
  7. ஆய்வாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் தரவுகளை பராமரிப்பது
  8. நூலகவியில், தகவல் தொடர்பியல், ஊடகவியல் தொடர்பான பயிற்சிகள் நட்த்துவது போன்றவையாகும்.

வெளியீடுகள்[தொகு]

ஒரு காலாண்டிதழ் மற்றும் ஓர் ஆண்டாய்வு முதலிய இரண்டு வெளியீடுகளை மையம் அளிக்கிறது,

மேற்கோள்கள்[தொகு]

  1. "Home page of SOUL". Archived from the original on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2019-01-03.

புற இணைப்புகள்[தொகு]