உள்ளடக்கத்துக்குச் செல்

தகவல்நுட்ப பொருட்கள் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அலகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தகவல்நுட்ப பொருட்கள் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அலகு
வகைபொது/ஆராய்ச்சி நிறுவனம்
அமைவிடம், ,
வளாகம்நகரம்
சேர்ப்புஅறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம்
இணையதளம்http://www.urdip.res.in

தகவல்நுட்ப பொருட்கள் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அலகு (Unit for Research and Development of Information Products) என்பது இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் செயல்படும் நிறுவனமாகும். இந்நிறுவனம் மகாராட்டிர மாநிலம் புனே நகரில் அமைந்துள்ளது.[1][2]

இந்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் தகவல் தயாரிப்புகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான சிறப்புச் சேவை அலகாக இது உள்ளது. இது அறிவுசார் சொத்து மற்றும் தொழில்நுட்ப வணிக தகவல் சேவைகளை வழங்குவதன் மூலம் ஆராய்ச்சி திட்டங்களின் முன் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு முந்தைய கட்டத்தில் கவனம் செலுத்துகிறது.

சேவைகள்

[தொகு]

தொடக்கநிலை-நிறுவனங்கள், சிறிய மூலதன நிறுவனங்கள், மன்றத்தின் உள்ளேயும் வெளியையும் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள், இந்திய பெரும் வணிக மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் உட்படப் பரந்த அளவிலான வாடிக்கையாளர்களுக்கு மதிப்புக் கூட்டப்பட்ட தகவல் சேவைகளை இந்த நிறுவனம் வழங்குகிறது. இதன் முதன்மை வாடிக்கையாளர்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, சட்டப்பூர்வமான, புதிய வணிக மேம்பாடு உள்ளிட்ட பலபணிகளை மேற்கொள்கின்றது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]