உள்ளடக்கத்துக்குச் செல்

டோக்கியோ மியாவ் மியாவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோக்கியோ மியாவ் மியாவ்

கொடன்ஷா என்பவரால் டோக்கியொ மியாவ் மியாவின் முதல் தொகுதி ஜப்பானில் 2001ம் ஆண்டு பெப்ருவரி 6ம் திகதி வெளியிடப்பட்டது
東京ミュウミュウ
(Tōkyō Myū Myū)
Genreமாயமான பெண்
மங்கா
Author ரெய்கோ யோஷிடா
Illustrator மியா இகுமி
Publisher கொடான்ஷா
English publisher டோக்கியோ பாப்(முன்னாள்)
Kodansha Comics USA
சுவாங் யீ
Demographic ஷொஜொ
Magazine நகயொஷி
Original run செப்டம்பர் 2000பிப்ரவரி 2003
Volumes 7 (List of volumes)
Anime
Director நொரியுகி அபே
Composer டகயுகி நெகிஷி
Studio Studio Pierrot
Game
Hamepane Tōkyō Myū Myū
DeveloperWinkysoft
PublisherTakara
GenrePuzzle game
Platformகேம் பாய் அட்வான்ஸ்
Releasedயூலை 11, 2002
Game
Tōkyō Myū Myū – Tōjō Shin Myū Myū! – Minna Issho ni Gohōshi Suru Nyan
DeveloperWinkysoft
Publisherதகாரா
GenreRole-playing video game
Platformபிளேஸ்டேசன்
Releasedடிசம்பர் 5, 2002
மங்கா
டோக்கியோ மியாவ் மியாவ்
Author மியா இகுமி
Publisher கொடான்ஷா
English publisher டோக்கியோ பாப்
Demographic ஷொஜொ
Magazine நகயொஷி
Original run ஏப்ரல் 2003பிப்ரவரி 2004
Volumes 2 (List of volumes)

டோக்கியோ மியாவ் மியாவ் (Tokyo Mew Mew) ரெய்கோ யோஷிடா என்பவரால் எழுதப்பட்டு மியா இகுமி என்பவரால் சித்தரிக்கப்பட்ட ஒரு யப்பானிய shōjo மங்கா தொடர் ஆகும். இது ‘மியாவ் மியாவ் சக்தி’ எனவும் அறியப்படுகிறது. இது முதலில் செப்டம்பர் 2000 இலிருந்து பெப்ருவரி 2003 வரை நகயொஷியில் தொடராக்கப்பட்டது. பின்னர் கொடன்ஷா என்பவரால் பெப்ருவரி 2001 இலிருந்து ஏப்ரல் 2013 வரை ஏழு தொகுதிகளில் வெளியிடப்பட்டது. இது சிறப்பு சக்தியைத் தரும் அரிய விலங்குகளுடைய பரம்பரை அலகில் ஐந்து பெண்கள் ஈர்க்கப்படுவதையும் அது மியாவ் மியாவ் வுக்கு மாற்ற உதவுவதையும் மையப்படுத்துகிறது. ஐந்து யுவதிகளும் இச்சிகோ மொமோமியா தலைமையில் பூமியை அபகரிக்க முற்படும் வேற்றுக் கிரக வாசிகளிடமிருந்து பூமியை காப்பாற்றுகின்றனர். இந்த தொடர் ஸ்டுடியோ பையிரெட் மற்றும் நிப்பான் அனிமேஷன் மூலம் 52 அத்தியாயங்களில் அசையும் தொடராக தழுவப்பட்டது. இது ஏப்ரல் 6, 2002 இல் ஜப்பானில் ஐச்சி தொலைக்காட்சியிலும் டோக்கியோ தொலைக்காட்சி யிலும் அரங்கேற்றப்பட்டது; இறுதி அத்தியாயம் மார்ச் 29, 2003 இல் ஒளிபரப்பப்பட்டது. தொடர்ந்து ஒரு இரண்டு தொகுதிகள் ' நகயொஷி ' யில் ஏப்ரல் 2003 இலிருந்து பெப்ருவரி 2004 வரை தொடராக்கப்பட்டது. பின் வந்த தொடர்கள், இச்சிகோ இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வேளை மியாவ் மியாவுக்கு தற்காலிக தலைவராக ‘பெர்ரி ஷிராயுகி’ என்ற ஒரு புதிய மியாவ் மியாவை அறிமுகப்படுத்துகிறது. தொடருக்காக இரண்டு வீடியோ விளையாட்டுக்களும்: கேம் போய் அட்வான்ஸ் சிஸ்டத்திற்காக புதிர் சாகச விளையாட்டும் ப்லே ஸ்டேஷனுக்காக ஒரு நாடகப்பாத்திர வேடியோ கேமும் உருவாக்கப்பட்டது.

வட அமெரிக்காவில் ஆங்கில மொழி வெளியீட்டுக்காக டோக்யோபொப் மங்காவுக்கு உரிமம் பெற்று தொடர்களின் மீள்வெளியீட்டுக்காக பின் வந்த தொடர்கள் போன்று முழுமையான அசல் தொடரை ‘கொடன்ஷா கொமிக்ஸ்’ என்ற அமெரிக்க திட்டத்துடன் ஒரு புதிய மொழிபெயர்ப்புடன் செப்டெம்பர் 2011 இல் அசல் தொடரையும் வெளியிட்டது. வட அமெரிக்க ஒலிபரப்புக்காக '4மழலை பொழுதுபோக்கு’ அசையும் தொடர்க ளை உரிமம் பெற்றது. 'மியாவ் மியாவ் சக்தி' யின் 23 அத்தியாயங்கள் அதிகம் திருத்தப்பட்டு மொழிமாற்றம் செய்யப்பட்டு வட அமெரிக்க '4மழலை தொலைக்காட்சி' அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்டதுடன் கனேடிய 'YTV' யிலும் ஒளிபரப்பப்பட்டது. '4மழலை பொழுதுபோக்கு’குக்கு எஞ்சிய 26 அத்தியாயங்க ளுக்கு உரிமம் பெற முடியாமல் போனது. இதனால் அதன் ஒலிபரப்பை முழுமையாக்க முடியாமல் போனது. அவர்கள் வீட்டு வீடியோவுக்கு தொடர்களை வெளியிடவில்லை.

வரைகலை நாவல்களுக்காக மங்கா தொடரின் பல தொகுதிகள் முதல் 50 விற்பனைப் பட்டியல்களில் அவைகளின் வெளியீட்டு மாதத்தில் தோன்றியவைகள் ஆங்கில மொழி வாசிப்பாளர்களால் நன்கு பெறப்பட்டது. இலகு நடை மற்றும் கதாபாத்திர வடிவமைப்புக்க ளுடன் கூடிய அழகானதும் பொழுதுபோக்கு தொடருமான மங்காவை விமர்சகர்கள் பாராட்டினர். 'எ லா மோட்' ஒரு நல்ல தொடர்ச்சியான பொழுதுபோக்கு தொடருக்கான பாராட்டைப் பெற்றுக்கொண்டது, ஆனால் புதிதாக எதையும் வழங்கவில்லை என விமர்சனப்படுத்தப்பட்டது. அசையும் தழுவல் ஜப்பானில் ஒளிபரப்பப்பட்ட நேரம் எண்ணற்ற சந்தைப்படுத்தல் கூட்டு நிருவனங்களின் விளைவாக உயர் தரவரிசைகளை பெற்றுக்கொண்டது. அதிக ஜாப்பானிய மூலகங்களை அகற்றிய பரவலான திருத்தங்களுக்கு விமர்சனங்கள் இருந்தபோதிலும், மியாவ் மியாவ் ஷக்தி ஒலிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கும்போது 4மழலை காட்சிகளில் அதி உயர் தரவரிசையிலானது. அசல் ஜப்பானிய தொடருக்குப் பதிலாக ஏனைய பல நாடுகளில் பிராந்திய வெளியீட்டுக்காக இது உரிமம் பெற்றது.

வரைகலை நாவல்களுக்காக மங்கா தொடரின் பல தொகுதிகள் முதல் 50 விற்பனைப் பட்டியல்களில் அவைகளின் வெளியீட்டு மாதத்தில் தோன்றியவைகள் ஆங்கில மொழி வாசிப்பாளர்களால் நன்கு பெறப்பட்டது. இலகு நடை மற்றும் கதாபாத்திர வடிவமைப்புக்க ளுடன் கூடிய அழகானதும் பொழுதுபோக்கு தொடருமான மங்காவை விமர்சகர்கள் பாராட்டினர். 'எ லா மோட்' ஒரு நல்ல தொடர்ச்சியான பொழுதுபோக்கு தொடருக்கான பாராட்டைப் பெற்றுக்கொண்டது, ஆனால் புதிதாக எதையும் வழங்கவில்லை என விமர்சனப்படுத்தப்பட்டது. அசையும் தழுவல் ஜப்பானில் ஒளிபரப்பப்பட்ட நேரம் எண்ணற்ற சந்தைப்படுத்தல் கூட்டு நிருவனங்களின் விளைவாக உயர் தரவரிசைகளை பெற்றுக்கொண்டது. அதிக ஜாப்பானிய மூலகங்களை அகற்றிய பரவலான திருத்தங்களுக்கு விமர்சனங்கள் இருந்தபோதிலும், மியாவ் மியாவ் ஷக்தி ஒலிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கும்போது 4மழலை காட்சிகளில் அதி உயர் தரவரிசையிலானது. அசல் ஜப்பானிய தொடருக்குப் பதிலாக ஏனைய பல நாடுகளில் பிராந்திய வெளியீட்டுக்காக இது உரிமம் பெற்றது.

கதை[தொகு]

தொடரின் ஆரம்பத்தில் 'இச்சிகோ மொமோமியா' என்ற பெயருள்ள ஒரு யுவதி 'மசாயா ஒயாமா' என்ற தனது எதிர்கால ஆண் நண்பனுடன் ஓர் அருகிவரும் இனங்கள் கண்காட்சியில் கலந்துகொள்கிறார். ஒரு நிலநடுக்கத்திற்குப் பிறகு இச்சிக்கோ வும் ஏனைய நான்கு யுவதிகளும் ஒரு அதிசய ஒளியில் குளிப்பாட்டப்படுகின்றனர். ஒரு பூனை இச்சிக்கோ வுக்கு முன் தோன்றி அவளுடன் கலக்கிறது. அடுத்த நாள் அவள் ஒரு பூனை போன்று செயற்படத் தொடங்குகிறாள், அத்துடன் 'றியோ ஷிரோகனி' யையும் 'கெய்ச்சிரோ அகசகா' வையும் சந்தித்த பின்னர் 'ஐரியோமோட்' பூனை யின் பரம்பரை அலகுடன் தான் உட்செலுத்தப்பட்டதை உணர்கிறாள். றியோவும் கெய்ச்சிரோவும் இது அவளை ஒரு 'மியாவ் இச்சிகோ', சக்தி மிக்க வீர பூனைப் பெண்ணாக மாற்றுவதற்கு உதவும் என விளக்குகிறார்கள். அவள், விலங்குகளை அரக்கர்களாக மாற்றும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கைமேரா(வெவ்வேறு மரபுத்திரி எண்ணிக்கை கொண்ட உடல் அணுக்கள் உடைய) விலங்குகளை தோற்கடிக்க கட்டளையிடப்படுகிறாள். . றியோவும் கெய்ச்சிரோவும் மீதமுள்ள பூனைகளான ஏனைய நான்கு யுவதிகளையும் கண்காட்சியிலிருந்து கண்டுபிடிக்க இச்சிக்கோவுக்கு அறிவுருத்துகின்றனர். அவர்களாக 'மின்ட் ஐஸாவா', 'நீல லொரிகீட்' இன் பரம்பரை அலகு உட்செலுத்தப்பட்ட ஒரு கெட்டுப்போன செல்வந்த யுவதி; 'லெட்டியூஸ் மிடோரிகாவா', 'பின்லெஸ் போர்பொய்ஸ்' இன் மரபணுவினால் கொடுமைப்படுத்தப்பட்டு உறிஞ்சப்பட்ட ஒரு கூச்ச சுபாவமுள்ள, ஆனால் அழகிய யுவதி; 'டமரியன் தங்க சிங்க' த்தின் மரபணுவைப் பெற்றுக்கொள்ளும் 'புடிங் ஃபொங்' அத்துடன் 'ஸகுரோ ஃபுஜிவரா', சாம்பல்நிற ஓநாயின் மரபணு உட்செலுத்தப்பட்டஒரு அதிகாரி.

ஐந்து மியாவ் மியாவ் கிரேமா விலங்குகளுடனும் அவைகளின் அந்நிய கட்டுப்பாட்டாளர்களான 'கிஷு', 'பாய்', மற்றும் 'டருடோ' ஆகியவைகளுடனும் சண்டையிடுகின்றனர். 'கிஷ்' இச்சிகோ வை காதலிக்க தொடங்குகிறான்; அவன் ஏனைய மியாவ் மியாவ்களை அகற்றுவதற்கு முயற்சித்த போதிலும் அவளின் காதலைப் பெற முயற்சிக்கிறான். பிறகு ஏனைய இரு வேற்றுக் கிரக வாசிகளான 'பை' யும் 'டார்ட்' உம் மியாவ் மியாவ்களை அழிப்பதற்கு கிஷ் உடன் இணைகின்றனர்.

சண்டை வலுவடையும் நேரத்தில் மியாவ் மியாவ்கள் "மியாவ் அகுவா" என்ற வேற்றுக் கிரக வாசிகளுடன் போராடுவதற்கு பெரும் சக்தியைக் கொண்ட தூய நீரால் தயாரிக்கப்பட்ட மூலகத்தை கண்டுபிடிக்க பணிக்கப்படுகின்றனர். கிஷ் ஒரு மீன் வளர்ப்பகத்தில் சண்டையில் ஈடுபட்டிருக்கும் வேளை இச்சிக்கோவை மர்மமான ‘நீல நைட்’ தோன்றி அவளை காப்பாற்றும்போது அவள் இழக்கப்படும் அபாயத்தில் இருக்கிறாள். அவன் அவ்வப்போது தொடர்களில் வந்து இச்சிக்கோவை வெவ்வேறான ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றுகிறான்; இது ‘நீல நைட்’ உண்மையிலே 'மஸாயா' என்பதை பின்னர் வெளிப்படுத்துகிறது. இந்த கண்டுபிடிப்புக்குப் பின் விரைவிலேயே மஸாயா வீழ்ந்து ஒரு 'ஆழமான நீலம்'-(மனித இனத்தை அழிக்க விரும்பும் அந்நியர்களின் தலைவர்) ஆக மாறுகிறார். இச்சிக்கோவுக்கு மஸாயா தற்காலிக பாவனைக்கான ஒரு பொய்யான வடிவம் என்பதை விளக்கப்படுத்திய பிறகு 'ஆழமான நீலம்' மியாவ் மியாவ்களை தாக்குகிறது. மஸாயாவுடைய ஆளுமை சுருக்கமாக மீள் தோன்றி அருகிலிருக்கும் நீரை 'ஆழ நீல' த்தை அழிக்க பாவிக்கிறது. அவனையே கொல்கிறான். அவனுடைய உடலுக்கு மேலாக வீழ்ந்து அழுகிறான். இச்சிக்கோ தன்னை இழந்து அவளுடைய சக்தியை அவனுடைய வாழ்க்கையை காக்க அவனுக்கு ஊற்றுகிறாள். மஸாயா அவளுக்கு முத்தமிடுகிறான். அவளை மறுபடியும் மனிதனாக மாற்றி புத்துயிரளிக்கிறார். றியோ பை க்கு மீதமுள்ள நீரை அந்நியர்களின் உலகத்தை காப்பாற்ற கொடுக்கிறான். பிறகு கிஷ், பை மற்றும் டார்ட் குட்பாய் சொல்லி அவர்களுடைய சொந்த உலகத்திற்கு திரும்புகின்றனர்.

தொடர்ச்சி[தொகு]

இரண்டில்-தொகுதி தொடர்ச்சி, டோக்யோ மியாவ் மியாவ் எ லா மோட், இச்சிகோவும் மஸாயாவும் அருகிவரும் இனங்கள் பற்றி கற்பதற்கு இங்கிலாந்துக்கு நகர்கின்றனர்.எஞ்சிய மியாவ் மியாவ்கள் அந்நியர்களால் விட்டுச் செல்லப்பட்ட கைமரா விலங்குகளை அழிப்பதற்கு தொடர்கின்றனர். அவர்கள் ’செயிண்ட் ரோஸ் அறப்போர்’ என்ற புதிய ஒரு அபாயத்திற்கு முகங்கொடுக்கின்றனர்: உலகத்தை அடக்கி ஒரு கற்பனாவுலகத்தை உருவாக விரும்பும் விஷேட சக்தியுள்ள மனிதர்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=டோக்கியோ_மியாவ்_மியாவ்&oldid=3096798" இலிருந்து மீள்விக்கப்பட்டது