டொனால்டு இலிண்டன்-பெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டொனால்டு இலிண்டன்-பெல்
Donald Lynden-Bell
பிறப்பு df=yes|1935|4|5
டோவர், பெரும்பிரித்தானியா[1]
துறை வானியற்பியல்
பணியிடங்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
ஆய்வேடு விண்மீன், பால்வெளி இயக்கவியல் (1961)
ஆய்வு நெறியாளர் இலியோன் மெசுடெல்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
சீமோன் வைட்
சோமக் இராய்சவுத்ரி
விருதுகள்

டொனால்டு இலிண்டந்பெல் (Donald Lynden-Bell) CBE FRS (பிறப்பு: 5 ஏப்பிரல் 1935) ஓர் ஆங்கிலேய வானியற்பியலாளர் ஆவார். பால்வெளிகள் தம் மையத்தில் பாரியக் கருந்துளைகளைக் கொண்டுள்ளன எனும் கோட்பாட்டுக்குப் பெயர்பெற்றவர். இந்த கருந்துளைகளே குவேசார்களுக்கு முதன்மை ஆற்றல் வாயிகள் ஆகும்.[2] இவர் மார்ட்டன் சுகிமிடு பரிசை மற்ரவரோடு இணைந்து பெற்றுள்ளார். இவர் வானியற்பியலுக்கான காவ்லி பரிசு 2008 இல் பெற்றுள்ளார். இவர் அரசு வானியல் கழகத்தின் தலைவராக இருந்துள்ளார். அண்மையில் இவர் கேம்பிரிட்ஜ் வானியல் நிறுவனத்தில் பணி செய்கிறார்; இவர்தான் அந்நிறுவனத்தின் முதல் இயக்குநரும் ஆவார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்விபெற்ர இவர், 1962 இல் ஒலின் எகன், ஆலன் சாந்தகே ஆகியோருடன் இணைந்து ஆய்வுரை வழங்கியுள்ளார்.[3] இதில் நமது பால்வெளியாகிய பால்வழி ஒரு மாபெரும் வளிம முகிலின் குளைவி ஏற்பட்ட்து எனக் கூறுகிறார்.[4]இஅர் 1969 இல் பாரியக் கருந்துளைகளின் அகந்திரளும் பொருளால் ஆற்றல் பெறுகின்றன எனும் கோட்பாட்டை வெளியிட்டார். அழிந்த குவேசார்கலை எண்ணி, பெரும்பாலான பாரியப் பால்வெளிகள் தம் மையத்தில் கருந்துளைகளைப் பெற்றுள்ளன எனக் கோட்பாட்டியலாகக் கொணர்ந்தார்.

இவர் ஏழு சாமுராய் வானியலாளர் குழுவில் ஒருவர். இந்தக் குழுவின் மற்ற வானியலாளர்களில் சாந்திரா பேபர், டேவிடு பர்சுடைன், ஆலன் டிரெசியர், உரோஜர் டேவீசு, உரோபட்டோ தெர்லேவிச், காரி வேக் னர்) ஆகியோர் அடங்குவர்.[5] இவர்கள் மாபெரும் ஈர்ப்பி நிலவுகிறது என்ற எடுகோளின் ஆசிரியர்கள் ஆவர். மாபெரும் ஈர்ப்பி என்பது மிகப்பெரிய பொருள்விரவல் பகுதி ஆகும். இது 250 மில்லியன் ஒளியாண்டுகட்கு அப்பால் உள்ளது. இந்த ஈர்ப்பி தான் களப் பால்வெளிக் கொத்துகளின் இயக்கத்துக்குக் காரணமாகும்நமது .

இவரது மனைவி கேம்பிரிட்ஜ் வேதியியல் பேராசிரியரான உரூத் இலிண்டன் -பெல் ஆவார்.

இவரது நடப்பு ஆய்வு பொது சார்பியல் கோட்பாட்டிலும் வானியற்பியல் தாரைகளிலும்[எப்போது?] முதன்மையாக கவனம் குவிக்கிறது.

தகைமைகள்[தொகு]

விருதுகள்

இவர் பெயர் இடப்பட்டவை

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Astronomers". Inigo Athenaeum Enterprise Inc. (2015). பார்த்த நாள் 25 October 2016.
  2. Lynden-Bell, D. (1969). "Galactic Nuclei as Collapsed Old Quasars". Nature 223 (5207): 690. doi:10.1038/223690a0. Bibcode: 1969Natur.223..690L. http://www.nature.com/nature/journal/v223/n5207/abs/223690a0.html. 
  3. Donald Lynden-Bell; Schweizer, François (2012). "Allan Rex Sandage. 18 June 1926 -- 13 November 2010". Biographical Memoirs of Fellows of the Royal Society. doi:10.1098/rsbm.2011.0021. 
  4. Eggen, O. J.; Lynden-Bell, D.; Sandage, A. R. (1962). "Evidence from the motions of old stars that the Galaxy collapsed". The Astrophysical Journal 136: 748. doi:10.1086/147433. Bibcode: 1962ApJ...136..748E. 
  5. Dennis Overbye, "Lonely Hearts of the Cosmos," 1st. ed., p. 410, Harper Collins, 1991
  6. "John J. Carty Award for the Advancement of Science". National Academy of Sciences. மூல முகவரியிலிருந்து 29 December 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 15 February 2011.
  7. "Gruppe 2: Fysikkfag (herunder astronomi, fysikk og geofysikk)" (Norwegian). Norwegian Academy of Science and Letters. பார்த்த நாள் 7 October 2010.