டைவினைல் சல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டைவினைல் சல்பைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
வினைல் சல்பைடு, டி.வி.எசு.
இனங்காட்டிகள்
627-51-0
InChI
  • InChI=1S/C4H6S/c1-3-5-4-2/h3-4H,1-2H2
    Key: UIYCHXAGWOYNNA-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12321
SMILES
  • C=CSC=C
UNII CL87X0NVJA
பண்புகள்
C4H6S
வாய்ப்பாட்டு எடை 86.15 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.9098 கி/செ.மீ3 (20 °செல்சியசில்)
உருகுநிலை 20 °C (68 °F; 293 K)
கொதிநிலை 84 °C (183 °F; 357 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

டைவினைல் சல்பைடு (Divinyl sulfide) என்பது C4H6S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற நீர்மமான இச்சேர்மம் மயக்கமூட்டும் நெடியைக் கொண்டதாக உள்ளது. ஐதரசன் சல்பைடும் அசிட்டைலீனும் சேர்ந்து வினைபுரியும் போது விளைபொருளாக டைவினைல் சல்பைடு [1]தோன்றுகிறது. கால்சியம் சல்பைடுடன் மாசாக கலந்திருக்கும் கால்சியம் கார்பைடை நீராற்பகுப்பு செய்யும்போது ஐதரசன் சல்பைடு, அசிட்டைலீன் கலப்பு உருவாகிறது.

முதன்முதலில் 1920 களில் கந்தகக் கடுகுடன் சோடியம் ஈத்தாக்சைடு சேர்த்து டைவினைல் சல்பைடு தயாரிக்கப்பட்டது.:[1]

(ClCH2CH2)2S + 2 NaOEt → (CH2=CH)2S + 2 EtOH + 2 NaCl

தயோல்களும் அசிட்டைலீன்களும் வினைபுரிவதால் பலவகையான ஒற்றை வினைல் சல்பைடுகள் உருவாகின்றன[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Boris A. Trofimov, S. V. Amosova (1984). "Divinyl Sulfide: Synthesis, Properties, and Applications". Sulfur Reports 3: 323-393. doi:10.1080/01961778408082463. 
  2. Nina A. Nedolya, Boris A. Trofimov (1994). "Sulfur-containing vinyl ethers". Sulfur Reports 15: 237-316. doi:10.1080/01961779408048961. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைவினைல்_சல்பைடு&oldid=2580569" இலிருந்து மீள்விக்கப்பட்டது