டைபீனைல்வளையபுரோப்பீனோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டைபீனைல்வளையபுரோப்பீனோன்
Diphenylcyclopropenone.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,3-Diphenylcycloprop-2-en-1-one
வேறு பெயர்கள்
டைபீன்சைபுரோன்,டைபீனைல்சைக்ளோபுரோப்பீனோன்
இனங்காட்டிகள்
886-38-4 Yes check.svgY
ChemSpider 58568
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 65057
UNII I7G14NW5EC
பண்புகள்
C15H10O
வாய்ப்பாட்டு எடை 206.24 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

டைபீனைல்வளையபுரோப்பீனோன் (Diphenylcyclopropenone) என்பது திட்டுத் திட்டான தலை வழுக்கைக்கும், முழுமையான தலைவழுக்கை மற்றும் முகத்தில் முடி இழப்புக்கும் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் மேற்பூச்சாக நிர்வகிக்கப்படும் ஒரு பரிசோதனை மருந்தாகும்[1]. இதை டைபீனைல்சைக்ளோபுரோப்பீனோன், டைபீன்சைபுரோன் என்ற பெயர்களாலும் அழைப்பர். இதனுடைய மூலக்கூற்று வாய்ப்பாடு C15H10O ஆகும்.

டைபீனைல்வளையபுரோப்பீனோனைப் பயன்படுத்தி வழங்கப்படும் மேற்பூச்சு நோயெதிர்ப்பு சிகிச்சையானது அடங்கா மருக்களை மறுசீரமைக்கவும் ஒரு சிறந்த சிகிச்சை முறையாக இருக்கிறது [2]. இதை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகமோ அல்லது ஐரோப்பிய மருந்துகள் நிறுவனமோ அங்கீகரிக்கவில்லை [3] .

செயலின் வழிமுறை[தொகு]

டைபீனைல்சைக்ளோபுரோப்பீனோன் நோயெதிர்ப்புத் துலங்கலைத் தூண்டுகிறது என்றும் முடி உதிர்தலை ஏற்படுத்தும் தன்னியக்க உயிரணுக்களின் செயல்பாட்டை எதிர்க்கும் என்றும் கருதப்படுகிறது. இவ்வாறு எதிர்க்காவிட்டால் முடி உதிர்தல் ஏற்படும். [4]. டைபீனைல்சைக்ளோபுரோப்பீனோன் சிகிச்சையின் பிரதிபலிப்பாக உடல் பல்வேறு பாதைகளின் வழியாக வீக்கத்தை உண்டாக்கும் திசுக்களின் பாதுகாப்புச் செயல்முறை முயற்சி குறைபாட்டைச் சந்திக்க நேரிடும் என்பது ஒரு கருதுகோளாகும். சிகிச்சையின் விளைவாக மயிர்க்கால்களில் தன்னியக்க உயிரணுக்களின் செயல்பாடு குறைக்கப்படுகிறது. இந்த தன்னியக்க அழற்சி எதிர்வினை உடலின் மயிர்க்கால்களை அழிக்கும் [3].

ஆய்வுகள்[தொகு]

திட்டுத் திட்டாக தலையில் வழுக்கை கொண்ட 41 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட்து. 6 மாதங்களின் முடிவில் 40% வழுக்கையில் குறிப்பிடத்தக்க முடி வளர்ச்சியைக் காணமுடிந்தது. 12 மாத பின்தொடர்தல் காலத்திற்குப் பிறகு இவற்றில் மூன்றில் இரண்டு பங்கு இவ்வளர்ச்சி நீடித்தது[5].

மருக்கள் சிகிச்சைக்காக 2002 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் 135 நோயாளிகளில் 87.7% நோயாளிகள் மருக்கள் முழுவதுமாக அகற்றப்பட்டன என பதில் அளித்தார்கள். பாதகமான விளைவுகள் ஏற்பட்டதாக புகார் அளித்தவர்களில் மரு இருந்த இடத்தில் அரிப்பு இருந்ததாக 15.6% நோயாளிகளும், கொப்புளங்கள் தோன்றியதாக 7.1% நோயாளிகளும் மற்றும் தோலழற்சி எதிர்வினைகள் (சொறி சிரங்கு) தொடர்பான அரிப்பு இருந்த்தாக 14.2% நோயாளிகளும் பதிலளித்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. பெரும்பாலான நோயாளிகள் சிகிச்சையை நன்றாக பொறுத்துக்கொண்டனர். ஒரு நோயாளிக்கு மட்டும் சிறு தொற்று உருவாகியது. 6 மாத காலப்பகுதியில் நோயாளிகளுக்கு சராசரியாக 5 முறை சிகிச்சைகள் இருந்தன. [2].

வேதிப் பண்புகள்[தொகு]

கார்போனைல் குழுவின் வலுவான துருவமுனைவாக்கம் டைபீனைல்சைக்ளோபுரோப்பீனோனின் வேதியியல் பண்புகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. இது வளையபுரோப்பீன் வளையத்தில் அரோமாட்டிக் நிலைத்தன்மையின் மீது ஓரளவு நேர்குறி மின்சுமையையும், ஆக்சிசனின் மீது ஒரு பகுதி எதிர்குறி மின்சுமையையும் அளிக்கிறது. மேலும், பீனைல் குழுக்கள் ஒத்ததிர்வு மூலம் வளையத்தில் பகுதி நேர்குறி மின்சுமையை உறுதிப்படுத்துகின்றன.

ஆக்சாலில் குளோரைடுடன் டைபீனைல்சைக்ளோபுரோப்பீனோன் வினையில் ஈடுபட்டு 1,1-டைகுளோரோ-2,3-டைபீனைல்சைக்ளோபுரோப்பீன் சேர்மத்தைக் கொடுக்கிறது. இது கார்பாக்சிலிக் அமிலங்களை செயலூக்கம் செய்யும் ஒரு வினையாக்கியாகும்:[6]

அமிலகுளோரைடுவளையபுரோ.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Topical immunotherapy in alopecia areata". International Journal of Trichology 2 (1): 36–9. January 2010. doi:10.4103/0974-7753.66911. பப்மெட்:21188022. 
  2. 2.0 2.1 "The use of diphenylcyclopropenone in the treatment of recalcitrant warts". Journal of Cutaneous Medicine and Surgery 6 (3): 214–7. 2002. doi:10.1007/s10227-001-0050-9. பப்மெட்:11951129. 
  3. 3.0 3.1 "Diphencyprone Treatment of Alopecia Areata: Postulated Mechanism of Action and Prospects for Therapeutic Synergy with RNA Interference". The Journal of Investigative Dermatology. Symposium Proceedings 17 (2): 16–8. November 2015. doi:10.1038/jidsymp.2015.33. பப்மெட்:26551938. 
  4. Public summary of positive opinion for orphan designation of diphenylcyclopropenone for the treatment of alopecia totalis, European Medicines Agency. Document Date: London, 23 April 2009. Doc.Ref.:EMEA/COMP/428277/2006
  5. "Topical immunotherapy with diphenylcyclopropenone in the treatment of chronic extensive alopecia areata". Clinical and Experimental Dermatology 32 (1): 48–51. January 2007. doi:10.1111/j.1365-2230.2006.02256.x. பப்மெட்:17004987. 
  6. "Nucleophilic acyl substitution via aromatic cation activation of carboxylic acids: rapid generation of acid chlorides under mild conditions". Journal of the American Chemical Society 132 (14): 5002–3. April 2010. doi:10.1021/ja101292a. பப்மெட்:20297823.