டேவ்மாவோயிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டேவ்மாவோயிட்டு (Davemaoite) என்பது உயர் அழுத்த கால்சியம் சிலிக்கேட் பெரோவிசுக்கைட்டு வகை தனித்துவமான கனசதுரப் படிக அமைப்பைக் கொண்ட கனிமம் ஆகும்.

பூமியின் மேலோட்டின் கீழடுக்கிள் உள்ள மூன்று முக்கிய தாதுக்களில் இதுவும் ஒன்றாகும். இக்கனிமத்தின் இருப்பானது அங்குள்ள பொருட்களில் 5-7% ஆகும். குறிப்பிடத்தக்க வகையில், இக்கனிமமானது யுரேனியம் மற்றும் தோரியம் ஆகியவற்றை வழங்க முடியும். இக்கனிமத்தில் காணப்படும் கதிரியக்க ஓரிடத்தான்கள் கதிரியக்கச் சிதைவின் மூலம் வெப்பத்தை உருவாக்குவதால், இக்கனிமமானது புவியின் இந்த அடுக்குப் பகுதி வெப்பமடைவதற்கு பெரிதும் உதவுகிறது. [1] பூமியின் மேற்பரப்பிற்குக் கீழே வெப்பம் எவ்வாறு ஆழமாகப் பாய்கிறது என்பதையறிவதில் இக்கனிமப்பொருள் முக்கியப் பங்காற்றுகிறது. [1]

இக்கனிமம் ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டதுஇ. ஆனால், பூமியின் மேலடுக்கில் இருப்பது இக்கனிமத்தின் மிகத் தீவிர வகையைச் சார்ந்தது என்று கருதப்பட்டது. பின்னர் 2021 ஆம் ஆண்டில், துல்லியமான புள்ளிகளில் எக்ஸ்-கதிர்களின் உயர் ஆற்றல் கற்றையை மையப்படுத்துவதன் மூலம், பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் 660 முதல் 900 கிமீ வரையிலான புவியோட்டிற்குள் உருவான வைரத்திற்குள் மிக நுண்ணிய அளவில் இக்கனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கனிமத்தின் இருப்பை கோட்பாட்டியல்ரீதியாக முதலில் குறிப்பிட்ட புவி இயற்பியலாளர் ஹோ-குவாங் (டேவ்) மாவோவின் பெயரால் பெயரிடப்பட்டது. போட்சுவானாவில் உள்ள ஒராபா வைரச் சுரங்கத்தில் இருந்து இந்த வைரம் பிரித்தெடுக்கப்பட்டது. [1]

ஒத்தியங்கு முடுக்கி எக்சு கதிர் விளிம்பு விளைவு எனப்படும் நுட்பத்தைப் பயன்படுத்தி இக்கனிமத்தின் இருப்பு வெளிப்படுத்தப்பட்டது. [2] [3][4]

கால்சியம் சிலிகேட்டானது வோலாஸ்டோனைட்டு மற்றும் பிரெயிட்டு ஆகிய வடிவங்களில் புவியின் மேலோட்டில் நடு மற்றும் கீழடுக்குகளில் காணப்படுகிறது. இருப்பினும், கனிமத்தின் இவ்வடிவமானது பூமியின் மேற்பரப்பில் காணப்படுவதை விட 200,000 மடங்கு அதிக அழுத்தத்தில் மட்டுமே இருக்க முடியும்.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Diamond delivers long-sought mineral from the deep Earth, Nature, by Alexandra Witze, 11 November 2021
  2. Baker, Harry (2021-11-14). "Diamond hauled from deep inside Earth holds never-before-seen mineral". Space.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-15.
  3. Pappas, Stephanie. "New Mineral Discovered in Deep-Earth Diamond". Scientific American (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-15.
  4. #author.fullName}. "New mineral davemaoite discovered inside a diamond from the Earth's mantle". New Scientist (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-15. {{cite web}}: |last= has generic name (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவ்மாவோயிட்டு&oldid=3321181" இலிருந்து மீள்விக்கப்பட்டது