டேவிஸ் அருவி

ஆள்கூறுகள்: 28°11′N 83°58′E / 28.19°N 83.96°E / 28.19; 83.96 (Devi's Falls)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேவிஸ் அருவி
David's
Map
அமைவிடம்நேபாளம், காஸ்கி, பொக்காரா
ஆள்கூறு28°11′N 83°58′E / 28.19°N 83.96°E / 28.19; 83.96 (Devi's Falls)
வகைஅருவி
வீழ்ச்சி எண்ணிக்கை1

டேவிஸ் அருவி நேபாளி: पाताले छाँगो என்பது நேபாளத்தின், காஸ்கி மாவட்டத்தில் உள்ள பொக்காரா என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு அருவியாகும்.

அருவி நீர் கீழே நெருங்கும் போது குகை போன்ற அமைப்பை உருவாக்குகிறது. இந்த சுரங்கப்பாதை ஏறக்குறைய 500 அடி நீளமாகவும் ,100 அடி ஆழமாகவும் அமைந்துள்ளது. 1961 ஜூலை 31 அன்று, சுவிஸ் நாட்டைச் சேர்ந்த டேவி என்ற பெண்மணி இந்த அருவியில் நீச்சலடிக்க சென்ற போது, தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் ஆழமான பகுதியில் மூழ்கி இறந்தார். கடுமையான முயற்சிக்குப்பின் மூன்று நாட்கள் கழித்து அவரது சடலம் கிடைத்தது. அவருடைய தந்தை அவருடைய மகளின் நினைவாக அதற்கு டேவிஸ் அருவி என பெயரிட விரும்பினார். இதனை நேபாளத்தில் பாட்டல் சாங்கோ என்று அழைப்பர். இதன் பொருள் "பாதாள உலக அருவி" என்பதாகும்.

சுரங்கப்பாதையிலிருந்து வெளியேறும், நீரானது "குப்தேஷ்வர் மகாதேவ்" என்னும் தரையடி குகை வழியே வழிந்தோடுகிறது. பீவா அணை ஏரிக்கு இதுவே நீராதாரமாக உள்ளது.[1]

இது சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளை இப்பகுதி ஈர்க்கிறது. ஆயிரக்கணக்கான நேபாளிகள் பொழுதுபோக்கவும் மகிழ்ச்சியாக அருவியைக் கண்டு களிக்கவும் வருகின்றனர். அதிர்ஷ்ட குளத்தில் கடவுளின் சிலையின் மீது நாணயங்களை வீசி தங்களின் அதிர்ஷ்டத்தைப் பார்க்கின்றனர். அதேபோன்று, இங்கு பாரம்பரிய நேபாளி வீடுகள் மற்றும் நேபாளி பாரம்பரிய உடை அணிந்திருக்கும் சிலைகள் அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.

மேற்கோள்[தொகு]

  1. "Patale Chhango (Davi's Falls)".
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிஸ்_அருவி&oldid=3313677" இலிருந்து மீள்விக்கப்பட்டது