உள்ளடக்கத்துக்குச் செல்

டேவிட் சில்வர்மேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேவிட் சில்வர்மேன்
டேவிட் சில்வர்மேன் (2011 இல்)
பிறப்பு13 ஆகத்து 1966 (1966-08-13) (அகவை 57)
வாழிடம்கிரான்போர்டு, நியூ ஜெர்சி
குடியுரிமைஅமெரிக்கர்
அறியப்படுவதுநாத்திக செயற்பாடு

டேவிட் சில்வர்மேன் (David Silverman, பிறப்பு:ஆகசுடு 13, 1966) அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு இறைமறுப்பாளர் (நாத்திகர்) ஆவார். ஆறு வயது முதலே இவருக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை[1]. பள்ளியில் படிக்கும்போது நாத்திகம் பற்றிப் பெரிதும் விவாதம் செய்வார்.

1997 ஆம் ஆண்டில் நியூ ஜெர்சி நாத்திகர்கள் சங்க இயக்குநர் பொறுப்பை ஏற்றார். அமெரிக்கன் நாத்திகர்கள் என்னும் இதழுக்குக் கட்டுரைகள் எழுதி வருகிறார். 2010 செப்டம்பர் முதல் அமெரிக்க நாத்திகர்கள் என்னும் அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். தொலைக்காட்சிகளில் தோன்றிப் பேசியும் கருத்தரங்குகளில் உரையாடியும் வருகிறார்[2][3].

நாத்திகக் கருத்துக்களைப் பரப்புவதோடு அல்லாமல் மதமும் அரசியலும் வேறு வேறாக இருக்க வேண்டும் என்று கூறி வருகிறார். நாத்திகர் தொலைக்காட்சி 2014 ஆம் ஆண்டில் இவருடைய முயற்சியில் தொடங்கப்பட்டது[4]. மார்க்கட்டிங், கணினி இயல் ஆகிய துறைகளில் பட்டங்கள் பெற்றுள்ளார். நியூ ஜெர்சியில் தம் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dave Silverman - MasterMedia Speakers Bureau". MasterMedia. 2011. http://www.mastermediaspeakers.com/davidsilverman/index.html. பார்த்த நாள்: 2011-04-09. 
  2. "American Atheists - Dave Silverman, President-elect". American Atheists. 2010. http://atheists.org/about-us/staff?. பார்த்த நாள்: 2010-04-09. 
  3. "American Atheists - Media Releases". American Atheists. 2010 இம் மூலத்தில் இருந்து 2009-04-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090428100343/http://www.atheists.org/media/media_releases. பார்த்த நாள்: 2011-04-09. 
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-08-11. பார்க்கப்பட்ட நாள் 2014-08-12.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_சில்வர்மேன்&oldid=3556773" இலிருந்து மீள்விக்கப்பட்டது