உள்ளடக்கத்துக்குச் செல்

டெல்டா 0100

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெல்டா 0100 தொடர்கள்
Delta 0100 series
நிம்பசு 5 செலுத்தப்படுவதற்கு முன்னர் டெல்டா 0900 ஏவுதல்
நிம்பசு 5 செலுத்தப்படுவதற்கு முன்னர் டெல்டா 0900 ஏவுதல்
தரவுகள்
இயக்கம் எரிந்தழியும் ஏவுகல அமைப்பு
அமைப்பு {{{manufacturer}}}
நாடு  ஐக்கிய அமெரிக்கா


ஏவு வரலாறு
நிலை நிறுத்தப்பட்டது
ஏவல் பகுதி வேண்டன்பெர்க் எசு.எல்.சி-2டபிள்யூ
மொத்த ஏவல்கள் 5
வெற்றிகள் 4
தோல்விகள் 1
முதல் பயணம் 23 சூலை 1972
கடைசிப் பயணம் 6 நவம்பர் 1973

டெல்டா 0100 தொடர்கள் (Delta 0100 series) என்பவை அமெரிக்காவைச் சேர்ந்த எரிந்தழியும் ஏவூகல அமைப்பு வகை ஏவூர்திகளாகும். இவை டெல்டா 100, டெல்டா 0300 அல்லது 300 தொடர்கள் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. 1968 மற்றும் 1972 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், இவ்வமைப்பு மூலம் சுற்றுப்பாதை ஏவுதல்கள் நடைபெற்றன. டெல்டா குடும்ப வகை ஏவூர்திகளில் டெல்டா 0100 ஏவூர்தியும் ஒன்றாகும். நான்கு இலக்க எண் குறியீட்டைப் பயன்படுத்தி பெயரிடப்பட்ட முதலாவது ஏவூர்தி அமைப்பு டெல்டா 0100 ஏவூர்தியாகும். டெல்டா 0300 மற்றும் டெல்டா 0900 என்ற தனித்தனியாக வடிவமைக்கப்பட்ட இரண்டு வேறுபட்ட வகைகளில் இவை பறந்தன.

தோர் ஏவுகணையின் நீட்சிவடிவமான நீள் தொட்டி தோர் அமைப்பே, டெல்டா 0100 தொடர்களின் முதற்கட்டத்தில் பயன்படுத்தப்பட்டது. மேலேற்றும் உந்துகைச் சக்தியை அதிகரிக்கும் விதமாக, திண்ம ஏவூர்தி உந்துகலங்களான காசுடர்-2 ஆற்றல் நிரப்பிகள் தோர் அமைப்புடன் இணைக்கப்பட்டு, டெல்டா வகை ஏவூர்திகள் உருவாக்கப்பட்டன. டெல்டா 0300 வகை ஏவுர்தியில் மூன்று காசுடர்-2 ஆற்றல் நிரப்பிகளும் டெல்டா-0900 வகை ஏவூர்தி வகை அமைப்பில் ஒன்பது காசுடர்-2 ஆற்றல் நிரப்பிகளும் இணைக்கப்படுகின்றன. இரண்டாவது கட்டம் டெல்டா எப் நிலையாகும்.

டெல்டா 0100 வரிசையில் ஐந்து ஏவு கலங்கள் செலுத்தப்பட்டன. அவற்றில் மூன்று ஏவூர்திகள் 0300 அமைப்பிலும், இரண்டு ஏவூர்திகள் 0900 அமைப்பிலும் உருவாக்கப்பட்டிருந்தன. இவையனைத்தும் கலிபோர்னியாவிலுள்ள வேண்டன்பெர்க் வான்படைத் தளத்தில் இருக்கும் விண்கல ஏவுவளாகம் 2டபிள்யூ வில் இருந்தே ஏவப்பட்டன. இவற்றில் 1973 ஆம் ஆண்டு சூலை 16 அன்று ஏவப்பட்ட ஒரு ஏவூர்தி தோல்வியில் முடிந்தது. ஒரு நீரியற் ஏற்றியின் செயலிழப்பு காரணமாக இரண்டாம் கட்ட உயரக் கட்டுப்பாட்டு உந்து பொறிகளில் அழுத்தக் குறைவு ஏற்பட்டது. இதனால் ஏவு கலன் கட்டுப்பாட்டை இழந்து வளிமண்டலத்தில் உடைந்து சிதறியது

மேற்கோள்கள்[தொகு]

  • Wade, Mark. "Delta". Encyclopedia Astronautica. பார்க்கப்பட்ட நாள் 2009-02-11.
  • Krebs, Gunter. "Thor family". Gunter's Space Page. பார்க்கப்பட்ட நாள் 2009-02-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெல்டா_0100&oldid=2919186" இலிருந்து மீள்விக்கப்பட்டது