டெர்ரி கிலியம்
டெர்ரன்ஸ் வான்ஸ் கிலியம் (Terrence Vance Gilliam பிறப்பு 22 நவம்பர் 1940) [1] ஓர் அமெரிக்க-பிரித்தானிய திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், நடிகர், நகைச்சுவையாளர் மற்றும் மோண்டி பைதானெனும் நகைச்சுவை குழுவின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.
டைம் பாண்டிட்ஸ் (1981), பிரேசில் (1985), தி அட்வென்ச்சர்ஸ் ஆஃப் பரோன் முன்சாசென் (1988), தி ஃபிஷர் கிங் (1991), 12 மங்கீஸ் (1995), ஃபியர் அண்ட் லோதிங் இன் லாஸ் வேகாஸ் (1998) தி பிரதர்ஸ் கிரிம் (2005), டைட்லேண்ட் (2005), மற்றும் தி இமாஜினேரியம் ஆஃப் டாக்டர் பர்னாசஸ் (2009).உள்ளிட்ட 13 திரைப்படங்களை கிலியம் இயக்கியுள்ளார்.
கிலியம் மினசோட்டாவில் பிறந்தார். ஆனால் இவரது உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களில் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்தார். அசைவு படம் மற்றும் வரைகலை கலைஞராக தனது தொழில் வாழ்க்கையைத் துவங்கினார் இவர் பைத்தானில் அசைவு பட கலைஞராக பணியில் செய்தார் . பின்னர் அங்கு முழுநேர உறுப்பினராக ஆனார். அந்த சமயத்தில் அங்கு நடிக்கும் வாய்ப்பினை பெற்றார். 1970 ஆம் ஆண்டில் இவர் திரைப்பட இயக்குனராக அறிமுகமானார். இவரது பெரும்பான்மையான திரைப்படங்கள் சர்வாதிகாரத்திற்கு எதிரான செயல்பாடுகளை கொட கருத்துக்களை மையமாகக் கொண்டு இருந்துள்ளன.
1988 ஆம் ஆண்டில், கிலிலியம் மற்றும் பிற மான்டி பைதான் உறுப்பினர்கள் பிரித்தானிய சினிமாவுக்கு அளித்த சிறப்பான பங்களிப்புகளுக்காக பிரித்தானிய அகதமி விருதினைப் பெற்றனர். [2] 2009 ஆம் ஆண்டில், கிலியம் வாழ்நாள் சாதனையாளர்களுக்காக பிரித்தானிய அகாதமி ஆதரவு ஊதியம் பெற்றார். [3]
ஆரம்பகால வாழ்க்கை[தொகு]
கில்லியம் மினசோட்டாவின் மினியாப்பொலிஸில் பீட்ரைஸ் (நீ வான்ஸ்) மற்றும் ஜேம்ஸ் ஹால் கில்லியம் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை ஒரு தச்சராக பணிபுரிந்தார்.அதற்கு முன்பாக ஃபோல்கர்சில் விற்பனையாளராக இருந்தார். பின்னர் இவர்கள் மினசோட்டா, மருத்துவ ஏரிக்கு குடிபெயர்ந்தனர். [4]
இவர்களது குடும்பம் 1952 ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் பனோரமா நகரத்திற்கு குடிபெயர்ந்தது. கிலியம் பர்மிங்காம் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். அங்கு இவர் வகுப்புத் தலைவராக இருந்தார்.
கில்லியம் 1962 ஆம் ஆண்டில் ஆக்சிடெண்டல் கல்லூரியில் அரசியல் அறிவியல் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார் . [5]
திரைப்பட வரலாறு[தொகு]
டைம் பாண்டிட்ஸ் (1981), பிரேசில் (1985), தி அட்வென்ச்சர்ஸ் ஆஃப் பரோன் முன்சாசென் (1988), தி ஃபிஷர் கிங் (1991), 12 மங்கீஸ் (1995), ஃபியர் அண்ட் லோதிங் இன் லாஸ் வேகாஸ் (1998) தி பிரதர்ஸ் கிரிம் (2005), டைட்லேண்ட் (2005), மற்றும் தி இமாஜினேரியம் ஆஃப் டாக்டர் பர்னாசஸ் (2009).உள்ளிட்ட 13 திரைப்படங்களை கிலியம் இயக்கியுள்ளார்.
சான்றுகள்[தொகு]
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ "Outstanding British Contribution To Cinema in 1988". BAFTA.org. http://awards.bafta.org/award/1988/film/outstanding-british-contribution-to-cinema. பார்த்த நாள்: 25 August 2019.
- ↑ "Gilliam to get Bafta fellowship". http://news.bbc.co.uk/1/hi/entertainment/7866717.stm. பார்த்த நாள்: 25 August 2019.
- ↑ The Pythons: Autobiography by the Pythons. St. Martin's Griffin.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).