டெர்பியம் அசிட்டைலசிடோனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெர்பியம் அசிட்டைலசிடோனேட்டு
இனங்காட்டிகள்
14284-95-8 Y
InChI
  • InChI=1S/3C5H7O2.Tb/c3*1-4(6)3-5(2)7;/h3*3H,1-2H3;/q3*-1;+3
    Key: MAPWZFZLNRMAMO-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • CC(=O)[CH-]C(=O)C.CC(=O)[CH-]C(=O)C.CC(=O)[CH-]C(=O)C.[Tb+3]
பண்புகள்
C15H21O6Tb
வாய்ப்பாட்டு எடை 456.25 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

டெர்பியம் அசிட்டைலசிடோனேட்டு (Terbium acetylacetonate) என்பது Tb(C5H7O2)3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இந்த நீரிலி அசிட்டைலசிட்டோனேட்டு அணைவுச் சேர்மம் அடிக்கடி விவாதிக்கப்படுகிறது என்றாலும் இது தனியாக இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. Tb(C5H7O2)3(H2O)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு 8 ஒருங்கிணைவுகள் கொண்ட டெர்பியம் அசிட்டைலசிடோனேட்டு இருநீரேற்றுக்கு மற்ற இலந்தனைடு அசிட்டைலசிட்டோனேட்டுகளின் நடத்தையின் அடிப்படையில் மிகவும் நம்பத்தகுந்த ஒரு மூலக்கூற்று வாய்பாடாகும். இந்த இருநீரேற்று எக்சுகதிர் படிகவியல் ஆய்வுகளின் மூலமாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது.[1][2] வெற்றிடத்தில் வெப்பப்படுத்துவதன் மூலம் நீர் நீக்கம் செய்யும் முயற்சியில் மற்ற நீரேற்றப்பட்ட இலந்தனைடு திரிசு (அசிட்டைலைசிட்டோனேட்டு) அணைவுகள் சிதைந்து ஆக்சோ- கொத்து சேர்மங்கள் உருவாகின்றன.[3] இந்த அணைவுச் சேர்மத்தை டெர்பியம் உப்புகள், அசிட்டைலசிடோ மற்றும் அம்மோனியா போன்ற காரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கலாம்.

3 NH3 + 3 Hacac + Tb(NO3)3 → Tb(acac)3 + 3 NH4NO3

டெர்பியம் அசிட்டைலசிடோனேட்டு 5-[(2-தயோபீன் மெத்திலீன்)அமினோ]-8-ஐதராக்சிகுயினோலின் சேர்த்து அசிட்டோநைட்ரைல்/இருகுளோரோமீத்தேன் கரைசலில் சூடுபடுத்துவதன் மூலம் வெளிர் மஞ்சள் நிறப்படிகங்களாக உருவாகிறது.[4] இது சில ஒளியியல் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.[5][6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Cheng, Shen; Yuguo, Fan; Guofa, Liu; Yutian, Wang; Pinzhe, Lu (1983). Gaodeng Xuexiao Huaxue Xuebao (Chem.J.Chin.Univ.) 4: 769. 
  2. Cambridge Crystallographic Data Center, number CCDC 1121251.
  3. Tamang, Sem Raj; Singh, Arpita; Bedi, Deepika; Bazkiaei, Adineh Rezaei; Warner, Audrey A.; Glogau, Keeley; McDonald, Corey; Unruh, Daniel K. et al. (2020). "Polynuclear Lanthanide–Diketonato Clusters for the Catalytic Hydroboration of Carboxamides and Esters". Nat. Catal. 3 (2): 154–162. doi:10.1038/s41929-019-0405-5. 
  4. Wen-Min Wang, Lei Huai, Xi-Wen Wang, Kai-Jun Jiang, Hai-Yun Shen, Hong-Ling Gao, Ming Fang, Jian-Zhong Cui (2020). "Structures, magnetic refrigeration and single molecule-magnet behavior of five rhombus-shaped tetranuclear Ln( iii )-based clusters" (in en). New Journal of Chemistry 44 (25): 10266–10274. doi:10.1039/D0NJ01969K. பன்னாட்டுத் தர தொடர் எண்:1144-0546. http://xlink.rsc.org/?DOI=D0NJ01969K. பார்த்த நாள்: 2021-09-20. 
  5. Rui Jia, Ting Gao, Yu Yang, Wenbin Sun, Ruoxi Chen, Pengfei Yan, Guangfeng Hou (Sep 2015). "Luminescence of Salen Lanthanide Bimetallic Complexes: Dual Emission and Energy Transfer: Luminescence of Salen Lanthanide Bimetallic Complexes" (in en). Zeitschrift für anorganische und allgemeine Chemie 641 (11): 1974–n/a. doi:10.1002/zaac.201500138. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.201500138. பார்த்த நாள்: 2021-09-20. 
  6. Gaël Zucchi, Taewoo Jeon, Denis Tondelier, Dmitry Aldakov, Pierre Thuéry, Michel Ephritikhine, Bernard Geffroy (2010). "White electroluminescence of lanthanide complexes resulting from exciplex formation" (in en). Journal of Materials Chemistry 20 (11): 2114. doi:10.1039/b921740a. பன்னாட்டுத் தர தொடர் எண்:0959-9428. http://xlink.rsc.org/?DOI=b921740a. பார்த்த நாள்: 2021-09-20. 
  7. Anna M. Kaczmarek, Ying-Ya Liu, Mariusz K. Kaczmarek, Hengshuo Liu, Flavia Artizzu, Luís D. Carlos, Pascal Van Der Voort (2020-01-27). "Developing Luminescent Ratiometric Thermometers Based on a Covalent Organic Framework (COF)" (in en). Angewandte Chemie International Edition 59 (5): 1932–1940. doi:10.1002/anie.201913983. பன்னாட்டுத் தர தொடர் எண்:1433-7851. பப்மெட்:31777996. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/anie.201913983. பார்த்த நாள்: 2021-09-20.