டெட்ரோசு அதானோம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெட்ரோசு அதானோம்
ቴዎድሮስ አድሓኖም ገብረኢየሱስ
2018 ஆம் ஆண்டில் டெட்ரோசு
8வது இயக்குநர் - ஜெனரல் உலக சுகாதார அமைப்பு
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
1 சூலை 2017
முன்னவர் மார்க்ரெட் சான்
எத்தியோப்பிய வெளியுறவுத் துறை அமைச்சர்
பதவியில்
29 நவம்பர் 2012 – 1 நவம்பர் 2016
பிரதமர் ஐலேமரியம் டெசாலேன்
முன்னவர் பெர்ஹானே கெப்ரே-கிரிஸ்டோஸ் (பொறுப்பு)
பின்வந்தவர் ஒர்க்னே கெபேயேகு
சுகாதாரத் துறை அமைச்சர்
பதவியில்
12 அக்டோபர் 2005 – 29 நவம்பர் 2012
பிரதமர் மெலிஸ் ஜெனாவி
ஐலேமரியம் டெசாலேன்
முன்னவர் கெபேடே டாடீசி
பின்வந்தவர் கெசேடிபிரான் அட்மாசு
தனிநபர் தகவல்
பிறப்பு 3 மார்ச்சு 1965 (1965-03-03) (அகவை 58)
அஸ்மாரா, எரிடேரா மாகாணம், எத்தியோப்பியப் பேரரசு (தற்போது எரித்திரியா)
அரசியல் கட்சி டைக்ரேயன் மக்கள் விடுதலை முன்னணி
பிற அரசியல்
சார்புகள்
எத்தியோப்பிய மக்களின் புரட்சிகர சனநாயக முன்னணி
படித்த கல்வி நிறுவனங்கள் அஸ்மாரா பல்கலைக்கழகம் (இளங்கலைப் பட்டம்)
இலண்டன் ஸ்கூல் ஆப் ஐஜீன் மற்றும் ட்ராபிகல் மெடிசின் (முதுகைலப் பட்டம்)
நாட்டிங்காம் பல்கலைக்கழகம் (முனைவர்)
கையொப்பம்

டெட்ரோசு அதானோம் கெப்ரேயஸ் ( கீஸ் : ቴዎድሮስ አድሓኖም born; பிறப்பு 3 மார்ச் 1965) [1] ஒரு எத்தியோப்பிய அரசியல்வாதியும் கல்வியாளரும் ஆவார். இவர் 2017 ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரலாக இருந்து வருகிறார். அவர் முன்னர் எத்தியோப்பியா அரசாங்கத்தில் 2005 முதல் 2012 வரை சுகாதார அமைச்சராகவும் [2] மற்றும் 2012 முதல் 2016 வரை வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றினார் . [3]

டெட்ரோசு, அஸ்மாரா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு 1986 ஆம் ஆண்டில் சுகாதார அமைச்சில் சேர்ந்தார். [4] சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மலேரியா ஆராய்ச்சியாளர் ஆவார். சுகாதார அமைச்சராக, டெட்ரோசு பல புதுமையான மற்றும் அமைப்புரீதியான சுகாதார சீர்திருத்தங்களுக்கு பாராட்டுக்களைப் பெற்றவர் ஆவார். இவரது பணிகள் சுகாதார சேவைகள் மற்றும் முக்கியமான முடிவுகளை எளிதில் அணுகும் தன்மையை கணிசமாக மேம்படுத்தியது. [5] எத்தியோப்பியாவில் சுமார் 40,000 பெண் சுகாதார விரிவாக்க தொழிலாளர்களை பணியமர்த்தல் மற்றும் பயிற்சியளித்தல் மூலமாக, 2006ஆம் ஆண்டில் 1,000 பிறப்புகளுக்கு 123 இறப்பு என்ற அளவிலிருந்த சிசு இறப்பு விகிதத்தை 2011ஆம் ஆண்டில் 88 ஆக குறைத்தது, மருத்துவர்கள் மற்றும் பேறுகால உதவியாளர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களை பணியமர்த்தலை அதிகரித்தது ஆகியவை ரெட்ரோசின் முக்கியப் பணிகளாகும். [6] ஜூலை 2009 இல், எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியாவை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய நிதியத்தின் வாரியத் தலைவராக இரண்டு ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [7]

டெட்ரோசு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரலாக 23 மே 2017 அன்று உலக சுகாதார சபையினால் தேர்ந்தெடுக்கப்பட்டார். [3] [8] [9] மருத்துவர் அல்லாத முதல் இயக்குநர் ஜெனரலாக ஆனார். [10] அவர் 1 ஜூலை 2017 அன்று ஐந்தாண்டு காலத்திற்கு பதவியேற்றார்.

கிவு எபோலா தொற்றுநோய் மற்றும் 2019–20 கொரோனா வைரசுத் பெருந்தொற்றுநோயின் காலத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகத்தை டெட்ரோசு மேற்பார்வையிட்டார். வெடிப்பின் போது அவர் காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் ஆரம்ப பயணங்களை மேற்கொண்டார். [11] மேலதிக நடவடிக்கை எடுக்க நாடுகளுக்குத் தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ள நிலையில், [12] கொரோனா வைரஸ் வெடிப்பைக் கையாயள்வதில் உலக சுகாதார அமைப்பு உரிய விதத்தில் செயல்படவில்லை என்ற விமர்சனங்களையும் அவர் எதிர்கொண்டார். இந்த நோயை ஒரு தொற்றுநோயாக அறிவிப்பதில் மிகவும் தாமதமாக செயல்பட்டுள்ளார் என்பது அந்த விமர்சனத்தில் மிக முக்கியமான ஒன்றாகும். [13] [14]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

டெட்ரோசு அஸ்மாரா, எரித்திரியாவில், அதானோம் கெப்ரேயஸ் மற்றும் மெலாசு வெல்டேகாபீர் ஆகியோருக்குப் பிறந்தார். இவரது குடும்பமானது டைக்ரே மாகாணத்தின் எண்டெட்ரா அவ்ரஜ்ஜா பகுதியில் தனது ஆதியைக் கொண்டிருந்த காரணத்தால் மலேரியாவால் ஏற்படும் "தேவையற்ற துன்பம் மற்றும் இறப்பு" பற்றி முழுமையாக அறிந்திருந்தார். [7]

1986 ஆம் ஆண்டில், டெட்ரோஸ் அஸ்மாரா பல்கலைக்கழகத்தில் உயிரியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார் [15] இளைய பொது சுகாதார நிபுணராக டெர்க்கின் சுகாதார அமைச்சில் சேர்ந்தார். [16] மெங்கிஸ்டு ஹைலே மரியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, டெட்ரோஸ் பல்கலைக்கழகத்திற்குத் திரும்பினார். 1992 இல் லண்டன் பல்கலைக்கழகத்தின் லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசினிலிருந்து தொற்று நோய்களின் நோயெதிர்ப்புத் துறையில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றார். [4] 2000 ஆம் ஆண்டில், எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் மலேரியா பரவுதலில் அணைகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் சமுதலாய நலத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

ஆரம்ப கால தொழில் வாழ்க்கை[தொகு]

டைக்ரே பிராந்திய சுகாதார பணியகத்தின் தலைவர்[தொகு]

2001 ஆம் ஆண்டில், டைக்ரே பிராந்திய சுகாதார பணியகத்தின் தலைவராக டெட்ரோசு நியமிக்கப்பட்டார். [4] பணியகத்தின் தலைவராக, டெட்ரோஸ் பணியாற்றிய போது பிராந்தியத்தில் எய்ட்ஸ் பாதிப்பு 22.3% குறைப்பு மற்றும் மூளைக்காய்ச்சல் நிகழ்வுகளில் 68.5% குறைப்பு ஆகிய இலக்குகளை எட்டியது. பிராந்தியத்தின் பெரும்பாலான மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களுக்கு கணினிகள் மற்றும் இணைய இணைப்பை நிறுவி தகவல் தொழில்நுட்ப தொடர்பினை மேம்படுத்துவதற்கான ஒரு பிரச்சாரத்தை அவர் மேற்பார்வையிட்டார். முன்னதாக இத்தகைய வசதிகள் சுகாதாரத் துறையில் மேற்கொள்ளபப்படாமல் இருந்தது. சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கையை 50% அதிகரிக்க நடவடிக்கைகள் எடுத்தார். அம்மை நோய்த்தடுப்பு அனைத்து குழந்தைகளிலும் 98% ஆக உயர்த்தப்பட்டது. மேலும், 12 மாதங்களுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் மொத்த நோய்த்தடுப்பு மருந்து வழங்கல் 74% ஆக உயர்த்தப்பட்டது.

டைக்ரே பிராந்திய சுகாதார பணியகத்திற்கான அரசாங்க நிதியுதவியின் சதவீதம் 65% ஆக உயர்த்தப்பட்டது, வெளிநாட்டு நன்கொடையாளர்களின் சதவீதம் 35% ஆக குறைந்தது. ஒட்டுமொத்தமாக, 10 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் வாழும் மக்களில் 68.5% அளவிற்கு சுகாதார சேவைகளை வழங்கினர்.

மாநில சுகாதார அமைச்சர்[தொகு]

2003ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அவர் சுகாதாரத்துக்கான மாநில அமைச்சராக (துணை அமைச்சராக) நியமிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக பணியாற்றினார். [17] இந்த நேரத்தில்தான் அவர் சுகாதார மறுசீரமைப்பில் தனது இலட்சியத்தை வடிவமைக்கத் தொடங்கினார்.

சுகாதார அமைச்சர் (2005–2012)[தொகு]

மெலிஸ் ஜெனவரி என்ற பிரதமரால் அக்டோபர் 2005ஆம் ஆண்டில் டெட்ரோசு சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார். வறுமை, மோசமான உள்கட்டமைப்பு மற்றும் உலகளாவிய பொருளாதார நிலைமை ஆகியவற்றின் அடிப்படையில் சுகாதார அமைச்சகம் எதிர்கொள்ளும் பல சவால்கள் இருந்தபோதிலும், சுகாதார குறிகாட்டிகளின் முன்னேற்றம் எத்தியோப்பியாவில் "ஈர்க்கக்கூடியதாக" கருதப்பட்டது. [5] [6] [18] 2005-2008 காலகட்டத்தில், எத்தியோப்பிய சுகாதார அமைச்சகம் 4,000 சுகாதார மையங்களை கட்டியது. 30,000 க்கும் மேற்பட்ட சுகாதார விரிவாக்க தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்து மற்றும் பணியமர்த்தியது. மேலும், மருத்துவமனை நிர்வாக நிபுணர்களில் புதிய பணியாளர்களை உருவாக்கியது. மேலும், 2010 ஆம் ஆண்டில், எத்தியோப்பியாவை அமெரிக்க வெளியுறவுத்துறை அமெரிக்க உலகளாவிய சுகாதார முன்முயற்சி நாடுகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்தது. எத்தியோப்பியாவில் அமெரிக்கா புதுமையான உலகளாவிய சுகாதார முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும்.

2005 ஆம் ஆண்டில் பதவியேற்றதும், டெட்ரோசு ஒரு வலுவான தொலைநோக்குப் பார்வையுடன் ஒரு அமைச்சகத்தை பெற்றார். ஆனால், அந்த தொலைநோக்கினை பூர்த்தி செய்வதற்கான குறைவான அளவு திறனைக் கொண்டிருந்தார். [18] எச்.ஐ.வி / எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியா திட்டங்களில் கவனம் செலுத்துவதற்கு நன்கொடையாளர் சமூகத்தை அமைச்சகம் எதிர்பார்த்திருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Curriculum Vitae: Dr Tedros Adhanom Ghebreyesus". உலக சுகாதார அமைப்பு இம் மூலத்தில் இருந்து 14 February 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170214234937/http://www.who.int/dg/election/cv-tedros-en.pdf. 
  2. "Tedros Adhanom Ghebreyesus elected new head of WHO". 2017-05-23 இம் மூலத்தில் இருந்து 2019-07-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190714173433/https://www.statnews.com/2017/05/23/who-director-general-tedros/. 
  3. 3.0 3.1 "Dr Tedros takes office as WHO Director-General". உலக சுகாதார அமைப்பு. 1 July 2017 இம் மூலத்தில் இருந்து 18 April 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180418200413/http://www.who.int/mediacentre/news/releases/2017/tedros-director-general/en/. 
  4. 4.0 4.1 4.2 "Biography of the Minister". Ethiopian Ministry of Foreign Affairs இம் மூலத்தில் இருந்து 5 July 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120705210221/http://www.mfa.gov.et/theMinstrMore.php?pg=2. 
  5. 5.0 5.1 The Forum at Harvard School of Public Health. "Participants: Tedros Adhanom Ghebreyesus". Harvard University இம் மூலத்தில் இருந்து 13 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/30131013232955/http://theforum.sph.harvard.edu/expert-participants/tedros-adhanom-ghebreyesus/. 
  6. 6.0 6.1 "Interview with Dr. Tedros Adhanom Ghebreyesus, Ethiopia's Minister of Health". USAID. https://2012-2017.usaid.gov/news-information/frontlines/child-survival-ethiopia-edition/interview-dr-tedros-adhanom-ghebreyesus?page=1. 
  7. 7.0 7.1 Morris, Kellu (24 April 2010). "Tedros Adhanom Ghebreyesus—a Global Fund for the health MDGs". The Lancet 375 (9724): 1429. doi:10.1016/s0140-6736(10)60609-5. பப்மெட்:20417848. http://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(10)60609-5/fulltext. பார்த்த நாள்: 18 June 2013. 
  8. "W.H.O. Elects Ethiopia's Tedros as New Director General". The New York Times இம் மூலத்தில் இருந்து 2017-05-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170523214503/https://www.nytimes.com/2017/05/23/health/tedros-world-health-organization-director-general.html. பார்த்த நாள்: 2017-05-23. 
  9. "World Health Assembly elects Dr Tedros Adhanom Ghebreyesus as new WHO Director-General". Geneva: World Health Organization. 23 May 2017 இம் மூலத்தில் இருந்து 25 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170525003359/http://www.who.int/mediacentre/news/releases/2017/director-general-elect/en/. 
  10. 'Dr Tedros', the WHO chief leading the fight against the pandemic (Reuters)
  11. Imogen Foulkes, Tedros Adhanom Ghebreyesus: The Ethiopian at the heart of the coronavirus fight, BBC News, 4 March 2020. "Some WHO watchers have criticised the effusive praise heaped on China for its containment measures."
  12. COVID-19 Is Officially A Pandemic, Declares World Health Organization NPR - March 11, 20204:09 PM ET
  13. Jeremy Page, Betsy McKay, The World Health Organization Draws Flak for Coronavirus Response, The Wall Street Journal, 12 February 2020. "Some foreign government officials and public-health experts believe that Dr. Tedros, a former Ethiopian foreign minister, delayed declaring the global emergency last month partly in deference to China's concerns."
  14. Bradley A. Thayer, Lianchao Han, China and the WHO's chief: Hold them both accountable for pandemic, The Hill, 17 March 2020. "Now, with more than 150,000 confirmed cases globally and more than 5,700 deaths, the question is why it took so long for the WHO to perceive what many health officials and governments had identified far earlier."
  15. "Ethiopia extends health to its people. An interview with Dr Tedros A Ghebreyesus.". Bulletin of the World Health Organization (the World Health Organization) 87 (7). July 2009. http://www9.who.int/bulletin/volumes/87/7/09-050709/en/. பார்த்த நாள்: 2020-03-21. 
  16. "Who Will Lead WHO?". The Rockefeller University. 2017-06-05. http://selections.rockefeller.edu/who-will-lead-who/. 
  17. "Ghebreyesus – Ministerial Leadership Initiative for Global Health" இம் மூலத்தில் இருந்து 2014-03-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140307101355/http://www.ministerial-leadership.org/content/ghebreyesus. 
  18. 18.0 18.1 Bradley, Elizabeth; Taylor, Lauren; Skonieczny, Michael; Curry, Leslie (Fall 2011). "Grand Strategy and Global Health: The Case of Ethiopia". Global Health Governance V (1). http://publichealth.yale.edu/news/archive/2011/108272_Bradley-et-al_Grand-Strategy-and-Global-Health-The-Case-of-Ethiopia_Fall-2011.pdf. பார்த்த நாள்: 18 June 2013. 

வெளி இணைப்புகள்[தொகு]

டெட்ரோசு அதானோம் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி


"https://ta.wikipedia.org/w/index.php?title=டெட்ரோசு_அதானோம்&oldid=3671073" இருந்து மீள்விக்கப்பட்டது