டி. கே. கபாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டி. கே. கபாலி (T. K. Kapali, இறப்பு: திசம்பர் 20, 2007) ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

இவர் மைலாப்பூர், மந்தைவெளி ஆகிய பகுதிகளில் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். இவர் 1977 சட்டமன்றத் தேர்தலில் சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] 1980 சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2] இத்தேர்தலில் இவர் நாஞ்சில் கி. மனோகரனைத் தோற்கடித்தார்.[3]

இறப்பு[தொகு]

2007ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் நாள் தன்னுடைய 78ஆம் வயதில் இவர் உயிர் நீத்தார். இவருக்கு ஆறு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._கே._கபாலி&oldid=2574960" இருந்து மீள்விக்கப்பட்டது