டி. என். கோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டி. என். கோசு (Dhruba Narayan Ghosh) என்பவர் அரசுத் துறை, வங்கி மற்றும் நிதித்துறை ஆகியவற்றில் உயர்மட்ட பதவிகள் வகித்த அதிகாரி ஆவார்.[1]

வகித்த பதவிகள்[தொகு]

லார்சன் அன்ட் டூப்ரோ, பிலிப்சு இந்தியா, பியர்லஸ், இக்ரா, பாரதிய ஸ்டேட் வங்கி ஆகிய குழுமங்களில் தலைவராக இருந்தார் மேலும் லக்னோவில் உள்ள ஐ. ஐ. எம். என்னும் இந்திய மேலாண்மை நிறுவனத்தில் ஆளுநர்கள் போர்டின் தலைவராகவும் இருந்தார் 1969 ஆம் ஆண்டில் 14 வங்கிகளைப் பிரதமர் இந்திரா காந்தி அரசு நாட்டுடைமை ஆக்கியபோது, அவசரச் சட்டம் கொண்டு வருவதில் டி . என். கோசு முக்கியப் பங்காற்றினார்.

எழுதிய நூல்கள்[தொகு]

அரசும் அதன் பொறுப்புகளும், வர்த்தகமும் அரசியலும், வருத்தம் எதும் இல்லை [2] ஆகிய மூன்று நூல்களை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். பொருளியல் மற்றும் அரசியல் என்னும் வாராந்தார இதழில் டி .என்.கோசு பங்காற்றி வருகிறார்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._என்._கோசு&oldid=2711489" இருந்து மீள்விக்கப்பட்டது