டிரைபுளோரோமெத்தாக்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டிரைபுளோரோமெத்தாக்சி (Trifluoromethoxy) என்பது –O–CF3 .என்ற வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதி வினைக்குழுவாகும். இதை ஒரு மெத்தாக்சி குழு –O–CH3 என்று கருதலாம். மெத்தாக்சி குழுவிலுள்ள ஐதரசன் அணுக்கள் புளோரின் அணுக்களால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டால் உருவாகும் குழு டிரைபுளோரோமெத்தாக்சி எனப்படுகிறது. அல்லது ஒரு டிரைபுளோரோ மெத்தில் குழு ஆக்சிசன் அணு பாலத்தால் எஞ்சியிருக்கும் மூலக்கூறுடன் இணைக்கப்பட்டிருப்பதையும் குறிக்கும்[1]. இவ்வேதி வினைக்குழுவைக் கொண்டிருக்கும் சேர்மங்கள் மருந்துவகைப் பொருட்களுடன் சில தொடர்புகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. ரிலுசோல் இதற்கு ஓர் உதாரணமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Synthetic Approaches to Trifluoromethoxy-Substituted Compounds A. Tlili, F. Toulgoat, T. Billard, Angew. Chem. Int. Ed. 2016, 55, 11726. எஆசு:10.1002/anie.201603697