டால்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டால்டா தாவர நெய்

டால்டா (Dalda) என்பது தெற்காசியாவில் பிரபலமான தாவர எண்ணெய் (ஹைட்ரஜனேற்றப்பட்ட காய்கறி சமையல் எண்ணெய்) நிறுவனம் ஆகும்.

வரலாறு[தொகு]

டாடா என்பது 1930 ஆம் ஆண்டில் பசுவின் பாலில் தயாரிக்கப்பட்ட தேசி நெய்க்கு பதிலியாக, மலிவாக வந்த வனஸ்பதி நெய்யினை இறக்குமதி செய்த டச்சு நிறுவனம் ஆகும்.முந்தைய ஆங்கிலேய காலனித்துவ நாட்களில் இந்தியாவில் தேசி நெய் ஒரு விலையுயர்ந்த பொருளாக இருந்தது,பொதுமக்களுக்கு எளிதில் மலிவு விலையில் கிடைக்ககூடியதாய் இல்லை. இந்திய குடும்பங்களிலும் குறைவாகவே பயன்படுத்தப்பட்டது, எனவே மலிவான விலையில் அதற்கு தேவை இருந்தது.

1931 ஆம் ஆண்டு ஹிந்துஸ்தான் வனஸ்பதி உற்பத்தி நிறுவனம் செயற்கை வனஸ்பதியை தயாரிக்க டாடாவுடன் இணைக்கப்பட்டது.1930 ஆம் ஆண்டின் முற்பகுதிவரை இந்தியாவில் கிடைத்த ஹைட் ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெய் ஹுசைன் டாடா மற்றும் ஹிந்துஸ்தான் வனஸ்பதி நிறுவனம் ஆகியவற்றால் இறக்குமதி செய்யப்பட்டது.(தற்பொழுது இந்நிறுவனம் ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் யுனிலீவர் பாக்கிஸ்தான் எனப்படுகிறது)[1]ஹிந்துஸ்தான் வனஸ்பதி நிறுவனம் ஹைட்ர ஜனேற்றப்பட்ட தாவர எண்ணெய் உற்பத்தி செய்ய திட்டமிட்டது எனவெ டால்டா என்ற பெயரில் புதிய ஹைட் ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெய் நிறுவனம் உருவாகியது.அதற்கு முன்பு வரை ஹுசைன் டாடா என்ற பெயரில் இறக்குமதி செய்த பொருளை விற்பனை செய்து வந்தனர். லீவர் பிரதர்ஸின் 'எல்' என்ற எழுத்தை புதிய நிறுவனம் பெயரில் டால்டாவாக மாற்றுவதற்கு நிறுவனத்தை அனுமதிக்க லிவர் பிரதர்ஸ் தனது ஒத்துழைப்பைக் கோரினார். பெயர் மாற்றத்திற்கு சம்மதித்தார். டால்டா 1937 இல் அறிமுகம் செய்யப்பட்டது இது இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் நீண்ட காலமாக இயங்கும் நிறுவங்களில் ஒன்றாகும்.

1939 ஆம் ஆண்டில் தி டால்டா திரைப்படம் என்பது டால்டா என்ற வனஸ்பதி (சமையல் கொழுப்பு) நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் பிரச்சாரத்திற்க்காக உருவாக்கப்பட்ட ஒரு விளம்பர படமாகும்.லிண்டாஸ் என்பர் இந்தியாவின் பல் ஊடக விளம்பர படத்தினை உருவாக்கினார்.[2][3]

இந்தியாவில்[தொகு]

2003 ஆம் ஆண்டு, பங்கே லிமிடெட், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து டால்டா நிறுவனத்தை ரூ.100 கோடிக்குக் கீழ் வாங்கியது. பின்னர் பங்கே டால்டாவை ஒரே நிறுவனமாக உருவாக்கி, புவியியல் அடிப்படையில் பல்வேறு வகையான சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களை (சோயாபீன், சூரியகாந்தி, பால்மோலிவ் போன்றவை) விற்பனை செய்யத் தொடங்கினார்கள்.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டால்டா&oldid=3670717" இருந்து மீள்விக்கப்பட்டது