டாங்கிரெக் மலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Addbot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:03, 8 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 14 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
தாய்லாந்தில் இருந்து டாங்கிரெக் மலைகளின் தோற்றம்

டாங்கிரெக் மலைகள் (Dângrêk Mountains, Chuor Phnom Dângrêk; தாய்: ทิวเขาพนมดงรัก, Thiu Khao Phanom Dongrak), என்பது கெமரில் உள்ள தாழ்பிரதேச மலைத்தொடர் ஆகும். இதன் சராசரி உயரம் 500 மீட்டர்கள். இம்மலைத் தொடர் கம்போடியா - தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ளது. டாங்கிரெக்கின் பெரும் பகுதி வடக்கு கம்போடியாவில் உள்ளது. இதன் அதிகூடிய உயரம் கடல் மட்டத்தில் இருந்து 753 மீட்டர்கள் (2,470 அடி) ஆகும்.

டாங்கிரெக் மலைகள் வடக்கு தாய்லாந்தில் மேக்கொங் ஆற்றிலிருந்து மேற்குத் திசையாக 200 மைல்கள் (320 கிமீ) தூரம் பரந்திருக்கிறது[1].

புகழ்பெற்ற கெமர் இந்து சிவன் கோயிலான பிரசாத் பிரா விகார் இம்மலைகளில் கம்போடிய எல்லையில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாங்கிரெக்_மலைகள்&oldid=1350494" இலிருந்து மீள்விக்கப்பட்டது