டயர் ஸ்ட்ரெய்ட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Dire Straits
Playing in Norway in October 1985
From L-R, Guy Fletcher (behind), John Illsley, Mark Knopfler & Jack Sonni
பின்னணித் தகவல்கள்
பிறப்பிடம்Newcastle, England
இசை வடிவங்கள்Rock
இசைத்துறையில்1977–1995
வெளியீட்டு நிறுவனங்கள்Phonogram, Vertigo, Warner Bros. (U.S.)
இணைந்த செயற்பாடுகள்The Notting Hillbillies, Michael Brecker, Sting

டயர் ஸ்ட்ரெய்ட்ஸ் (Dire Straits) என்பது ஒரு பிரிட்டிஷ் ராக் இசைக்குழுவாகும். இந்த இசைக்குழுவானது மார்க் நாஃப்லெர் (பாடகர் மற்றும் முன்னணி கிட்டார் கலைஞர்), அவரது இளைய சகோதரர் டேவிட் நாஃப்லெர் (ரிதம் கிட்டார் மற்றும் பாடகர்), ஜான் இல்ஸ்லே (பேஸ் கிட்டார் மற்றும் பாடகர்) மற்றும் பிக் விதெர்ஸ் (டிரம்ஸ் மற்றும் முரசு போன்ற கருவியைத் தட்டுதல்), ஆகியோரால் நிறுவப்பட்டதாகும். 1977 மற்றும் 1995 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இயங்கிக் கொண்டிருந்த இந்த இசைக்குழுவிற்கு எட் பெக்னெல் மேலாளராக இருந்தார். புன்க் ராக் முன்னணியில் இருந்த காலத்தில் இந்த இசைக்குழு நிறுவப்பட்டாலும் டயர் ஸ்ட்ரெய்ட்ஸ் சாதாரணமான பாணியையே அதிகமாக இயற்றியது. இருந்தபோதிலும் அவர்களது இசையானது 1970 ஆம் ஆண்டுகளில் அதிகமாக இயற்றப்பட்ட ஸ்டேடியம் ராக்கில் சோர்வுற்றிருந்த பார்வையாளர்களுக்கு புத்துணர்வை அளித்தது.[சான்று தேவை] அவர்களது ஆரம்பகால நாட்களில் மார்க் மற்றும் டேவிட் இருவரும் அவர்களது இசையைப் புறக்கணிக்கும் படி பொது விடுதி உரிமையாளர்களிடம் வேண்டினர். அதனால் வழக்கமான வாடிக்கையாளர்கள் இசைக்குழுவினர் இசைக்கும் போது கலந்துரையாடுவர். இது அவர்களது எளிமையான நடத்தையின் அறிமுகமாக அமையும். ராக் அண்ட் ரோலுக்கு ஒரு வித்தியாசமான தனி-ஈர்ப்பை ஏற்படுத்தியது காரணமாக டயர் ஸ்ட்ரெய்ட்ஸ் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது. இதனுடன் அவர்களது முதல் ஆல்பம் உலகளவில் அநேக-பிளாட்டினைத்தை அடைந்தது.

இசைக்குழுவின் தொழில் வாழ்க்கை முழுவதும் மார்க் நாஃப்லெர் பாடலாசிரியராக இருந்தார். மேலும் குழுவை இயக்கும் ஒரு உந்து விசையாகவும் செயல்பட்டார். "சுல்தான்ஸ் ஆஃப் சுவிங்", "லேடி ரைட்டர்", "ரோமியோ அண்ட் ஜூலியட்", "டியூனல் ஆஃப் லவ்", "டெலிகிராஃப் ரோடு", "பிரைவேட் இன்வெஸ்டிகேசன்ஸ்", "மனி ஃபார் நத்திங்", "வால்க் ஆஃப் லைஃப்", "சோ ஃபார் அவே", "பிரதர்ஸ் இன் ஆர்ம்ஸ்", "ஆன் எவ்ரி ஸ்ட்ரீட்", "யுவர் லேட்டஸ்ட் ட்ரிக்" மற்றும் "காலிங் எல்விஸ்" உள்ளிட்ட பாடல்கள் இசைக்குழுவின் சிறப்பாக அறியப்பட்ட பாடல்கள் ஆகும். இன்றைய தேதிக்கு டயர் ஸ்ட்ரெய்ட்ஸ் மற்றும் மார்க் நாஃப்லெர் 120 மில்லியன் ஆல்பங்களுக்கும் அதிகமாக விற்றுள்ளனர்.[1][2]

வரலாறு[தொகு]

ஆரம்ப காலங்கள் மற்றும் முதல் இரண்டு ஆல்பங்கள் (1977-1979)[தொகு]

மார்க் நாஃப்லெர் அவரது இளைய சகோதரர் டேவிட் நாஃப்லெர், ஜான் இல்ஸ்லே மற்றும் பிக் வித்தெர்ஸ் ஆகியோர் 1977 ஆம் ஆண்டு இந்த இசைக்குழுவை நிறுவினர்.

டயர் ஸ்ட்ரெய்ட்ஸ் (இசை நண்பரும் டிரம்மருமான பிக் வித்தெர்ஸ் மூலமாக இப்பெயர் வழங்கப்பட்டது) 1977 ஆம் ஆண்டின் போது ஐந்து பாடல்களைக் கொண்ட டெமோ நாடாவைப் பதிவு செய்தனர். அதில் அவர்களது வருங்கால உலகளாவிய வெற்றித் தனிப்பாடலான "சூல்தான்ஸ் ஆஃப் சுவிங்கும்" இடம்பெற்றிருந்தது. "வைல்ட் வெஸ்ட் எண்ட்", "சூல்தான்ஸ் ஆஃப் சுவிங்", "டவுன் டூ த வாட்டர்லைன்", "ஸ்கேர்டு லவ்விங்" (டேவிட் நாஃப்லெரின் பாடல்) மற்றும் "வாட்டர் ஆஃப் லவ்" போன்ற அப்போதைய பிரபல டெமோ பதிவுகளைக் கொண்டு ஐந்து பாடல்கள் இருந்தன. அவர்கள் அந்தப் பதிவை BBC ரேடியோ லண்டனில் "ஹான்கி டான்க்" எனப்படும் வானொலி நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த DJ சார்லி கில்லெட்டிடம் எடுத்துச் சென்றனர். அவரிடம் இருந்து இசைக்குழுவினர் அந்தப் பாடல்களின் பேரில் அறிவுரையை விரும்பினர். ஆனால் கில்லெட் அந்த இசை மிகவும் விரும்பினார். மேலும் அவரது நிகழ்ச்சியில் "சூல்தான்ஸ் ஆஃப் சுவிங்கை" இசைத்தார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு டயர் ஸ்ட்ரெய்ட்ஸ் போனோகிராம் ரெக்கார்ட்ஸுடன் இசைப்பதிவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.[3] இந்த இசைக்குழுவினர் வெற்றியடைய மாட்டார்கள் என நம்பி 1970 ஆம் ஆண்டுகளில் இசைக்குழுவை விட்டுப் பிரிந்து சென்ற தொடக்க டிரம்மரான பேட்ரிக் ஸ்காட்டிற்காக தாமதமாக இந்த இசைக்குழு வெற்றியடைந்தது.

1977 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர்கள் BBC ரேடியோ லண்டனுக்காக "சவுத்பவுண்ட் அகைன்", "இன் த கேலரி" மற்றும் "சிக்ஸ் பிளேடு நைஃப்" ஆகிய டெமோ நாடாக்களைப் பதிவு செய்தனர். மேலும் நவம்பரில் "செட்டிங் மீ அப்", "ஈஸ்ட்பவுண்ட் டிரையின்" மற்றும் "ரியல் கேல்" போன்ற டெமோ நாடாக்களைப் பதிவு செய்தனர்.

இந்தக் குழுவின் முதல் ஆல்பமான டயர் ஸ்ட்ரெய்ட்ஸ், 1978 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மேற்கு லண்டனில் பேசிங் ஸ்ட்ரீட் ஸ்டுடியோஸில் £12,500 மதிப்பிற்குப் பதிவு செய்யப்பட்டது.[4] இந்த ஆல்பம் முஃப் வின்வுட்டால் தயாரிக்கப்பட்டு போனோகிராமின் கிளை நிறுவனமான வெர்டிகோ ரெக்கார்ட்ஸ் மூலமாக யுனைட்டடு கிங்டத்தில் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட போது இந்த ஆல்பத்திற்கு சிறிது விளம்பரம் கிடைத்தது. ஆனால் இந்த ஆல்பம் நன்கு வரவேற்கப்படவில்லை. எனினும் நியூயார்க் நகரத்தில் வார்னர் பிரதர்ஸ் ரெக்கார்ட்ஸில் A&R விற்பனையாளர் காரின் பெர்க்கின் பார்வைக்கு இந்த ஆல்பம் வந்தது. இதைப் போன்ற இசையையே பார்வையாளர்கள் தேடிக்கொண்டிருக்கின்றனர் என்பதை அவர் உணர்ந்தார். ஆனால் அவரது துறையில் ஒரே ஒரு நபர் மட்டுமே முதலில் அதை ஏற்றுக்கொண்டார்.[4] இந்த ஆல்பத்தில் பல பாடல்கள் நீயூகேஸ்டில் லீட்ஸ் மற்றும் லண்டன் நகரங்களில் மார்க் நாஃப்லெரின் அனுபவங்களை எதிரொலித்தது. "டவுன் டூ த வாட்டர்லைன்" என்ற பாடல் நியூகேஸ்டிலில் வாழ்க்கையின் பிரதிகளை நினைவுகூர்ந்தது; "இன் த கேலரி" என்ற பாடலானது (ஸ்டீவ் பிலிப்ஸின் தந்தையான) லீட்ஸ் சிற்பி/கலைஞரான ஹாரி பிலிப்ஸை சித்தரித்தது; "வைல்ட் வெஸ்ட் எண்ட்" மற்றும் "லயன்ஸ்" போன்ற பாடல்கள் தலைநகரத்தில் நாஃப்லெரின் ஆரம்ப கால நாட்களை எடுத்துரைத்தது.

அதே ஆண்டு டால்க்கிங் ஹெட்ஸின் தொடக்க இசைக்குழுவாக டயர் ஸ்ட்ரெய்ட்ஸ் நிகழ்ச்சிகள் நடத்தத் தொடங்கியது. "சூல்தான்ஸ் ஆஃப் சுவிங்" மறு-வெளியீட்டிற்குப் பிறகு UK தரவரிசைகளில் இப்பாடல் உயரத் தொடங்கியது. வார்னர் பிரதர்ஸ் ரெக்கார்ட்ஸுடன் அமெரிக்கப் பதிவு ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு இது வழிவகுத்தது. மேலும் 1978 ஆம் ஆண்டு இறுதியில் டயர் ஸ்ட்ரெய்ட்ஸ் அவர்களது சொந்தத் தலைப்பைக் கொண்டு உலகளவில் ஆல்பம் வெளியிட்டது. அவர்கள் அமெரிக்காவில் அதிகப்படியான கவனத்தைப் பெற்றனர். மேலும் கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் தரவரிசைகளில் உயர்ந்த நிலையை அடைந்தனர். அவர்களது தொடக்க ஆல்பமானது ஒவ்வொரு ஐரோப்பிய நாடுகளிலும் சிறந்த பத்தை அடைந்தது.[3]

அதைத் தொடர்ந்து வந்த ஆண்டில் டயர் ஸ்ட்ரெய்ட்ஸ் அவர்களது முதல் வட அமெரிக்க நிகழ்ச்சிகளுக்கு பயணமானார்கள். அவர்கள் 38-நாட்களில் 51 விற்பனையான நிகழ்ச்சிகளில் இசையாற்றினர். "சூல்தான் ஆஃப் சுவிங்" பாடலானது தரவரிசைகளில் அமெரிக்காவில் நான்காவது இடத்தையும் யுனைட்டடு கிங்டத்தில் எட்டாவது இடத்தையும் அடைந்தது. இப்பாடலானது டயர் ஸ்ட்ரெய்ஸின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக அமைந்தது. மேலும் இசைக்குழுவின் நேரடித் தொகுப்பின் இணைக்கப்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸில் இசைக்குழுவின் திறமையைக் கண்ட பாப் டைலன் அதில் மிகவும் ஈர்க்கப்பட்டு அவரது அடுத்த ஆல்பமான ஸ்லோ ட்ரைன் கம்மிங்கில் இசையமைப்பதற்கு மார்க் நாஃப்லெருக்கும் டிரம்மர் பிக் வித்தெருக்கும் அழைப்பு விடுத்தார்.

1978 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாசாவுவில் காம்பஸ் பாயின்ட் ஸ்டுடியோவில் இசைக்குழுவின் இரண்டாவது ஆல்பமான கம்யூனிக்கின் பதிவு பருவங்கள் தொடங்கியது. ஜெர்ரி வெக்ஸ்லர் மற்றும் பாரி பெக்லெட் மூலமாகத் தயாரிக்கப்பட்ட கம்யூனிக் 1979 ஆம் ஆண்டு ஜுன் மாதம் வெளியானது. மேலும் ஜெர்மன ஆல்பத் தரவரிசைகளில் முதல் இடத்தை அடைந்தபோது அதே சமயம் டயர் ஸ்ட்ரெய்ட்ஸ் மூன்றாவது இடத்தை அடைந்தது. "லேடி ரைட்டர்" என்ற பாடல் இடம்பெற்றிருந்த இரண்டாவது ஆல்பமானது ஏதோ சிலவகையில் மிகவும் மெருகேற்றப்பட்டிருந்தாலும் முதல் ஆல்பத்தைப் போன்று ஒரே வண்ணமுடைய இசையே இதில் தொடர்ந்து வந்திருந்தது. மேலும் தொடக்க டிராக்கான "ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் த வெஸ்ட்டில்" நாஃப்லெரின் பாடல் வரிகளில் மிகவும் விரிவுபடுத்தப்பட்ட எதிர்காலம் தெரிந்தது.[5] எனினும் வருகிற ஆண்டில் இசைக்குழுவினரின் மாற்றத்துடன் இணைந்து இதன் தாக்கம் மாறுதலடையத் தொடங்கியது.

அதிகரிக்கப்பட்ட இசை சார்ந்த உயர்வு (1980-1984)[தொகு]

அந்த ஆண்டின் அக்டோபரில் அவர்களது மூன்றாவது ஆல்பமான மேக்கிக் மூவிஸை வெளியிடுவதற்காக 1980 ஆம் ஆண்டு ஜூலை முதல் ஆகஸ்ட் மாதங்கள் வரை டயர் ஸ்ட்ரெய்ட்ஸ் டிராக்குகளைப் பதிவு செய்தனர். அந்தப் பதிவுப் பருவத்தின் போது கிட்டார் கலைஞர் டேவிட் நாஃப்லெர் அவரது தனிப்பட்ட இசைவாழ்க்கையைத் தொடங்குவதற்காக இசைக்குழுவை விட்டு வெளியேறினார். இந்தப் பருவமானது சிட் மெக்ஜின்னிஸின் ரிதம் கிட்டார் மற்றும் புரூஸ் ஸ்ப்ரிங்டீனின் ஈ ஸ்ட்ரீட் இசைக்குழுவில் இருந்து கீபோர்டு கலைஞர் ராய் பிட்டனுடன் தொடர்ந்தது. ஜிம்மி இயோவின் இந்த ஆல்பத்தைத் தயாரித்தார். நாஃப்லெரும் இந்த ஆல்பத்திற்கு செலவு செய்தார். பதிவுப் பருவங்கள் நிறைவடைந்த பிறகு ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நிகழ்ச்சிகளுக்கான முழு நேர உறுப்பினர்களாக கீபோர்டு கலைஞர் ஆலன் க்லார்க் மற்றும் கலிபோர்னியக் கிட்டார் கலைஞர் ஹால் லிண்டேஸ் ஆகியோர் டயர் ஸ்ட்ரெய்ட்ஸில் இணைந்தனர்.[4]

மேக்கிங் மூவிஸ் மிகவும் கடினமான ஒழுங்குமுறைகளுடன் நீண்ட பாடல்களைக் கொண்டிருந்தது. இசைக்குழுவின் எஞ்சிய இசைவாழ்க்கை முழுவதும் இதே பாணியே தொடர்ந்தது. இந்த ஆல்பத்தின் "ரோமியோ அண்ட் ஜூலியட்" தனிப்பாடல் தரவரிசையில் மிகவும் வெற்றியடைந்தது. மேலும் ரிச்சர்டு ரோகர்ஸ் மற்றும் ஆஸ்கார்ர் ஹம்மெர்ஸ்டெயின் II மூலமான "த கரோசெல் வால்ட்ஸின்" அறிமுகத்துடன் ஆல்பத்தின் நீளமான தொடக்க டிராக்கான "டியூனல் ஆஃப் லவ்" என்ற பாடல் ஆன் ஆஃபீசர் அண்ட் எ ஜெண்டில்மேன் திரைப்படத்தில் இடம்பெற்றது. மேலும் குழுவினரால் மிகவும் விரும்பப்படும் பாடல்களில் ஒன்றாகவும் நேரடி நிகழ்ச்சிகளில் விருப்பமான பாடலாகவும் இது அமைந்தது. UK ஆல்பத் தரவரிசைகளில் மேக்கிங் மூவிஸ் 4வது இடத்தை அடைந்தது.

டயர் ஸ்ட்ரெய்ட்ஸின் நான்காவது ஸ்டுடியோ ஆல்பமான லவ் ஓவர் கோல்ட், 1982 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானபோது நன்கு வரவேற்பைப் பெற்றது. மேலும் யுனைட்டடு கிங்டத்தில் # 1 இடத்தையும் அடைந்தது. லண்டனில் நாஃப்லெரின் பழைய கவுன்சில் குடியிருப்பு ஜன்னலில் இருந்து பார்த்த கிராஃப்டி மூலமாக இந்தத் தலைப்பு ஈர்க்கப்பட்டது. மார்க் நாஃப்லெர் மூலமாக தனிப்பட்ட முறையில் தயாரிக்கப்பட்ட டயர் ஸ்ட்ரெயிட்ஸின் இந்த முதல் ஆல்பத்தில் மிக நீளமான பாடல்களையும் சூழ்நிலைக்குரிய இசைக்கருவி வாசிப்புகளையும் கொண்டிருந்தன. "பிரைவேட் இன்வெஸ்டிகேசன்ஸ்" இதன் முக்கியமான தரவரிசை வெற்றியாக இருந்து, யுனைட்டடு கிங்டத்தில் அவர்களது முதல் சிறந்த 5 வெற்றித் தனிப்பாடலாக அமைந்தது. இது கிட்டத்தட்ட ஏழு-நிமிட நேரத்திற்கு ஓடக்கூடியதாய் இருந்ததால் இரண்டாவது நிலையை அடைந்து இசைக்குழுவின் மற்றொரு பிரபலமான நேரடிப் பாடல்களில் ஒன்றாக அமைந்தது.

உலகத்தின் மற்ற பகுதிகளில் "இண்டஸ்ட்ரியல் டிசிஸ்" ஆல்பத்தின் முக்கியப்பாடலாக இருந்தது, இப்பாடல் சிறந்த 10 வெற்றியை அடைந்த கனடாவில் குறிப்பாக இவ்வாறு இருந்தது. மேலும் தலைப்பு டிராக்கான லவ் ஓவர் கோல்டில் இடம் பெற்றிருந்த 14-நிமிட-நீண்ட "டெலிகிராஃப் ரோடு" பாடல் வரிகளானது அமெரிக்க நகரமான டெட்ராய்டின் வளர்ச்சி மற்றும் மையப்பகுதியைப் பற்றிக் கூறியது. லவ் ஓவர் கோல்ட் வெளியான பிறகு முதல் ஆறு வாரங்களில் இரண்டு மில்லியன் பிரதிகள் விற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லவ் ஓவர் கோல்ட் வெளியான பிறகு விரைவில் டிரம்மரான பிக் வித்தெர்ஸ் இசைக்குழுவை விட்டு வெளியேறினார். அவருக்கு மாற்றாக ராக்பைலில் முன்பு பணியாற்றிக் கொண்டிருந்த டெர்ரி வில்லியம்ஸ் கொண்டுவரப்பட்டார்.

1983 ஆம் ஆண்டில் லவ் ஓவர் கோல்ட் இன்னும் ஆல்பத் தரவரிசைகளில் இடம்பெற்றிருக்கும் போதே எக்ஸ்டெண்டான்க்ஈபிளே (ExtendedancEPlay) எனத் தலைப்பிடப்பிட்ட நான்கு-பாடல் EP வெளியானது. இதில் வெற்றித் தனிப்பாடலான "டிவிஸ்டிங் பை த பூல்" இடம்பெற்றிருந்தது. இப்பாடல் UK மற்றும் கனடாவில் சிறந்த 20 ஐ அடைந்தது. டயர் ஸ்ட்ரெய்ட்ஸ் உலகச்சுற்றுலா நிகழ்ச்சிகளுக்கும் சென்றனர். 1983 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் லண்டனில் ஹாமெர்ஸ்மித் ஓடெனின் குழுவினரின் இரண்டு நேரடி நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்பட்ட ஆல்செமி: டயர் ஸ்ட்ரெய்ட்ஸ் லைவ்|அல்செம்மி]] என்ற இரட்டை ஆல்பத்தைத் தொடர்ந்து 1984 ஆம் ஆண்டில் இந்த சுற்றுலா நிகழ்ச்சி நடந்தது. ஸ்டியோ திருந்தங்கள் ஏதும் இல்லாமல் இது வெளியிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் VHS வெளியிடப்பட்டது.

1983 மற்றும் 1984 ஆண்டிகளின் போது மார்க் நாஃப்லெர் இசைக்குழுவிற்கு வெளியே பிற செயல்திட்டங்களிலும் ஈடுபட்டிருந்தார். லோக்கல் ஹீரோ மற்றும் கல் போன்ற திரைப்படங்களுக்கான இசையின் பாடல்களையும் அவர் எழுதினர். இவை ஆல்பங்களாகவும் வெளிவந்தன.

பிரதர்ஸ் இன் ஆர்ம்ஸ் காலப்பகுதி (1985-1986)[தொகு]

டயர் ஸ்ட்ரெய்ட்ஸ் அவர்களது ஐந்தாவது ஸ்டுடியோ ஆல்பமான பிரதர்ஸ் இன் ஆர்ம்ஸின் டிராக்குகளை 1984 இன் பிற்பகுதியில் மோன்ட்செரட்டில் ஏர் ஸ்டுடியோசில் பதிவு செய்யத் தொடங்கினர். இந்த ஆல்பமானது நாஃப்லெர் மற்றும் நெயில் டோர்ஃப்ஸ்மனால் தயாரிக்கப்பட்டது. முன்பு ராக்ஸி மியூசிக்குடன் பருவ இசைக்கலைஞராகவும் கல் சவுண்டிராக்கிலும் வேலை பார்த்த கை ஃப்லெட்சரை இரண்டாவது கீபோர்டு கலைஞராக சேர்த்ததுடன் மேற்கொண்டு தனிப்பட்ட மாறுதல்களும் நிகழ்ந்தன.[4] பதிவுப் பருவங்களின் போது கிட்டார் கலைஞர் ஹால் லிண்டெஸ் இசைக்குழுவை விட்டு வெளியேறினார். நியூயார்க் கிட்டார் கலைஞரான ஜேக் சோன்னி அவரது இடத்தில் நிரப்பப்பட்டார். எனினும் புதிய ஆல்பம் வெளியீட்டிற்கான அதிகாரப்பூர்வ இசைக்குழு உறுப்பினராக அவர் அறிவிக்கப்படவில்லை. அமெரிக்க ஜாஸ் உருவாக்கும் டிரம்மரான ஓமர் ஹாக்கிம் டிரம்ஸ் வாசிப்பதற்கு டெர்ரி வில்லியம்ஸுடன் இணைந்தார். இருவரும் ஆல்பத்திற்காகப் பங்காற்றினர்.[6]

1985 ஆம் ஆண்டில் யுனைட்டடு கிங்டத்தில் பிரதர்ஸ் இன் ஆர்ம்ஸ் அதிக விற்பனையடைந்த ஆல்பமாக பெயர் பெற்றது. மேலும் சர்வதேச அளவில் மிகப்பெரிய வெற்றியையும் அடைந்தது. இந்த ஆல்பத்தில் பல்வேறு தரவரிசைத் தனிப்பாடல்களும் இடம்பெற்றிருந்தன: "மனி ஃபார் நத்திங்", அமெரிக்காவில் முதலிடத்தையும் யுனைட்டடு கிங்டத்தில் நான்காவது இடத்தையும் அடைந்தது. "சோ ஃபார் அவே" (#19 U.S.), "பிரதர்ஸ் இன் ஆர்ம்ஸ்", "வால்க் ஆஃப் லைப்" (#7 U.S.) மற்றும் "யுவர் லேட்டஸ்ட் டிரிக்" ஆகிய பாடல்கள் தரவரிசையில் இடம்பெற்றிருந்தன. பிரிட்டனில் MTV இயற்றப்பட்ட எக்காலத்திற்கும் முதல் பாடலாக "மனி ஃபார் நத்திங்" அமைந்தது. மேலும் இப்பாடலில் த போலிஸில் இருந்து ஸ்டிங் மூலமாக கெளரவப் பாடகர்களும் இடம்பெற்றிருந்தனர். 1985 ஆம் ஆண்டில் 28வது ஆண்டு கிராமி விருதுகளில் இரட்டையர் அல்லது குழுப்பாடகர்களுடன் சிறந்த ராக் இசையையும் இது வென்றது.[7]

இந்த ஆல்பத்தின் தலைப்பு டிராக் உலகின் முதல் CD தனிப்பாடல் என தகவல் தெரிவிக்கப்பட்டது. லிவ் இன் '85 நிகழ்ச்சியின் லோகோவுடன் புகழ்பெற்ற ஊக்குவிப்பு இசையாக இது யுனைட்டடு கிங்டத்தில் வெளியானது. லிவ் இன் '86 நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியப் பகுதியும் நினைவுபடுத்தப்பட்டது. நான்கே டிராக்குகளை மட்டுமே கொண்டிருந்த இது மிகவும் அளவான ஓட்டத்தையே கொண்டிருந்தது. இதற்கிடையில் "வால்க் ஆஃப் லைப்" இசைக்குழுவின் மிகவும் வணிகரீதியான வெற்றிபெற்ற தனிப்பாடலாக யுனைட்டடு கிங்டத்தில் பெயர்பெற்று தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பெற்றது. "மனி பார் நத்திங்", "வால்க் ஆஃப் லைப்" மற்றும் "பிரதர்ஸ் இன் ஆம்ஸ்" உடனடியாய் நேரடி நிகழ்ச்சி விருப்பப் பாடல்களாக அமைந்தது.

பிரதர்ஸ் இன் ஆர்ம்ஸின் வணிகரீதியான வெற்றியானது மிகச்சிறப்பான நிகழ்வுக்கு காரணமாக அமைந்தது. அதாவது இந்த ஆல்பத்தின் முதல் வன் வட்டானது மில்லியன் பிரதிகளுக்கும் மேல் விற்றது. மேலும் CD வடிவத்தில் நிறுவப்பட்டதற்கு மிகப்பெரிய வரவேற்பும் கிடைத்தது. DDD[8] CDகளில் எக்காலத்திலும் வெளியிடப்பட்ட ஆல்பங்களில் இதுவும் ஒன்றாகும். முன்பு மேற்கொள்ளப்பட்ட வடிவங்களுக்கு முன்னணியாக இந்தப் புதிய தொழில்நுட்பமானது "கண்டிப்பாக வாங்க வேண்டிய" ஆல்பமாகக் கருதப்பட்டது. த பிரதர்ஸ் இன் ஆர்ஸ் CD ஆனது LP சமநிலையில் காணப்படாத பொருளைக் கொண்டிருந்த ஆல்பங்களில் முதலாவதாகும்; "மனி ஆஃப் நத்திங்"கின் வெட்டானது LP இல் இடம்பெற்றிருந்த பதிப்பைக் காட்டிலும், இது முழுமையான பதிப்பைக் கொண்டிருந்தது. உண்மையில் இந்த CD "வால்க் ஆஃப் லைப்பின்" விதிவிலக்குடன் தொடக்க LP இன் முதல் பகுதியில் அனைத்து டிராக்குகளும் இடம்பெற்ற விரிவுபடுத்தப்பட்ட பதிப்புகளைக் கொண்டிருந்தது. இந்தப் புதிய வன் வட்டானது குழுவின் முந்தைய ஆல்பங்களில் நாஃப்லெரின் அதிகக் கவனம் செலுத்துகிற தயாரிப்பின் மதிப்பை தெரிவித்தது. இதனால் முன்பிருந்த சில ரசிகர்களை இசைக்குழுவின் முழுமையான இசைத் தொகுப்பை மீண்டும் வாங்குவதற்கு வழிவகுத்தது.

இந்த ஆல்பத்தின் வெளியீடு வியக்கத்தக்க வகையில் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து 1985–86 உலக சுற்றுலா நிகழ்ச்சி நடந்தது. 25 ஏப்ரல் 1985 அன்று யூகோஸ்லவியாவின் (தற்போது குரோட்டியா) ஸ்பிலிட்டில் இதன் நிகழ்ச்சி தொடங்கியது. வெம்பிலே எரினாவில் 13-நைட் ரெசிடென்சியை இயற்றிக் கொண்டிருக்கையில் (மேலும் 10 ஜூலை நிகழ்ச்சியானது 2005 ஆம் ஆண்டு வெம்ப்லே டஸ் த வால்க் DVD இல் வெளியிடப்பட்டது), 13 ஜூலை 1985 அன்று மதியம் வெம்பிலே அரங்கத்தில் நேரடி உதவி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இசைக்குழுவினர் சாலையின் கீழே இடம்பெயர்ந்தனர். கெளரவ பாடகராக ஸ்டிங்குடன் "மனி ஃபார் நத்திங்" அவர்களது தொகுப்பில் இடம் பெற்றது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்டியில் பொழுதுபோக்கு மையத்தில் இந்த சுற்றுலா நிகழ்ச்சி நிறைவடைந்தது. இங்கு 21 இரவுகள் தொடர்ந்து நிகழ்ச்சி நடத்தியதற்கான சாதனையை இன்னும் டயர் ஸ்ட்ரெய்ட்ஸ் வைத்திருக்கிறது. 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்சிட்டியில் நடந்த நீட்டிக்கப்பட்ட நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சியானது பதிவு செய்யப்பட்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. மேலும் ஒரு பகுதி மேற்கத்திய பழங்குடியினரின் மொழிபெயர்ப்பான "சோ ஃபார் அவே"க்காகவும் நன்கு அறியப்பட்டது. பிரபல ஆஸ்திரேலிய நாட்டுப் பாடலான "வால்ட்ஜிங் மாட்லிடாவையும்" ஒத்திகையின்றி இசைக்குழுவினர் இயற்ற முயற்சித்தனர். இரண்டு ஆண்டுகாலங்களில் நூற்றுக்கும் மேலான மாறுபட்ட நகரங்களில் 247 நிகழ்ச்சிகளை டயர் ஸ்ட்ரெய்ட்ஸ் நடத்தியிருந்தது.

கூடுதலாக 1985 ஆம் ஆண்டில் ஜான் அஃபே மூலமாக நடத்தப்பட்ட பஞ்ச ஒழிப்பிற்கு பணம் திரட்டுவதற்கு லண்டனில் இருந்து கார்டோம் வரை இசைக்குழுவினர் நிகழ்ச்சிகள் நடத்தினர். பங்களித்தோர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற அங்கிகாரத்திற்காக பிரதர்ஸ் இன் ஆம்ஸ் தங்க வட்டை டயர் ஸ்ட்ரெய்ட்ஸ் நன்கொடையளித்தது.

அமெரிக்காவில் பிரதர்ஸ் இன் ஆர்ம்ஸ் அதே போன்ற வெற்றியைப் பெற்று பில்போர்டு பத்திரிகையின் சிறந்த பாப் ஆல்பங்கள் தரவரிசையில் ஒன்பது வாரங்கள் முதலிடத்தில் இருந்தது. மேலும் பல்-பிளாட்டினத்தை அடைந்து, 1986 ஆம் ஆண்டின் 5வது இடத்தில் நிறைவு செய்தது.

ஹைட்டஸ் (1987-1990)[தொகு]

1987 ஆம் ஆண்டில் தனிப்பட்ட செயல் திட்டங்கள் மற்றும் திரைப்பட சவுண்ட்டிராக்குகளில் மார்க் நாஃப்லெர் கவனத்தை செலுத்தத் தொடங்கினார். 1988 ஆம் ஆண்டு நெல்சன் மன்டேலா 70வது பிறந்தநாள் பாராட்டு நிகழ்ச்சிக்காக வெம்ப்லே அரங்கத்தில் டயர் ஸ்ட்ரெய்ட்ஸ் மீண்டும் இணைந்தனர். இதில் அவர்கள் தலைப்பு நிகழ்ச்சியாக இருந்தனர். அங்கு குழுவினர் எரிக் க்லாப்டனுடன்[9] இணைந்து அவரது வெற்றிப்பாடலான "வொண்டர்புல் டுநைட்டை" இசைக்குழுவுடன் இயற்றினர். மேலும் "ரோமியோ அண்ட் ஜூலியட்" மற்றும் "சூல்தன்ஸ் ஆஃப் சுவிங்"கின் ரிதம் கிட்டாரையும் இயற்றினர். அதன் பின்னர் விரைவில் வில்லியம்ஸ் இசைக்குழுவை விட்டு வெளியேறினார்.

செப்டம்பர் 1988 ஆம் ஆண்டில் டயர் ஸ்ட்ரெய்ட்ஸ் தற்காலிகமாகக் குழுவைக் கலைத்தனர். பிரதர்ஸ் இன் ஆர்ம்ஸ் ஆல்பத்தின் வியக்கத்தக்க வெற்றி மற்றும் சுற்றுலா நிகழ்ச்சிகள் குழு உறுப்பினர்களின் அதிகப்படியான பணி நெருக்கடி காரணமாக அதனுடனே சென்று விட்டன, மேலும் குழுவின் அதிகாரப்பூர்வமான பிரிவை நாஃப்லெர் அறிவித்தார். "அவர்களுக்கு ஓய்வு தேவை" என அதற்கு காரணம் தெரிவித்தார்.[3] மிகப்பெரிய வெற்றியடைந்த ஆல்பமான மனி ஃபார் நத்திங் அக்டோபர் 1988 ஆம் ஆண்டு வெளியானது மேலும் யுனைட்டடு கிங்டத்தில் #1 இடத்தை அடைந்தது.

மேலும் 1988 ஆம் ஆண்டில் நோட்டிங் ஹில் வைன் பாரில்[9] கை ஃப்லெட்சர், பிரெண்டன் குரோக்கர் மற்றும் ஸ்டீவ் பிலிப்ஸ் ஆகியோரை உறுப்பினராகக் கொண்ட நாட்டை மையமாகக் கொண்ட த நோட்டின் ஹில்பில்லிஸை நாஃப்லெர் உருவாக்கினார். த நோட்டிங் ஹில்பில்லிஸின் ஒரு ஆல்பமான மிஸ்ஸிங்... பிரிஸ்யூம்டு ஹேவிங் எ குட் டைம் அதில் இடம்பெற்றிருந்த "யுவர் ஓன் சிவீட் வே"யின் சிறிதளவான வெற்றியுடன் 1990 ஆம் ஆண்டு வெளியானது. அந்த ஆண்டில் எஞ்சிய நாட்களில் த நோட்டிங் ஹில்பில்லிஸ் நிகழ்ச்சிகளை நடத்தினர். மேலும் சாட்டர்டே நைட் லைவ்விலும் பங்குபெற்றனர்.

1990 ஆம் ஆண்டு கிட்டார் கலைஞர் செட் அட்கின்ஸ், நெக் அண்ட் நெக்குடன் கூட்டிணைவு செய்து கொண்டு நாஃப்லெர் மேற்கொண்டு அவரது நாட்டுப்புற இசைத் தாக்கத்தை வெளிப்படுத்தினார்.

1990 ஆம் ஆண்டில் நெப்வொர்த் விழாவில் "சாலிட் ராக்", "மனி ஃபார் நத்திங்" மற்றும் முன்பு எப்போதுமே கேட்டிராத "திங் ஐ லவ் யூ டூமச்" போன்ற மூன்று பாடல்களை டயர் ஸ்ட்ரெய்ட்ஸ் இயற்றியது. அதைத் தொடர்ந்து வந்த ஆண்டில் அவர்கள் மீண்டும் இணைவதற்கு முன்பு இந்த நிகழ்ச்சி நடந்ததாகும்.

மறு இணைவு மற்றும் இறுதி ஆல்பங்கள் (1991-1995)[தொகு]

1991 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நாஃப்லெர், ஜான் இல்ஸ்லே மற்றும் மேலாளர் எட் பிக்நெட் ஆகியோர் டயர் ஸ்ட்ரெட்ஸை மீண்டும் தொடங்குவதற்கு முடிவெடுத்தனர். இந்தக் குழுவில் நாஃப்லெர், இல்ஸ்ளே மற்றும் கீபோர்டு கலைஞர்களான ஆலன் கிலார்க் மற்றூம் கை ப்ஃலெட்சர் ஆகிய நான்கு உறுப்பினர்கள் இடம் பெற்றனர்.

இசைக்குழுவினர் புதிய ஆல்பத்திற்கான டிராக்குகளைப் பதிவு செய்யத் தொடங்கினர். இச்சமயம் ஸ்டீர் கிட்டார் கலைஞரான பால் பிரான்க்லீன், தாளம் தட்டுபவரான டேனி கம்மிங்ஸ், சாக்ஸாபோன் கலைஞர் கிரிஸ் ஒயிட் மற்றும் கிட்டார் கலைஞரான பில் பால்மர் ஆகிய பிற பருவ இசைக் கலைஞர்களும் அவர்களுடன் இணைந்தனர். மிகவும் சிறப்புக்குரிய அமெரிக்கப் பருவ டிரம்மரான ஜெஃப் போர்காரோ அப்பருவங்களுக்கான டிரம்களை வாசித்தார். ஆனால் இசைக்குழுவில் முழு நேரம் சேருவதற்கு அழைப்பு விடப்பட்ட போது டூட்டூக்கு அவருக்கு இருந்த பொறுப்பு காரணமாக அந்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

பிரதர்ஸ் இன் ஆர்ம்ஸ் வெளியாகி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 1991 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இசைக்குழுவின் இறுதி அசல் ஸ்டுடியோ ஆல்பமான ஆன் எவ்ரி ஸ்ட்ரீட் வெளியானது. ஆன் எவ்ரி ஸ்ட்ரீட் பரவலான வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கலவையான திறனாய்வுகளையும் மிதமான வெற்றியையுமே அடைந்தது. தொடக்க டிராக்கான "காலிங் எல்விஸ்" யுனைட்டடு கிங்டத்தில் முதல் தனிப்பாடலாக வெளியானது (இந்தப் பாடலுக்கான வீடியோவானது 1960 ஆம் ஆண்டிகளின் தொலைக்காட்சி நிகழ்ச்சியான தண்டர்பெர்ஸை சார்ந்து எடுக்கப்பட்டது). மேலும் தனிப்பாடல்களின் தரவரிசைகளில் சிறந்த 30களில் நுழைந்தது. மேற்கொண்டு அந்த ஆல்பத்தில் மூன்று தனிப்பாடல்கள் வெளியிடப்பட்டன. அதில் கடைசித் தனிப்பாடலான "த பக்கில்" பின்னணிப் பாடகரான வின்ஸ் கில் இடம்பெற்றிருந்தார். இசைக்குழுவில் முழு நேரம் பணியாற்றுவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை இவர் நிராகரித்தார். 'அண்டர்வெல்மிங்கைத்' தொடர்ந்து வருபவராக சில திறனாய்வாளர்கள் மூலமாக இந்தப் புதிய ஆல்பம் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. மேலும் பிரதர்ஸ் இன் ஆர்ம்ஸ் போன்று எங்கேயுமே இது விற்பனையாகவில்லை; எனினும் இது யுனைட்டடு கிங்டத்தில் # 1 இடத்தை அடைந்தது.

இசைக்குழுவின் உலக சுற்றுலா நிகழ்ச்சிக்குத் திட்டமிட்டு அவை 1992 ஆம் ஆண்டு இறுதி வரை நடந்த போது பருவ டிரம்மரான கிரிஸ் ஒயிட்டன் டயர் ஸ்ட்ரெய்ட்ஸில் சேர்ந்திருதார். இசைக்குழுவின் இறுதி சுற்றுலா நிகழ்ச்சியானது 1985–1986 ஆம் ஆண்டு நடந்த முந்தைய உலகச் சுற்றுலா நிகழ்ச்சியைப் போன்று வெற்றியடைவில்லையெனினும் இசைசார்ந்து மிகவும் விரிவுபடுத்தப்பட்டிருந்தது. மேலும் இச்சமயம் இதைப் போன்ற பெரிய நிகழ்ச்சிகள் நடத்தியது போதுமானது என மார்க் நாஃப்லெர் எண்ணினார். இது இசைக்குழுவை வீழ்ச்சியடையச் செய்தது. 9 அக்டோபர் 1992 அன்று ஸ்பெய்னில் உள்ள ஜரகோஜாவில் சுற்றுலாவின் இறுதி நிகழ்ச்சி மற்றும் கடைசி நிறுத்தத்தை இசைக்குழுவினர் மேற்கொண்டனர். மே 1993 ஆம ஆண்டில் சுற்றுலா நிகழ்ச்சி ஆவணப்படுத்தப்பட்ட நேரடி ஆல்பமான ஆன் த நைட் வெளியானது. இது மீண்டும் மிகவும் கலவையான திறனாய்வுகளைப் பெற்றது.

டயர் ஸ்ட்ரெய்ட்ஸ் கலைக்கப்படுவதற்கு முன்பு 1995 ஆம் ஆண்டு இறுதி ஆல்பத்தை வெளியிட்டது. லைவ் அட் த BBC ஒரு ஒப்பந்த ஆல்பமான வெர்டிகோ ரெக்கார்ட்ஸுக்காக வெளியிடப்பட்டது. இசைக்குழுவின் மூன்றாவது மற்றும் இறுதி நேரடி ஆல்பமானது 1978-81 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நேரடி பதிப்புகளின் சேகரிப்புகளைக் கொண்டிருந்தது. இதில் இசைக்குழுவின் துவக்க உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்.

கலைத்தல் மற்றும் மறு இணைவுகள் (1995-தற்போது வரை)[தொகு]

1995 ஆம் ஆண்டில் மார்க் நாஃப்லெர் டயர் ஸ்ட்ரெய்ட்ஸை அமைதியாகக் கலைத்தார். அவர் முன்பு பெரிய அளவில் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்ற ஆர்வத்தை வெளிப்படுத்தியது. இசைக்குழுவின் இறுதியான கலைப்புக்கு வழிவகுத்தது. 1996 ஆம் ஆண்டில் ஒரு தனிபட்ட கலைஞராக அவரது இசைவாழ்க்கையைத் தொடங்கினார்.[3]

1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிரதர்ஸ் இன் ஆர்ம்ஸ் ஒன்பது முறைகள் பிளாட்டினமான சான்றிதழ் அளிக்கப்பட்டது. அதே ஆண்டில் பாப் லுட்விக் மூலமாக மீண்டும் தொகுக்கப்பட்ட டயர் ஸ்ட்ரெய்ட்ஸின் முழுமையான பாடல்கள் CD இல் மீண்டும் வெளியிடப்பட்டது. அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் இது வெளியானது. செப்டம்பர் 2000 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இந்த மறு தொகுப்புகள் வெளியானது.

நாஃப்லெர், ஜான் இல்ஸ்லே, ஆலன் கிலார்க் மற்றும் கை ப்ஃலெர்ட்சர் ஆகியோர் எட் பிக்நெல்லின் டிரம்ஸுடன் 19 ஜூன் 1999 அன்று இறுதியாக மறு கூட்டணி அமைத்தனர். இதன் மூலம் இல்ஸ்லேயின் திருமணத்திற்காக சப் பெர்ரியின் நதின் இசை உள்ளிட்ட ஐந்து பாடல்களை அவர்கள் இயற்றினர்.[10]

2002 ஆம் ஆண்டில் நான்கு அறப்பணி நிகழ்ச்சிகளுக்காக ஜான் இல்ஸ்லே, கை ப்ஃலெட்சர், டேனி கம்மிங்ஸ் மற்றும் கிரிஸ் ஒயிட் மூலமாக மார்க் நாஃப்லெரும் சேர்க்கப்பட்டார். இதன் முதல் பகுதியின் போது பிரெண்டன் குரோக்கர் நாஃப்லெருடன் இணைந்து, த நோட்டிங் ஹில்பில்லிஸில் இயற்றப்பட்ட முக்கிய இசையை வாசித்தார். செப்பெர்ட்டின் புஷ் விழா இறுதியடைந்து கொண்டிருக்கையில் டயர் ஸ்ட்ரெய்ட்ஸின் பருவத்திற்கு இல்ஸ்லே வந்தார். இதில் நாஃப்லெரின் தனிப்பட்ட இசையமைப்பான "ஒய் ஆயே மேனுக்காக" பின்னணிக் குரலாக ஜிம்மி நெயில் பாடினார்.

இந்த மிகவும் புதிய இசையமைப்பான த பெஸ்ட் ஆஃப் டயர் ஸ்ட்ரெய்ட்ஸ் & மார்க் நாஃப்லெர்: பிரைவேட் இன்வெஸ்டிகேசன்ஸ் எனத் தலைப்பிடப்பட்டு நவம்பர் 2005 ஆம் ஆண்டில் வெளியானது. டயர் ஸ்ட்ரெய்ட்ஸின் பெரும்பாலான இசைகளையும் மார்க் நாஃப்லெரின் தனிப்பாடல் மற்றும் சவுண்டிராக் இசைகளையும் இந்த வெளியீடு உள்ளடக்கியிருந்தது. சாம்பல நிற மேலட்டையுடைய ஒரு தனி CD மற்றும் நீல வண்ண மேலட்டையுடைய இரட்டை CD என இரண்டு பதிப்புகளாக இது வெளியிடப்பட்டது. எம்மிலூ ஹாரிஸ் என்ற பாடகருடன் இருவர் பாடலான ஆல் த ரோடுரன்னிங் என்ற முன்பு வெளியிடப்பட்டாத டிராக்கும் இந்த ஆல்பத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த ஆல்பம் கீழ்தள வெற்றியாக நன்கு வரவேற்பைப் பெற்றது.

2005 ஆம் ஆண்டு அளவான பதிப்பாக வெளியிடப்பட்ட பிரதர்ஸ் இன் ஆர்ம்ஸின் 20வது ஆண்டு பதிப்பானது வெற்றியடைந்தது. மேலும் சிறந்த சரவுண்டிங் ஒலி ஆல்பத்திற்கான கிராமி விருதையும் வென்றது.

1995 ஆம் ஆண்டில் கலைக்கப்பட்ட குழுவை மீண்டும் இணைப்பதற்கு மார்க் நாஃப்லெருக்கு ஆர்வம் இல்லாமல் இருந்தது. எனினும் கீபோர்டு கலைஞர் கை ப்ஃலெட்சர் இன்று வரை நாஃப்லெரின் பெரும்பாலான ஒவ்வொரு தனிப்பாடலுடனும் பணியாற்றினார். அடிக்கடி டேனி கம்மிங்ஸும் அவரது தனிப்பாடல்களில் பங்கேற்றார்.[11] 2007 ஆம் ஆண்டில் நாஃப்லெர் கூறியபோது இசைக்குழுவின் வெற்றியில் உலகளாவிய புகழை அவர் இழக்கவில்லை என்றார். மேலும் அதைப் பற்றி விளக்குகையில் "அது மிகவும் பெரிதாக வளர்ந்து விட்டது" என்றார்.[12]

2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் டயர்ஸ் ஸ்ட்ரெய்ட்ஸுடன் மீண்டும் இணைந்து நிகழ்ச்சிகளுக்கு செல்ல ஆர்வமாக இருப்பதாக ஜான் இல்ஸ்லே BBC இல் கூறினார். ஒரு தனிப்பட்ட கலைஞராக நாஃப்லெர் வெற்றியைத் தொடர்ந்து கொண்டிருப்பதால் தற்போது அவருக்கு இசைக்குழுவை மீண்டும் இணைப்பதில் ஆர்வம் இல்லை எனவும் அவர் கூறினார்.[12] டயர் ஸ்ட்ரெய்ஸை மீண்டும் இணைப்பதற்கு இல்ஸ்லே கேட்டபோது நாஃப்லெர் அதை நிராகரித்து விட்டார்.[13]

செல்வாக்கு[தொகு]

2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மியூசிக் ஹெரிடேஜ் விருதுக்கான புதிய PRS மூலமாக டயர் ஸ்ட்ரெய்ட்ஸ் கெளரவிக்கப்பட்டது. பாடகர் மற்றும் முன்னணி கிட்டார் கலைஞர் மார்க் நாஃப்லெர், ரிதம் கிட்டார் கலைஞர் மற்றும் பாடகர் டேவிட் நாஃப்லெர், பேஸ் கிட்டார் கலைஞர் மற்றும் பாடகர் ஜான் இல்ஸ்லே மற்றும் டிரம்மர் மற்றும் தாளமிடுபவரான பிக் வித்தெர்ஸ் ஆகிய துவக்க இசைக்குழுவினர் 1977 ஆம் ஆண்டில் ஒரு முறை கவுன்சில் அறையைப் பகிர்ந்து கொண்டு அவர்களது முதல் இசையைத் தொகுத்த டெப்ட்போர்டில் உள்ள சர்ஸ் ஸ்ட்ரீடின் பேரர் ஹவுஸில் இந்த பிரத்யேக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பிரபல இசைக்குழுக்கள் மற்றுக் கலைஞர்களின் வழக்கமற்ற 'இசைப் பிறந்த இடங்களை' அங்கிகரிப்பதற்கு இசைக்கான இந்த PRS ஹெரிட்டேஜ் விருது உண்டாக்கப்பட்டது.[14]

ஸ்டுடியோ ஆல்பங்கள்[தொகு]

  • டயர் ஸ்ட்ரெய்ட்ஸ் (1978)
  • கம்யூனிக் (1979)
  • மேக்கிங் மூவிஸ் (1980)
  • லவ் ஓவர் கோல்ட் (1982)
  • பிரதர்ஸ் இன் ஆர்ம்ஸ் (1985)
  • ஆன் எவ்ரி ஸ்ட்ரீட் (1991)

விருதுகள்[தொகு]

  • BRIT விருதுகள் 1983 - சிறந்த பிரிட்டிஷ் இசைக்குழுவினர்
  • கிராமி விருதுகள் 1986 - இரட்டையர் அல்லது குழுவினராக சிறந்த ராக் இசை ('மனி ஃபார் நத்திங்)
  • கிராமி விருதுகள் 1986 பிரதர்ஸ் இன் ஆர்ம்ஸ் மரபற்ற சிறந்த பொறியிலிடப்பட்ட இசைப்பதிவு
  • ஜுனோ விருது 1986 - அந்த ஆண்டின் சிறந்த சர்வதேச ஆல்பம்
  • BRIT விருதுகள் 1986 - சிறந்த பிரிட்டிஷ் இசைக்குழுவினர்
  • MTV வீடியோ இசை விருதுகள் 1986 - ஆண்டின் சிறந்த வீடியோ (மனி ஃபார் நத்திங்')
  • MTV வீடியோ இசை விருதுகள் 1986 - சிறந்த குழு வீடியோ (மனி ஃபார் நத்திங்')
  • கிராமி விருதுகள் 1987 - சிறந்த இசை வீடியோ, குறுகிய வடிவ “டயர் ஸ்ட்ரெய்ட்ஸ் பிரதர்ஸ் இன் ஆர்ம்ஸ்”
  • BRIT விருதுகள் 1987 - சிறந்த பிரிட்டிஷ் ஆல்பம் ("பிரதர்ஸ் இன் ஆர்ம்ஸ்")
  • கிராமி விருதுகள் 2006 - அவரது சரவுண்ட் ஒலி தயாரிப்புக்கான சிறந்த சரவுண்ட் ஒலி ஆல்பம் (பிரதர்ஸ் இன் ஆர்ம்ஸின் 20வது ஆண்டு பதிப்பு, சக் ஏய்ன்ஸ்லே, சரவுண்ட் கலவைப் பொறியாளர்; பாப் லுட்விக், சரவுண்ட் தலைமைப் பொறியாளர்; சக் ஏய்ன்லே மற்றும் மார்க் நாஃப்லெர், சரவுண்ட் தயாரிப்பாளர்கள்)

விருது பரிந்துரைகள்[தொகு]

  • கிராமி விருதுகள் 1980 - சிறந்த புதிய கலைஞர்
  • கிராமி விருதுகள் 1980 - இரடையர் அல்லது குழுவாக சிறந்த ராக் பாடகர் இசை (சூல்தான்ஸ் ஆஃப் சுவிங்)
  • அமெரிக்க இசை விருது 1986 - விருப்பமான பாப்/ராக் தனிப்பாடல் ("மனி ஃபார் நத்திங்")
  • கிராமி விருதுகள் 1986 - ஆண்டின் சிறந்த ஆல்பம் ("பிரதர்ஸ் இன் ஆர்ம்ஸ்")
  • கிராமி விருதுகள் 1986 - ஆண்டின் சிறந்த இசைப்பதிவு ("மனி ஃபார் நத்திங்")
  • MTV வீடியோ இசை விருதுகள் 1986 - சிறந்த மேடை இசை வீடியோ ("மனி ஃபார் நத்திங்")
  • MTV வீடியோ இசை விருதுகள் 1986 - சிறந்த கருத்துடைய வீடியோ ("மனி ஃபார் நத்திங்")
  • MTV வீடியோ இசை விருதுகள் 1986 - சிறந்த இயக்கம் ("மனி ஃபார் நத்திங்")
  • MTV வீடியோ இசை விருதுகள் 1986 - சிறந்த பிரத்யேக விளைவுகள் ("மனி ஃபார் நத்திங்")
  • MTV வீடியோ இசை விருதுகள் 1986 - பார்வையாளர்கள் விருப்பம் (மனி ஃபார் நத்திங்')
  • MTV வீடியோ இசை விருதுகள் 1986 - சிறந்த கலை இயக்கம் (மனி ஃபார் நத்திங்')
  • MTV வீடியோ இசை விருதுகள் 1986 - சிறந்த படத்தொகுப்பு (மனி ஃபார் நத்திங்')
  • MTV வீடியோ இசை விருதுகள் 1986 - பெரும்பாலும் ஆய்வுகுட்பத்தப்பட்ட வீடியோ (மனி ஃபார் நத்திங்')
  • MTV வீடியோ இசை விருதுகள் 1986 - சிறந்த மொத்த திறன் (மனி ஃபார் நத்திங்')
  • கிராமி விருதுகள் 1992 - சிறந்த இசை வீடியோ, குறுகிய வடிவம் ("காலிங் எல்விஸ்")

குறிப்புதவிகள்[தொகு]

  1. ஜான் இல்ஸ்லே, பேஸ் பிளேயர் டயர் ஸ்ட்ரெய்ட்ஸ், பயோகிராபி, டயர் ஸ்ட்ரெட்ய்ஸ் சோல்டு 120 மில்லியன் ஆல்பம்ஸ்
  2. "கை ப்ஃலெட்சர் அதிகாரப்பூர்வ வலைத்தளம்" இம் மூலத்தில் இருந்து 2009-05-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090519175432/http://www.guyfletcher.co.uk/guyedit/projects.html. 
  3. 3.0 3.1 3.2 3.3 "Dire Straits Biography". Musician Guide (Net Industries). 2009. http://www.musicianguide.com/biographies/1608000435/Dire-Straits.html. பார்த்த நாள்: 6 January 2009. 
  4. 4.0 4.1 4.2 4.3 sing365.com இல் டயர் ஸ்ட்ரெய்ட்ஸின் பரணிடப்பட்டது 2011-05-20 at the வந்தவழி இயந்திரம் வாழ்க்கை வரலாறு
  5. Considine, J.D. (2004). "Dire Straits". The New Rolling Stone Album Guide (Rolling Stone Magazine) இம் மூலத்தில் இருந்து 26 ஜூலை 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080726072417/http://www.rollingstone.com/artists/direstraits/biography. பார்த்த நாள்: 13 February 2009. 
  6. SOS
  7. கிராமி வெற்றியாளர்கள் தேடுதல் பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம் 11 மே 2007 அன்று பெறப்பட்டது.
  8. டிஜிட்டலி ரெக்கார்டடு, டிஜிட்டலி ரீ/மிக்ஸுடு அண்ட் டிஜிட்டலி மாஸ்டெர்டு (psg)
  9. 9.0 9.1 மார்க் நாஃப்லெர் - ஆத்தரைஸ்டு பயோகிராபி பரணிடப்பட்டது 2014-03-20 at Archive.today- www.mark-knopfler-news.co.uk
  10. "ஜானின் திருமணம்" இம் மூலத்தில் இருந்து 2000-01-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20000125054225/http://www.mark-knopfler-news.co.uk/oldnews.htm. 
  11. 2007 ரெக்கார்டிங் டயரி - வீக் 1 - ஜனவரி 2007 பரணிடப்பட்டது 2009-01-16 at the வந்தவழி இயந்திரம் 2 ஏப்ரல் 2007 அன்று பெறப்பட்டது.
  12. 12.0 12.1 டால்கிங் சாஃப்: ஜான் இல்ஸ்லே. BBC நியூஸ், 8 அக்டோபர் 2008
  13. Ian Youngs (7 October 2008). "Knopfler declines Straits reunion". BBC News (BBC). http://news.bbc.co.uk/1/hi/entertainment/7656310.stm. பார்த்த நாள்: 3 February 2009. 
  14. http://news.bbc.co.uk/1/hi/england/london/8394556.stm

புற இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dire Straits
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

அதிகாரப்பூர்வ இசைக்குழுவினரின் வலைத்தளங்கள்[தொகு]

இதர புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டயர்_ஸ்ட்ரெய்ட்ஸ்&oldid=3792843" இருந்து மீள்விக்கப்பட்டது