டபிள்யூ வரிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டபிள்யூ வரிசை (W band) நுண்ணலையானது மின்காந்த அலைப்பிரிவில் (electromagnetic spectrum) 75 முதல் 110 GHz வரையிலான அதிர்வெண் கொண்டவை என மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளர்கள் கழகம் வரையறை செய்துள்ளது. இவை வி வரிசையின்(V band) அதிர்வெண்ணான 50–75 GHz விட அதிகம். மேலும் இந்த அதிர்வெண்கள் நேட்டோ (NATO) வரையறை செய்தவற்றில் எம் வரிசையின் (M band) அதிர்வெண்ணான 60 முதல் 100 GHz யின் மேல் பொருந்துகின்றன. இவை ரேடார் ஆராய்ச்சி, செயற்கைக் கோள் தகவல் தொடர்பு, மில்லிமீட்டர் அலை ரேடார் ஆராய்ச்சி, ராணுவக் ரேடார் ஆராய்ச்சி மற்றும் சில ராணுவப் பயனில்லாத ரேடார் ஆராய்ச்சி ஆகியவற்றில் உபயோகப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டபிள்யூ_வரிசை&oldid=2746217" இலிருந்து மீள்விக்கப்பட்டது