உள்ளடக்கத்துக்குச் செல்

டகோமா குறும்பாலம் (1940)

ஆள்கூறுகள்: 47°16′00″N 122°33′00″W / 47.26667°N 122.55000°W / 47.26667; -122.55000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டகோமா குறும்பாலம்
பிற பெயர்கள் Galloping Gertie
வடிவமைப்பு தொங்கு பாலம்
மொத்த நீளம் 5,939 அடிகள் (1,810.2 m)
அதிகூடிய அகல்வு 2,800 அடிகள் (853.4 m)
Clearance below 195 அடிகள் (59.4 m)
திறப்பு நாள் சூலை 1, 1940
நொறுங்கியது நவம்பர் 7, 1940
அமைவு 47°16′00″N 122°33′00″W / 47.26667°N 122.55000°W / 47.26667; -122.55000
டகோமா குறும்பாலம் (1940) is located in Washington (state)
டகோமா குறும்பாலம் (1940)

டகோமா குறும்பாலம் (Tacoma Narrows Bridge) என்பது முதன் முதலாக அமைக்கப்பட்ட டகோமா குறும்பாலங்களில் ஒன்று. இது 1940, சூலை 7 ஆம் தேதி, பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. இது ஒரு தொங்கு பாலமாகும். இது ஐக்கிய அமெரிக்காவின், வாசிங்டன் மாநிலத்தில் அமைந்திருந்தது. திறக்கப்பட்ட அதே ஆண்டில் நவம்பர் 7 ஆம் திகதி, இப்பாலம் இடிந்து விழுந்தது.

கட்டப்பட்ட காலத்தில் இதுவே உலகின் மூன்றாவது நீளமான தொங்கு பாலமாகும். குறும்பாலம் இடிந்து விழுந்ததில் மூன்று கால்களையுடைய நாய் மட்டுமே இறந்தது. செய்தியாளர் லியனார்டோ கோல்ட்சுவோர்த்து என்பவர் நாயுடன் தன் மகிழுந்தில் (கார்) வந்த போது சுங்கச்சாவடியிலிருந்து 1,895 அடி தொலைவிலேயே காற்றின் காரணமாக பாலம் பலமாக ஊசலாடியதால் நாயுடன் மகிழுந்தை நிறுத்தி விட்டு வந்தார்.[1]

பாலம் இடிந்து விழுந்த காணொளி (19.1 மெகாபைட், நேரம்: 2:30)


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டகோமா_குறும்பாலம்_(1940)&oldid=2181852" இலிருந்து மீள்விக்கப்பட்டது