ஜோசேப் புலிட்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜோசேப் புலிட்சர்
JosephPulitzerPinceNeznpsgov.jpg
பிறப்புJosef Pollitzer
10 ஏப்ரல் 1847
Makó
இறப்பு29 அக்டோபர் 1911 (அகவை 64)
சார்லஸ்டன்
பணிஅரசியல்வாதி
வேலை வழங்குபவர்
  • New York World
கையெழுத்து
Joseph Pulitzer Signature.svg
ஜோசேப் புலிட்சர்

ஜோசேப் புலிட்சர் ஒரு ஹங்கேரிய அமெரிக்கப் பத்திரிகையாளரும், செய்திப்பத்திரிகை வெளியீட்டாளரும் ஆவார். இவர் தனது இறப்புக்குப் பின்னர் புலிட்சர் பரிசு உருவாக வழி வகுத்ததன் மூலம் புகழ் பெற்றார். முதன் முதலாக மஞ்சள் பத்திரிகையை அறிமுகப்படுத்தியவர்களில் இவரும் ஒருவர்.

புலிட்சர் ஹங்கேரியில் உள்ள மாக்கோ என்னுமிடத்தில் பிறந்தார். இவர் இராணுவத்தில் சேர விரும்பினாராயினும், இவரது பலவீனமான உடல்நிலையாலும், கண்பார்வைக் குறைவினாலும், இவர் ஆஸ்திரிய இராணுவத்தில் சேரமுடியாமல் போனது. அமெரிக்க உள்நாட்டுப் போரில் கலந்து கொள்வதற்காக 1864 ஆம் ஆண்டில் இவர் ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றார். போருக்குப் பின்னர், மிசூரியில் உள்ள சென் லூயிஸ் என்னுமிடத்தில் தங்கினார். அங்கே, வெஸ்ட்லிச் போஸ்ட் (Westliche Post) என்னும் ஜேர்மன் மொழிப் பத்திரிகையில் சேர்ந்து பணியாற்றினார். அவர் குடியரசுக் கட்சியில் சேர்ந்து, 1869 இல் மிசூரி மாநில சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1872 இல், வெஸ்ட்லிச் போஸ்ட் பத்திரிகையை 3000 டாலருக்கு வாங்கினார். 1878 இல் சென் லூயிஸ் டிஸ்பச் (St. Louis Dispatch) என்னும் பத்திரிகையையும் 2700 டாலருக்கு வாங்கினார். இரண்டு பத்திரிகைகளையும் இணைத்து, சென் லூயிஸ் போஸ்ட் டிஸ்பச் (St. Louis Post-Dispatch) என்னும் பெயரில் தினப் பத்திரிகையாக நடத்தி வந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசேப்_புலிட்சர்&oldid=2733488" இருந்து மீள்விக்கப்பட்டது