ஜோசஃப் கோனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோசஃப் கோனி
பிறப்புஜோசப் கோனி
Joseph Kony

ஜூலை–செப்டெம்பர் 1961
ஓடெக், உகாண்டா
தேசியம்உகாண்டர்
அறியப்படுவதுஇறைவனின் எதிர்ப்பு இராணுவத்தின் தலைவர்
வாழ்க்கைத்
துணை
88 மனைவிகளை கொண்டுள்ளார் என்று நம்பப்படுகிறது[1]
பிள்ளைகள்42 குழந்தைகளை கொண்டுள்ளார் என்று நம்பப்படுகிறது[2]

ஜோசஃப் கோனி (Joseph Kony, பி. 1961) உகாண்டாவில் உருவாக்கப்பட்ட இறைவனின் எதிர்ப்பு இராணுவம் என்கிற கரந்தடிப் போர் குழுமத்தின் தலைவர். அச்சோலி மக்களை சேர்ந்த கோனி 2005இல் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தால் இராணுவக் குற்றங்களுக்கும், மனிதனுக்கு எதிரான குற்றச் செயல்களுக்கும் குற்றம் சாட்டப்பட்டதானாலும், இன்று வரை கைப்பற்றப்படவில்லை. 66,000 குழந்தைகளை கடத்தல் செய்து போர்வீரர்களாகவும் பாலியல் அடிமைகளாகவும் பயன்படுத்துகிறார் என்று பல நாட்டு அரசுகள் இவரை குற்றம் சாட்டியுள்ளன. 2006க்கு பிறகு உகாண்டாவிலிருந்து கோனியும் அவரின் குழுமமும் வெளியேறியுள்ளன, ஆனால் நடு ஆப்பிரிக்கக் குடியரசில் இயக்குகிறது என்பது உகாண்டா அரசின் நம்பிக்கை.

கோனி தன்னையே கடவுளின் பேச்சாளர் என்று தெரிவித்துகிறார். கிறிஸ்தவ அடிப்படைவாதமும், அச்சோலி பாரம்பரியத்தையும் கலந்து ஒரு சமயச் சார்பாட்சியை உருவாக்கவேண்டும் என்று கோனியின் குழுமத்தின் நோக்கம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Matthew Green (journalist) (2008). The Wizard of the Nile: The Hunt for Africa's Most Wanted. Portobello Books. பக். 136. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84627-031-4. https://archive.org/details/wizardofnilehunt0000gree. 
  2. Beatrice Debut Gulu (10 February 2006). "Portrait of Uganda's rebel prophet, painted by wives". Mail & Guardian Online. பார்க்கப்பட்ட நாள் 7 March 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசஃப்_கோனி&oldid=3582281" இலிருந்து மீள்விக்கப்பட்டது