ஜேம்ஸ் வாங் ஹோவ் (ஒளிப்பதிவாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜேம்ஸ் வாங் ஹோவ் (ஆங்கிலம்: James Wong Howe, சீனம்: 黃宗霑) 1899 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28 ஆம் தியதி பிறந்தார். இவர் ஒரு ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் 130 திரைப்படங்களுக்கும் அதிகமாக ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். இரண்டு முறை அகடமி விருதை ஒளிப்பதிவிற்காகப் பெற்றுள்ளார். இவர் 1976 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் தியதி மரணமடைந்தார். 1930 கள் மற்றும் 1940 களில் இவர் ஹாலிவுட்டின் மிக முக்கியமான ஒளிப்பதிவாளராகத் திகழ்ந்தார். இவர் 10 முறை அகெதமி விருது பெற பரிந்துரைக்கப்பட்டார். தி ரோஸ் டாட்டு (The Rose Tattoo ) மற்றும் ஹட் (Hud) ஆகிய திரைப்படங்களுக்காக இரு முறை அகெதமி விருதைப் பெற்றுள்ளார். வரலாற்றின் மிக முக்கியமான 10 ஒளிப்பதிவாளர்களுள் இவரும் ஒருவர் என சர்வதேச ஒளிப்பதிவாளர்கள் அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

வாழ்க்கைப் குறிப்பு[தொகு]

இவர் சைனா வில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர். முதலில் சலனப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். இவரது திருமணம் 1937-ல் பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடந்தது.[2] ஆனால் இவரது திருமணத்தை கலிபோர்னியா அரசு அங்கீகரிக்கவில்லை. இவரது திருமணம் இனக்கலப்புத் திருமணம் ஆகும். 1948 ஆம் ஆண்டு இனக்கலப்புத் திருமணத்திற்கு எதிரான சட்டம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இவரது திருமணம் அங்கீகரிக்கப்பட்டது.[3]

மேற்குறிப்பு[தொகு]