உள்ளடக்கத்துக்குச் செல்

ஜேம்ஸ் டீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜேம்ஸ் பைரன் டீன் (James Byron Dean பிப்ரவரி 8, 1931   - செப்டம்பர் 30, 1955) ஓர் அமெரிக்க நடிகர் ஆவார். இவர் 1955 ஆம் ஆண்டில் வெளியான ரெபெல் வித் அவுட் எ காஸ் திரைப்படத்தில்ஜிம் ஸ்டார்க் எனும் பதற்றமான இளைஞன் கதாப்பத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பாட்டார்.மேலும் 1955 ஆம் ஆண்டில் வெளியான ஈச்ட் ஆஃப் ஈடன் திரைப்படத்தில் கால் டிராஸ்க் கதாப்பாத்திரம் மற்றும் அதற்கு அடுத்த ஆண்டில் வெளியான ஜயண்ட் திரைப்படத்தில் ஜெட் ரித்திக் கதாப்பாத்திரங்களும் ரசிகர்களிடையே இவரை பிரபலமாக்கியது.

கார் விபத்தில் இறந்த பிறகு[1] சிறந்த நடிகருக்கான அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இதன் மூலம் மரணத்திற்குப் பின்பாக அகாதமி விருதுக்குப் பரிந்துரை செய்ய்யப்பட்ட முதல் நடிகர் என்ற பெருமையை டீன் பெற்றார். மேலும் மரணத்திற்குப் இருமுறை சிறந்த நடிகருக்கான பரிந்துரைகளை பெற்ற ஒரே நடிகராகவும் இவர் திகழ்கிறார். [2] 1999 ஆம் ஆண்டில், அமெரிக்க திரைப்பட நிறுவனம் இவரை கோல்டன் ஏஜ் ஹாலிவுட்டிற்கான AFI இன் 100 ஆண்டுகள் ... 100 நட்சத்திரங்கள் எனும் பட்டியலில் 18 வது சிறந்த ஆண் திரைப்பட நட்சத்திரமாக அறிவித்தது. [3]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஜேம்ஸ் பைரன் டீன் பிப்ரவரி 8, 1931 அன்று இந்தியானாவின் மரியானாவில் பிறந்தார். [4] மில்ட்ரெட் மேரி (வில்சன்) மற்றும் விண்டன் டீன் ஆகிய தம்பதினரின் ஒரே மகன் ஆவார். அவர் முதன்மையாக ஆங்கில வம்சாவளியைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும் ஜெர்மன், ஐரிஷ், ஸ்காட்டிஷ் மற்றும் வெல்ஷ் வம்சாவளியினையும் சேர்ந்தவராகவும் இருந்தார்.பல் தொழில்நுட்ப வல்லுநராக ஆக வேண்டும் என நினைத்த இவரது தந்தை விவசாயத்தை விட்டு வெளியேறினார். அதற்கு முன்பாக இவர் ஆறு ஆண்டுகள் விவசாயம் செய்தார். பிறகு டீன் தனது குடும்பத்தினருடன் கலிபோர்னியாவின் சாண்டா மோனிகாவுக்கு குடிபெயர்ந்தார். கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸின் ப்ரெண்ட்வுட் அருகிலுள்ள ப்ரெண்ட்வுட் பப்ளிக் பள்ளியில் அவர் சேர்க்கப்பட்டார். ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு மெக்கின்லி தொடக்கப்பள்ளிக்கு இவர் மாற்றப்பட்டார். [5] இவரது குடும்பம் பல ஆண்டுகள் அந்த இடத்திலேயே தங்கினர். இவரது கூற்றுப்படி தன்னைப் புரிந்துகொண்ட ஒரே நபர் தனது தாய் தான் எனக் கூறினார். [6] 1938 ஆம் ஆண்டில், திடீரென கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டார். அதனால் இவர் தனது உடல் எடையை குறைக்கத் தொடங்கினார். இவரின் தாய் டீனுக்கு ஒன்பது வயதாக இருந்தபோது கருப்பை புற்றுநோயால் இறந்தார். தனது மகனைப் பராமரிக்க முடியாமல், டீனின் தந்தை அவரை தனது அத்தை மற்றும் மாமா, ஆர்டென்ஸ் மற்றும் மார்கஸ் வின்ஸ்லோ ஆகியோருடன் இந்தியானாவின் ஃபேர்மவுண்டில் உள்ள பண்ணையில் [7] இருப்பதற்கு அனுப்பினார் , அங்கு அவர் அவர்களின் நண்பர்களின் சமய சமூகத்தில் வளர்க்கப்பட்டார். [8] டீனின் தந்தை இரண்டாம் உலகப் போரில் பணியாற்றினார். பின்னர் அவர் மறுமணம் செய்து கொண்டார்.

கௌரவம்[தொகு]

சிறந்த நடிகருக்கான அகாதமி விருத்துக்குப் பரிந்துரை செய்யப்பட்டார். இதன் மூலம் மரணத்திற்குப் பின்பாக அகாதமி விருதுக்குப் பரிந்துரை செய்ய்யப்பட்ட முதல் நடிகர் என்ற பெருமையை டீன் பெற்றார்.

AFI இன் 100 ஆண்டுகள் ... 100 நட்சத்திரங்கள் எனும் பட்டியலில் 18 வது சிறந்த ஆண் திரைப்பட நட்சத்திரமாக அறிவிக்கப்பட்டார்.

சான்றுகள்[தொகு]

  1. "Delirium over dead star". Life. 
  2. The Intellectual Devotional Modern Culture: Revive Your Mind, Complete Your Education, and Converse Confidently with the Culturati. Rodale. பார்க்கப்பட்ட நாள் July 21, 2013.
  3. "AFI's 100 Years...100 Stars". American Film Institute. Archived from the original on 2014-10-25. பார்க்கப்பட்ட நாள் 2020-01-11.
  4. Chris Epting (June 1, 2009). The Birthplace Book: A Guide to Birth Sites of Famous People, Places, & Things. Stackpole Books. p. 163. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8117-4018-0.
  5. George C. Perry. James Dean. DK Publishing, Incorporated. p. 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7566-0934-4.
  6. Michael DeAngelis (August 15, 2001). Gay Fandom and Crossover Stardom: James Dean, Mel Gibson, and Keanu Reeves. Duke University Press. p. 97. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8223-2738-4.
  7. Val Holley (September 1991). James Dean: Tribute to a Rebel. Publications International. p. 18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56173-148-0.
  8. Robert Tanitch. The Unknown James Dean. Batsford. p. 114. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7134-8034-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_டீன்&oldid=3712833" இலிருந்து மீள்விக்கப்பட்டது