ஜேம்சு புரூசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேம்சு புரூசு

இளவரசர் யாகோவ்அல்லது ஜேம்சு டானியல் புரூசு (James Daniel Bruce) (உருசியம்: Граф Яков Вилимович Брюс உருசிய மொழியில்: கிராஃப் யாகோவ் விலிமோவிச் புரூசு) (11 மே 1669 - 30 ஏப்பிரல் 1735) ஓர் உருசிய அரசியலாளர். படைத்துறைத் தலைவர், புரூசு இனக்குழு சார்ந்த சுகாட்லாந்தியர்,உருசியப் முதலாம் பீட்டரின் (மகா பீட்டரின்) கூட்டாளி. இவரது முன்னோர் 1649 இல் இருந்தே உருசியாவில் வாழ்ந்துவருகின்றனர். இவர் முதல் புனித பீட்டர்சுபர்கின் படை ஆளுநரான இராபர்ட் புரூசின் (1668–1720) உடன்பிறப்பாவார்.

போர்ப்பணிகள்[தொகு]

இவர் ஆட்டோமன் பேரரசை எதிர்த்த பீட்டர் மாமன்னனின் உருசிய–துருக்கிப் போரிலும்(1686-1700), கிரீமியப் பரப்புரைகளிலும் (1687, 1689) அசோவ் பரப்புரைகளிலும் (1695–1696) பங்கேற்றார். மாபெரும் வடக்குப் போரின்போது புரூசு காலாட்படை, பொதுப்படை மேலராக பணியமர்த்தப்பட்டார். நார்வா போரில் 1700 இல் சுவீடியப் படைகளையும் அதன் கட்டளைத் தளபதியான இமிரேத்தி இளவரசர் அலெக்சாந்தரையும் (1674–1711) வெற்றிகாண, அப்போது பெரிதும் சீர்குலைக்கப்பட்டிருந்த உருசியக் காலாட்படையின் புத்துயிர்ப்பில் இவர் பெரும்பங்குபற்றினார்.[1] இவர் 1709 இல் நடந்த போல்தாவா போரில் காட்படையின் கட்டளைத் தளபதியாக விளங்கியுள்ளார். இதற்காக இவருக்கு ஆந்திரூ ஆணைவழி மாவீரர் பட்டம் வழங்கப்பட்டது. இவர் 1721 இல் உருசிய மன்னர்களில் ஒருவரானார்.

மன்னர் ஜேம்சு புரூசின் படைகள். செஞ்சிங்கமும் ஒற்றைத்தலைக் குதிரையும் இசுகாட்லாந்து நாட்டுக் குறியீடுகள்

அறிவியல் பணிகள்[தொகு]

புரூசு உருசியாவில் மெத்த படித்தவரில் ஒருவரும் ஓர் இயற்கையியலாளரும் வானியலாளரும் ஆவார். இவர் 1702 இல் ஓர் உருசிய வான்காணகத்தை மாஸ்கோவில் சுகார்ப்பு கோபுரத்து மேல்மாடியில் நிறுவியுள்ளார்; . புரூசின் அறிவியல் நூலகத்தில் 1,500 தொகுதிகளுக்கும் மேற்பட்ட நூல்கள் 1730 களில் திரண்டுள்ளது. இது பின்னர் உருசிய் அறிவியல் நூலகத்தின் கணிசமான பகுதியானது.

இவர் மாஸ்கோ மக்களிடம் இரசவாதியகவும் மாயமந்திரக்காரராகவும் அறியப்பட்டவர். இதற்குக் காரணம் இவர் புதுப்பொலிவோடு வடிவமைத்த சுகரோ கோபுர மாளிகையாகும். இது 18 ஆம் நூற்றாண்டு மாஸ்கோவில் ஓர் விந்தையான கட்டிடமாகும். சுகாரோ கோபுர மாளிகையின் சுவர்களில் கருப்பு மாயமந்திரச் செங்கற்கள் பதியப் பட்டுள்ளதாக இதைப்பற்றி அக்காலத்து வதந்தியொன்று நிலவியுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Simpson, Grant G. (1992). The Scottish Soldier Abroad, 1247-1967. Rowman & Littlefield. p. 59. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0859763412.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்சு_புரூசு&oldid=3460006" இலிருந்து மீள்விக்கப்பட்டது