ஜெய வர்மா சின்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெய வர்மா சின்கா (Jaya Varma Sinha) நியமனத்திற்கான அமைச்சரவைக் குழுவின் பரிந்துரையின்படி, 1 செப்டம்பர் 2023 முதல் இந்திய இரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அலுவலராக பணியேற்றார்.[1] [2][3]வரலாற்றில் இவரே இந்திய இரயில்வே வாரியத்தின் முதல் தலைவர் ஆவார்.

கல்வி & பணி[தொகு]

அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஜெய வர்மா சின்கா, 1988ல் இந்திய இரயில்வேயின் போக்குவரத்துச் சேவையில் (Indian Railway Traffic Service) அதிகாரியாகச் சேர்ந்தார். [4] இந்தியாவின் கொல்கத்தா நகரத்தையும், வங்காளதேசத்தின் டாக்கா நகரத்தையும் இணைக்கும் 375 கிலோ மீட்டர் நீள மைத்திரீ விரைவுவண்டிக்கான திட்டத்தை நிறைவேற்றியதில் ஜெய வர்மா சின்கா முக்கியப் பங்கு வகித்தார்.[5] பிப்ரவரி 2022ல் ஜெய வர்மா சின்கா இரயில்வே வாரியத்தின் (செயல்பாடுகள் & வணிக மேம்பாடு) உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னர் கூடுதல் உறுப்பினராக (போக்குவரத்து) செயல்பட்டார்.[6]

2023 ஒடிசா தொடருந்து விபத்து[தொகு]

2023 ஒடிசா தொடருந்து விபத்தின் போது[7][8]இரயில்வே வாரிய உறுப்பினராக இருந்த ஜெய வர்மா சின்கா விபத்துகளுக்கான காரணங்களை விளக்கினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ரயில்வே வாரியத்தின் 105 ஆண்டு கால வரலாற்றில் முதல் பெண் தலைவராக ஜெயா வர்மா சின்ஹா நியமனம்
  2. யார் இந்த ஜெயா வர்மா சின்ஹா? ரயில்வே வாரிய வரலாற்றில் முதல் பெண் தலைவர்!
  3. "Govt appoints Jaya Verma Sinha as first woman CEO, chairperson of Railway Board". livemint.com. 31 August 2023. பார்க்கப்பட்ட நாள் 31 August 2023.
  4. "Jaya Varma Sinha will be new Chairman Railway Board". economictimes.indiatimes.com. 31 August 2023. பார்க்கப்பட்ட நாள் 31 August 2023.
  5. "Railway Board Gets First-Ever Woman CEO And Chairperson". ndtv.com. 31 August 2023. பார்க்கப்பட்ட நாள் 31 August 2023.
  6. "Jaya Varma takes charge of Member (Operations & Business Development), Railway Board". metrorailtoday.com. 11 February 2023. பார்க்கப்பட்ட நாள் 31 August 2023.
  7. "Odisha train accident Government revises death toll down to 275; Railways seeks CBI probe". thehindu.com. The Hindu. 4 June 2023. பார்க்கப்பட்ட நாள் 31 August 2023.
  8. "Odisha train tragedy: Railway Board member Jaya Verma Sinha explains what happened on the night of the crash". indiatoday.in. India Today. 5 June 2023. பார்க்கப்பட்ட நாள் 31 August 2023.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய_வர்மா_சின்கா&oldid=3784744" இலிருந்து மீள்விக்கப்பட்டது