ஜெயா சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெயா சர்மா இந்தியாவின் புது தில்லியை மையமாகக் கொண்டு பல்வேறு புத்தகங்களை எழுதிவரும்,பால்புதுமை எழுத்தாளராவர். [1] [2] [3] தன்னையும் பால் புதுமையினர் பெண்ணியச் செயற்பாட்டாளராக அடையாளம் காட்டிக்கொள்ளும் இவர், பாலினம், கல்வி மற்றும் பாலியல் பிரச்சினைகளில் படைப்புகளை எழுதியுள்ளார். [4]

வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

ஜெயா சர்மா, புது தில்லியில் உள்ள பாலினம் மற்றும் கல்விக்கான மையமான நிரந்தரர் என்ற இந்தியாவை மையமாகக் கொண்ட ஒரு அரசு சார்பற்ற அமைப்பின் நிரந்தர உறுப்பினராக உள்ளார். இந்த அமைப்பு பெண்ணியம் மற்றும் நங்கை, நம்பி, ஈரர், திருனர் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் கையாண்டு வருகிறது. மேலும் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் மற்றும் ந.ந.ஈ.தி சமூகத்தின் உரிமைகள், திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் கல்வியில் பணியாற்றி வருகிறார். [5]

உள்ளூர் மற்றும் சர்வதேச செய்திகளை வெளியிடுவதன் மூலம் கிராமப்புறங்களில் கல்வியறிவை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட கிராமப்புற இதழான பிடாராவின் இணை நிறுவனராகவும் இருந்துள்ளார். மொத்த எழுத்தறிவு பிரச்சாரத்தின் பின்னணியில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது, ஆனால் 2010 ஆம் ஆண்டில் இந்த இதழ் செயல்படுவதை நிறுத்தியுள்ளது.

இரத்த உறவுகளுடனான பாலுறவில் இருந்து மீண்டு குணமடைதல் (ஆர் ஏ ஹெச் ஐ) என்ற அமைப்பின் நிறுவன அறங்காவலராகவும் ஜெயா சர்மா இருந்து வருகிறார், [6] இந்த அமைப்பானது, இரத்த உறவுகளுடனான உடலுறவு மற்றும் குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்தில் இருந்து தப்பிய பெண்களின், உடல்நலம் மற்றும் மனநலன்களை மேம்படுத்துவதற்காக செயல்பட்டுவருகிறது.    அவர் இளம் பருவ கல்வி மற்றும் பாலியல் கல்விக்காகவும் வாதிடுகிறார். கருத்தரங்குகள், பட்டறைகள் போன்றவற்றின் மூலம் விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த பெண்களுடன் பாலுறவு குறித்து ஜெயா பணியாற்றி வருகிறார். [7]

சமூக நடைமுறைகள் பற்றிய கட்டுக்கதைகளை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்திய பி டி எம் எஸ் சமூகமான தி கிங்கி கலெக்ட்டிவ் என்ற அமைப்பையும் இணைந்து நிறுவியுள்ளார். [8]

படைப்புகள்[தொகு]

அவர் இன்பம் மற்றும் ஆபத்து பைனரி பற்றிய பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார், [9]

ஃபேண்டஸி ஃப்ரேம்ஸ்: செக்ஸ், லவ் மற்றும் இந்திய அரசியல் என்ற தலைப்பில் ஒரு புத்தகமும்,  இந்தியாவில் ஆரம்பகால குழந்தைத் திருமணம் பற்றிய நிலப்பரப்பு பகுப்பாய்வையும் அவர் இணைந்து எழுதியுள்ளார். பாலினம் மற்றும் பாலுணர்வின் மீதான சமூக கலாச்சார விதிமுறைகளின் செல்வாக்கை பகுப்பாய்வு செய்யும் பெண்ணியக் கண்ணோட்டத்தில் இந்த ஆராய்ச்சிக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. [10] [11]

மேற்கோள்கள்[தொகு]

  1. "...The Word Reached the Fields | Outlook India Magazine". 5 February 2022.
  2. "Poster Women – A Zubaan project » Jaya Sharma". www.posterwomen.org. Archived from the original on 2016-11-19.
  3. The One and the Many: Contemporary Collaborative Art in a Global Context. https://books.google.com/books?id=5uHIYv6LISMC&pg=PA259. 
  4. "RAHI Board of Trustees". RAHI Foundation. பார்க்கப்பட்ட நாள் 2018-03-23.
  5. "Talking LGBTQ with Indian Activist Jaya Sharma". 4 December 2015.
  6. "RAHI Board of Trustees". RAHI Foundation. பார்க்கப்பட்ட நாள் 2018-03-23.
  7. Sharma, Jaya. "Bringing together pleasure and politics: sexuality workshops in rural India" (PDF). Institute of Development Studies. பார்க்கப்பட்ட நாள் 2018-08-30.
  8. "Did you know that Bengaluru has BDSM community?". 2017-02-21. http://bangaloremirror.indiatimes.com/bangalore/cover-story/did-you-know-that-bengaluru-has-bdsm-community/articleshow/57226458.cms. 
  9. Sharma, Jaya (2013). "Challenging the Pleasure versus Danger Binary: Reflections on Sexuality Workshops with Rural Women's Rights Activists in North India". Sexuality and the Political Power of Pleasure Sex, Gender and Empowerment. 
  10. Women, Sexuality and the Political Power of Pleasure. https://books.google.com/books?id=aONiDgAAQBAJ&q=jaya+sharma+nirantar&pg=PT46. 
  11. "Early and Child Marriage in India: A Landscape Analysis" (PDF). Narintar Trust. பார்க்கப்பட்ட நாள் 2018-08-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயா_சர்மா&oldid=3677531" இலிருந்து மீள்விக்கப்பட்டது