ஜுபைல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜுபைல்
ஜுபைல் is located in Saudi Arabia
ஜுபைல்
ஜுபைல்
ஆள்கூறுகள்: 27°0′N 49°40′E / 27.000°N 49.667°E / 27.000; 49.667
நாடு சவூதி அரேபியா
மாகாணம்கிழக்கு மாகாணம்
அரசு
 • வகைமுடியாட்சி
 • மாகாண ஆளுநர்Saud bin Nayef
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்392,948
 • Nationality 
(2011)
73% சவுதி
17% இந்தியர்
4% பிலிப்பினோக்கள்
3% பாகிஸ்தானியர்கள்
1% வங்காளதேசிகள்
1% அமெரிக்கர்கள்
1% ஐரோப்பியர்கள்
2.5% பிற நாடுகள்
நேர வலயம்AST (ஒசநே+3)
சவுதி அரேபியாவில் ஜூபைல் நகரின் அமைவு

ஜுபைல் (Jubail, அரபு: "الجبيل") சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில், அரபிக்கடலோரம் அமைந்துள்ள மிகப்பெரிய தொழில் நகராகும். இங்கு இருபதுக்கும் மேற்பட்ட கனரக இரசாயனத் தொழிற்கூடங்கள் உள்ளன. இந்த தொழிற் நகரின் அடிப்படை உள்கட்ட வசதிகளை " Royal Commission for Jubail & Yanbu" செய்து தருகிறது. இதன் மக்கள் தொகை கிட்டத்தட்ட 179,544 ஆகும்.

இங்கு உள்ள ஐ.டபிள்யூ.பி.பி (சுதந்திர நீர் மற்றும் மின் திட்டம்) தினமும் 2743.6 மெகாவாட் மின்சாரத்தையும் 800,000 சதுர மீற்றர் தண்ணீரையும் உற்பத்தி செய்கிறது. இங்கு எஸ்ஏபிஐசி என்ற மத்திய கிழக்கின் மிகப்பெரிய மற்றும் உலகின் நான்காவது பெரிய பெற்றோலிய வேதிப்பொருட்கள் நிறுவனம் காணப்படுகிறது.[1]

இன்றைய ஜுபைல் நகரம் பழைய நகரமான அல்ஜுபைல்  (ஜுபைல் பாலாட்) ஐ உள்ளடக்கியது. 1975 ஆம் ஆண்டு வரை சிறிய மீன்பிடி கிராமமாகவும் புதிய தொழில்துறை பகுதியாகவும் இருந்து வந்தது. ஜுபைல் தொழிற்துறை நகரம் இன்று உலகின் மிகப்பெரிய பொதுப் பொறியியல் திட்ட நகரமாகும். 1975 ஆம் ஆண்டில், சவூதி அரசாங்கம் ஜுபைலை ஒரு புதிய தொழிற்துறை நகரத்திற்கான தளமாக நியமித்தது. புதிய தொழிற்துறை மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு மதனாத் அல் ஜுபைல் அய்னா யா (ஜூபில் தொழில்துறை நகரம்) என்று பெயரிடப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் சனத்தொகை கணக்கெடுப்பு அறிக்கை 224,430 குடியிருப்பாளர்களை மதிப்பிடுகிறது.

வரலாறு[தொகு]

அல்-ஜுபைல் நகரம் சவூதி அரேபியாவில் பாரசீக வளைகுடா கடற்கரையில் அமைந்துள்ள தொன்மையான நகரமாகும். இங்கு பாரசீக வளைகுடாவின் கரையோரத்திலும் அதன் அண்மைப் பகுதிகளில் தில்முன் மக்கள் நிறுவியதாகவும், மனித வாழ்விடம் குறைந்தது 7,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும் கருதப்படுகிறது. ஜுபைலில் 1933 ஆம் ஆண்டில் செப்டம்பரில் சவூதி அரேபியாவின் எண்ணெய் வளத்தை ஆராய்வதற்கான புவியியலாளர்கள் குழு தரையிறங்கினார்கள்.

ஜுபைல் தொழிற்துறை நகரம்[தொகு]

1975 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட உலகின் மிகப்பெரிய தொழிற்துறை நகரமாகும். 1,016 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட இந்நகரம் தொழிற்துறை வளாகங்களையும், முக்கிய துறைமுகம் மற்றும் துறைமுக வசதிகள் என்பவற்றை கொண்டுள்ளது. இந்நகர் சவுதி அரேபியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 7% வீதம் பங்களிக்கிறது.[2] பெக்டெல் 1970 ஆண்டுகளின் நடுப்பகுதியில் ஜுபைல் தொழிற்துறை நகர திட்டத்தை தொடங்கினார். ஆரம்பத்தில் இருந்து இன்று வரை ஜுபைல் திட்டத்தை நிர்வகித்து வருகிறார்.  2004 ஆம் ஆண்டில் ராயல் கமிஷன் நிறுவனம் மற்றும் யான்பு ஜுபைல் II ஐ நிர்வகிக்கிறது.

போக்குவரத்து[தொகு]

சாலை[தொகு]

ஜுபைல் இரு பெரிய நெடுஞ்சாலைகளான தெகுரான்-ஜுபைல் நெடுஞ்சாலை, அபு ஹத்ரியா நெடுஞ்சாலை ஆகியவற்றால் மற்ற நகரங்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. நடைப்பெற்று கொண்டிருக்கும் திட்டமான ஜுபைல்-காசிம் (புரைடா) அதிவேக நெடுஞ்சாலை 500 கிமீ (310 மைல்) நீளம் கொண்டதாகும்.

துறைமுகம்[தொகு]

இந்த அதிவேக நெடுஞ்சாலை ஜுபைல் மற்றும் காசிம் (புரைடா) இடையேயான தூரத்தை தற்போதைய 831 கிமீ (516 மைல்) இலிருந்து 331 கிமீ (206 மைல்) வரை குறைக்கும். ஜுபைலில் ஜுபைல் வணிக துறைமுகம் மற்றும் கிங் ஃபஹத் தொழிற் துறைமுகம் ஆகிய இரு துறைமுகங்கள் உள்ளன. 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி 44,700 தொன்கள் மொத்த சரக்கின் அடிப்படையில் ஜுபைல் உலகில் 92 வது இடத்தில் உள்ளது.[3]

விமான நிலையம்[தொகு]

இந்த நகரில் கிங் பஹாத் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. ஜுபைல் விமான நிலையம் ஜுபைல் நகரத்திற்கு மேற்கே 25 கிலோமீற்றர்  (16 மைல்) தொலைவில் உள்ளது. இது ஜுபைல் திட்டத்தின் ஒரு பகுதியாக ராயல் கமிஷன் ஆஃப் ஜுபைல் மற்றும் யான்பு ஆகியோரால் கட்டப்பட்டது.

காலநிலை[தொகு]

கோப்பனின் காலநிலை வகைப்பாட்டிற்கு அமைய சூடான பாலைவன காலநிலையை கொண்டுள்ளது.

தட்பவெப்ப நிலைத் தகவல், Jubail
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 23.0
(73.4)
26.0
(78.8)
32.0
(89.6)
34.0
(93.2)
39.0
(102.2)
44.0
(111.2)
45.0
(113)
44.0
(111.2)
43.0
(109.4)
36.0
(96.8)
27.0
(80.6)
24.0
(75.2)
34.75
(94.55)
தாழ் சராசரி °C (°F) 9.0
(48.2)
13.0
(55.4)
17.0
(62.6)
22.0
(71.6)
25.0
(77)
30.0
(86)
31.0
(87.8)
30.0
(86)
27.0
(80.6)
24.0
(75.2)
19.0
(66.2)
14.0
(57.2)
21.75
(71.15)
ஆதாரம்: Wunderground King Fahad Airport (2018)

சான்றுகள்[தொகு]

  1. "The World's Largest Industrial Areas". WorldAtlas (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  2. "Jubail Industrial City". MEED (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-05-01. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  3. "Ports & World Trade". www.aapa-ports.org. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜுபைல்&oldid=3648584" இலிருந்து மீள்விக்கப்பட்டது