ஜீவநதி (சிற்றிதழ்)
Appearance
(ஜீவநதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இதழாசிரியர் | கலாமணி பரணீதரன் |
---|---|
வகை | இலக்கியம் |
இடைவெளி | மாதம் ஒரு முறை |
முதல் வெளியீடு | ஆகத்து 5, 2007 |
நாடு | இலங்கை |
ஜீவநதி (Jeevanathy) யாழ்ப்பாணத்திலிருந்து மாதாந்தம் வெளிவரும் தமிழ் இலக்கியச் சிற்றிதழ் ஆகும்.
ஜீவநதியின் வைகாசி, 2012 இதழ் ஆத்திரேலியச் சிறப்பிதழாக வெளியிடப்பட்டுள்ளது.
முதலாவது இதழ்
[தொகு]ஆகத்து 5, 2007 அன்று ஜீவநதியின் முதலாவது இதழ் வெளியாகியது.
நடப்பிக்கை
[தொகு]ஜீவநதியின் முதன்மை ஆசிரியர் கலாமணி பரணீதரன் ஆவார். துணை ஆசிரியர் வெற்றிவேல் துசியந்தன் ஆவார்.[1] பதிப்பாசிரியர் த. கலாமணி ஆவார். ஆலோசகர்களாகத் தெணியான், கி. நடராசா ஆகியோர் உள்ளனர்.
உள்ளடக்கம்
[தொகு]சிறுகதைகள், கவிதைகள், இலக்கியக் கட்டுரைகள், நேர்காணல்கள், புதுப் புனல், கலை இலக்கிய நிகழ்வுகள், திறனாய்வுக் கட்டுரைகள், பேசும் இதயங்கள் போன்றவை இச்சஞ்சிகையில் வெளிவருகின்றன.[2]
விருதுகள்
[தொகு]- கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை இலக்கிய விருதுகள் 2012 ( ஈழத்தில் இருந்துவரும் சிறந்த சிற்றிதழ் சஞ்சிகைக்காக இந்தியாவில் பெற்றுக்கொண்டது)[3]
- இனிய மணா இலக்கிய விருது (2010, சிறந்த சிற்றிதழுக்காக இந்தியாவில் பெற்றுக்கொண்டது)[4]
ஜீவநதி வெளியீடுகள்
[தொகு]ஜீவநதி பிரசுரப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றது. ஜீவநதி வெளியீடுகளாக வெளிவந்த நூல்கள் கீழே தரப்பட்டுள்ளன.
- பாட்டுத்திறத்தாலே...
- மனதில் உறுதி வேண்டும்[5]
- நதியில் விளையாடி...
- வெறிச்சோடும் மனங்கள்[6]
- எண்ணிலாக்குணமுடையோர்[7]
- மீண்டும் துளிர்ப்போம்...[8]
- ஜீவநதி நேர்காணல்கள்
- இலக்கியமும் எதிர்காலமும்[9]
- முன்னோர் சொன்ன கதைகள்
- மொழிபெயர்க்கப்படாத மௌனங்கள்
- கவியில் உறவாடி...
- இருபாலை சேனாதிராய முதலியார் ஆக்கிய ஆக்கங்கள் சிலவற்றின் தொகுப்பு[10]
- ஜீவநதி அரங்கக் கட்டுரைகள்
- இந்த நிலம் எனது
- இருட்தேர்
- மான சஞ்சாரம்
- என் கடன்[11]
- கட்டடக்கா (கூ)ட்டு முயல்கள் சிறுகதை தொகுப்பு (வ.ந.கிரிதரன்)
இதையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ ["ஒரு சில தமிழ்க் கவிதைகளை மொழிபெயர்ப்பதற்கான முயற்சி (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2011-10-20. பார்க்கப்பட்ட நாள் 2016-03-09. ஒரு சில தமிழ்க் கவிதைகளை மொழிபெயர்ப்பதற்கான முயற்சி (ஆங்கில மொழியில்)]
- ↑ "ஜீவநதி 2008.07-08". Archived from the original on 2020-08-10. பார்க்கப்பட்ட நாள் 2016-03-09.
- ↑ விருதுகள் - 2012 தினமணி, 3rd October 2012
- ↑ விருதுகள் - 2010[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ பெண் அடிமைத் தனத்திற்கு எதிராக குரல் கொடுப்போம் [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ வெறிச்சோடும் மனங்கள்
- ↑ எண்ணிலாக்குணமுடையோர்
- ↑ மீண்டும் துளிர்ப்போம்
- ↑ கலாமணி பரணீதரனின் மீண்டும் துளிர்ப்போம்
- ↑ இருபாலை சேனாதிராய முதலியார் ஆக்கிய ஆக்கங்கள் சிலவற்றின் தொகுப்பு
- ↑ யாழ். இலக்கிய வட்டத்தின் 'என் கடன்' நூல் வெயீடும் விருது வழங்கலும்