ஜி. கே. பிள்ளை
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஜி. கே. பிள்ளை என்பவர் மலையாளத் திரைத் துறையைச் சேர்ந்தவர். இவர் திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். இவரது இயற்பெயர் கோவிந்த பிள்ளை கேஷவ பிள்ளை என்பதாகும்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]இவர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள வர்க்கலையில் பிறந்தவர். "மான்தறவீட்டில் பெரும்பாட்டத்தில் கோவிந்தபிள்ளை", ஜானகி ஆகியோர்க்கு மகனாகப் பிறந்தார்.
சினேஹசீம என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி, ஹரிஷ்சந்திரா, மந்திரவாதி, பட்டாபிஷேகம், நாயரு பிடிச்ச புலிவால், கூடப்பிறப்பு ஆகிய திரைப்படங்களில் நடித்தார். கண்ணூர் டீலக்ஸ், ஸ்தானார்த்தி சாறாம்மை, லாட்டறி டிக்கட், கோட்டயம் கொலக்கேஸ், கொச்சின் எக்ஸ்பிரஸ் யாகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்திருந்தார். மொத்தம் 327 படங்களில் நடித்திருக்கிறார்.