உள்ளடக்கத்துக்குச் செல்

ஜி. எச். ஹார்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி.எச். ஆர்டி (G. H. Hardy)
பிறப்பு(1877-02-07)7 பெப்ரவரி 1877
க்ரான்லே, சர்ரே, இங்கிலாந்து
இறப்பு1 திசம்பர் 1947(1947-12-01) (அகவை 70)
கேம்பிரிச், கேம்பிரிட்ச்சைர், இங்கிலாந்து
தேசியம்ஐக்கிய பேரரசு
துறைகணிதம்
பணியிடங்கள்திரித்துவக் கல்லூரி, கேம்பிரிச்
கல்வி கற்ற இடங்கள்கேம்பிரிச் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்ஏ.இ.எச். லவ்
ஈ.டி. விட்டேக்கர்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
மேரி கார்ட்ரைட்
சிட்னி சாப்மான்
ஐ. சே. குட்
எட்வர்ட் லின்ஃபுட்
பிராங்க் மோர்லீ
சிரில்.ஓஃப்ஃபோர்ட்
ஆரி பிட்
இரிச்சர்ட் இராடோ
சீனிவாச இராமானுசன்
இராபர்ட் அலக்சாண்டர் இராங்கின்
டானல்ட் ஃசுபென்சர்
எட்வர்ட் டிச்மார்ச்
திருக்கண்ணபுரம் விசயராகவன்
ஈ.எம். இரைட்
அறியப்படுவதுஆர்டி-வைன்பெர்க் தத்துவம்
முழு எண் பிரிவினை; ஆர்டி-இராமானுசன் தேற்றம்
இராமானுசனின் குரு
தாக்கம் 
செலுத்தியோர்
கமீல் ஜோர்டன்
பின்பற்றுவோர்சீனிவாச இராமானுசன்
விருதுகள்இராயல் சொசைட்டி உறுப்பினர்[1]

ஜி.எச். ஆர்டி (Godfrey Harold “G. H.” Hardy) (பிறப்பு: பிப்ரவரி 7, 1877; இறப்பு: திசம்பர் 1, 1947)[1][2] என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கணித வல்லுநர். அவர் எண் தேற்றம், கணிதப் பகுப்பாய்வு ஆகிய துறைகளில் சிறந்த அறிஞர்.[3][4] இவர் 1940 ஆம் ஆண்டு அவர் எழுதிய கணித அழகியல் சார்ந்த "ஒரு கணிதவியலாலரின் தன்னிலை விளக்கம்" என்ற கட்டுரைக்காக அவர் பெரிதும் மற்றவர்களால் அறியப்படுகின்றார். மேலும் 1914 ஆம் ஆண்டு அவர் இந்திய கணிதவியல் மேதையான சீனிவாச இராமானுசன் அவர்களுடன் நட்பு பூண்டு அவருக்கு வழிகாட்டியாக விளங்கினார். பால் ஏர்டோசு என்பவர் ஒரு நேர்காணலின் போது அவரிடம் கணிதத் துறைக்கு அவர் வழங்கிய மிகப்பெரிய பங்களிப்பு என்னவென்று கேட்ட போது சற்றும் தயக்கமின்றி சீனிவாச இராமானுசனைக் கண்டெடுத்ததே என்று பதிலளித்தார்.

வாழ்க்கை

[தொகு]

சி.எச். ஆர்டி இங்கிலாந்து நாட்டில் சர்ரே பகுதியில் 1877 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் நாளில் ஒரு ஆசிரியர் குடும்பத்தில் பிறந்தார்.அவரது தந்தை கிராங்லெய்க் பள்ளியில் கலை ஆசிரியராகவும் மற்றும் கருவூல அதிகாரியாகவும் இருந்தார். அவரது பெற்றோர்கள் இருவரும் கணிதத்தின் மீது வெறுப்புடயாராக இருந்தாலும் அவரிடம் இயல்பாகவே கணிதத்தின் மீது நாட்டம் இருந்தது. பள்ளி கல்விக்கு பின்னர் ஆர்டி அவரது கணித திறனுக்காக, வின்செச்டர் கல்லூரி சென்று, கல்வி கற்க உதவித்தொகை வழங்கப்பட்டது. 1896 ஆம் ஆண்டு அவர் கேம்ப்ரிட்ச் பல்கலைக்கழகத்தின் ட்ரினிட்டி கல்லூரியில் கணிதவியல் பிரிவில் சேர்ந்தார் இரண்டு ஆண்டு கல்விக்குப்பின் அவர் நான்காவது இடம் பெற்றார். பல்கலைக்கழகத்தில் பயின்ற போது ஆர்டி "கேம்பிரிட்ச் திருத்தூதர்கள்" என்று அழைக்கப்பட்ட அறிவார்ந்த கமுக்கக் குழுவில் ஒரு உறுப்பினராக இணைந்தார். 1900 ஆம் ஆண்டில் அவர் இரண்டாம் கட்ட பல்கலைக்கழக இறுதி தேர்வில் (ட்ரப்போஸ் II) தேர்ச்சியடைந்து பட்டம் பெற்றார். 1903 ஆம் ஆண்டில் அவர் அந்த காலகட்டத்தில் ஆங்கில பல்கலைக்கழகங்களில் உயர்ந்த முதுகலை பட்டத்தை பெற்றார். 1906 முதல் 1942 வரையிலான காலகட்டத்தில் அவர் பல்வேறு கல்லூரிகளில் ஆசிரியராக பணியாற்றினார். இக்காலத்தில் கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தில் அவரின் வாழ்க்கை, இராமானுசனுடனான அவரின் நட்பு முதலியவறை இடேவிட் லேவிட் என்பவர் 2007 ஆம் ஆண்டு தி இந்தியன் கிளார்க் என்ற தலைப்பில் ஒரு புதினமாக வெளியிட்டார். கணிதத்தில் பல சாதனைகள் புரிந்திருந்தாலும் அவர் சற்று கூச்சமும் மென்மையான குணமும் உடையவராவார். ஒரு சில நண்பர்களை மட்டுமே உடைய அவர் இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்தார். 1947 ஆம் ஆண்டில் அவர் மரணத்தை தழுவினார்.

கணித அழகியல் பற்றிய கட்டுரை

[தொகு]

கணிதத் துறையில் சிறப்புத் தேர்ச்சி இல்லாதோர் நடுவே, சி.எச். ஆர்டி தாம் 1940 ஆம் ஆண்டில் கணித அழகியல் பற்றி எழுதிய "ஒரு கணிதவியலாலரின் தன்னிலை விளக்கம்" (A Mathematician's Apology) என்னும் கட்டுரையின் பொருட்டு அறியப்பட்டுள்ளார். கணிதத்தில் சிறந்த அறிவு இல்லாதோரும் கூட எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட இக்கட்டுரையில், ஒரு கணித மேதையின் உள்மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி அரிய சிந்தனைகளை ஆர்டி வழங்கியுள்ளார்.

ஆர்டியும் இந்தியக் கணித மேதை இராமானுசனும்

[தொகு]

1914 ஆம் ஆண்டிலிருந்து ஆர்டி, இந்தியக் கணித மேதையான சீனிவாச இராமானுசனுக்கு ஆசானாகவும் வழிகாட்டியாகவும் விளங்கினார். அந்த இரு பேரறிஞர்களுக்கும் இடையே முகிழ்த்த நட்புறவு தனிச்சிறப்பு வாய்ந்தது.[5][6] இராமானுசனைச் சந்தித்த முதல் நாளிலியே ஆர்டி அவருடைய மிகச்சிறந்த கணித அறிவைக் கண்டு மலைத்துப்போனார். இத்தனைக்கும் இராமானுசன் கணிதத் மெய்யியல் பற்றிக் கல்விக்கூடங்களில் பயின்றதில்லை. பின்னர் ஆர்டியும் இராமானுசனும் கணித ஆய்வில் நெருங்கிய ஒத்துழைப்பாளர் ஆயினர்.

கணிதத் துறைக்கு ஆர்டியின் பெரும் பங்களிப்பு

[தொகு]

பால் ஏர்டோசு (Paul Erdős) என்பவர் ஒருமுறை ஆர்டியோடு நிகழ்த்திய நேர்காணலின்போது, கணிதத் துறைக்கு அவர் வழங்கிய மிகப்பெரிய பங்களிப்பு என்னவென்று கேட்டார். அதற்கு ஆர்டி அளித்த பதில், "இராமானுசனைக் கண்டெடுத்ததே நான் கணிதத் துறைக்கு வழங்கிய மிகப்பெரிய பங்களிப்பு" என்பதாகும். மேலும், இராமானுசனும் அவரும் கணித ஆய்வில் இணைந்து ஈடுபட்டது அவர்தம் "வாழ்வில் நிகழ்ந்த இன்பமிகு ஒரு நிகழ்ச்சி" என்று ஆர்டி கூறியுள்ளார்."[5][7]

நூற்பட்டியல்

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. 1.0 1.1 எஆசு:10.1098/rsbm.1949.0007
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  2. GRO Register of Deaths: DEC 1947 4a 204 Cambridge – Godfrey H. Hardy, aged 70
  3. O'Connor, John J.; Robertson, Edmund F., "ஜி. எச். ஹார்டி", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
  4. கணித மரபியல் திட்டத்தில் ஜி. எச். ஹார்டி
  5. 5.0 5.1 THE MAN WHO KNEW INFINITY: A Life of the Genius Ramanujan பரணிடப்பட்டது 2017-12-05 at the வந்தவழி இயந்திரம். Retrieved December 2, 2010.
  6. "20TH CENTURY MATHEMATICS – HARDY AND RAMANUJAN". பார்க்கப்பட்ட நாள் 2010-12-02.
  7. Freudenberger, Nell (16 September 2007). "Lust for Numbers". The New York Times. http://www.nytimes.com/2007/09/16/books/review/Freudenberger-t.html?pagewanted=print. பார்த்த நாள்: 2010-12-02. 

மேல் ஆய்வுக்கு

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._எச்._ஹார்டி&oldid=3812528" இலிருந்து மீள்விக்கப்பட்டது